அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு நாடுகளில் நடைபெற உள்ள ஐசிசி-யின் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது இன்று முதல் இம்மாத இறுதிவரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த தொடரின் இறுதிவரை சென்று சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்டு ஏற்கனவே நியூயார்க் சென்று கடந்த சில நாட்களாகவே பயிற்சி எடுத்து வருகிறது. அதோடு வங்கதேச அணிக்கு எதிரான நேற்றைய பயிற்சி போட்டியிலும் இந்திய அணி பங்கேற்று விளையாடியது.
அதனை தொடர்ந்து ஜூன் 5-ம் தேதி தங்களது முதல் லீக் போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ள இருக்கிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக தற்போது தீவிர வலைப்பயிற்சியில் இருந்து வரும் இந்திய அணியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரான ஷிவம் துபேவிற்கு ரோஹித் சர்மா பிரத்தியேக பந்துவீச்சு பயிற்சி அளித்துள்ளது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஏனெனில் பொதுவாகவே அணியில் புதிய பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சியாளர்கள் தான் பயிற்சி அளிப்பார்கள். ஆனால் ரோகித் சர்மா தனிப்பட்ட முறையில் ஷிவம் துபேவை அழைத்து அரை மணி நேரம் அவருக்கு பந்து வீச்சு பயிற்சியை அளித்துள்ளார்.
இதன் மூலம் ஷிவம் துபேவை வைத்து ஹார்டிக் பாண்டியாவை வெளியில் அனுப்ப ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளாரோ? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் பாண்டியா கேப்டனாக இருந்த போது ரோகித் சர்மாவை அவமதிக்கும் வகையில் பவுண்டரி லைனில் பீல்டிங்கில் நிறுத்தியது, அவரை பார்த்து தேவையில்லாமல் பேசியது என ஏகப்பட்ட விஷயங்களை பாண்டியா செய்திருந்தார்.
இதையும் படிங்க : இந்தியா சிமெண்ட்ஸ்ஸிடம் இருந்து அதானி குழுமத்திற்கு கைமாறுகிறதா சி.எஸ்.கே – உண்மை என்ன?
இதனால் அதிருப்தி அடைந்த ரோகித் சர்மா தற்போது ஷிவம் துபேவை வைத்து ஹார்டிக் பாண்டியாவை ஓரம் கட்ட நினைக்கலாம் என்றும் சில நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இருப்பினும் தற்போது துணை கேப்டனாக இருக்கும் பாண்டியாவை அவ்வளவு சீக்கிரம் யாராலும் ஒதுக்க முடியாது ஒருவேளை அவர் காயம் காரணமாக வெளியேறினால் அவரது இடத்தை துபே நிரப்ப அதிக வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.



