இன்னும் எங்க பலத்தை மொத்தமா எறக்கல.. உ.கோ ஜெயிக்க இதை செஞ்சா போதும்.. ரோஹித் பேட்டி

Rohit Sharma 2
- Advertisement -

ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை தொடர் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலகலமாக துவங்கியுள்ளது. அதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கிரிக்கெட் தங்களுடைய பயிற்சி போட்டியில் வங்கதேசத்தை 60 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. நியூயார்க் நகரில் ஜூன் ஒன்றாம் தேதி நடைபெற்ற அந்தப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா 183 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 53* (32) ஹர்டிக் பாண்டியா 40* (23) சூரியகுமார் யாதவ் 31 (18) ரன்கள் எடுத்தனர். அதைத் தொடர்ந்து சேசிங் செய்த வங்கதேசம் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 20 ஓவரில் 122/9 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. அந்த அணிக்கு முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக முகமதுல்லா 40* ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

ரோஹித் மகிழ்ச்சி:
அந்த வகையில் சிறப்பான வெற்றி கண்ட இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர். இந்த போட்டியில் சிவம் துபே மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் பந்து வீசியது இந்தியாவுக்கு பலமாக அமைந்தது. அதே போல 53 ரன்கள் குவித்த ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக விளையாடப் போவதும் உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் ரிஷப் பண்ட் பேட்டிங்கை பார்ப்பதற்காக 3வது இடத்தில் வாய்ப்பு கொடுத்ததாக கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். அத்துடன் அர்ஷ்தீப் தனது திறமையை காண்பித்ததாக பாராட்டும் அவர் இந்தியா வெற்றி பெறுவதற்கு சூழ்நிலைகளை உணர்ந்து தரமான 15 வீரர்களில் சரியான 11 பேரை தேர்வு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அனைத்தும் எப்படி சென்றது என்பதில் மகிழ்ச்சி. இப்போட்டியில் நாங்கள் என்ன விரும்பியமோ அது கிடைத்தது. புதிய மைதானத்தில் புதிய பிட்ச்சில் சூழ்நிலைகளை பயன்படுத்துவது முக்கியம். ரிஷப் பண்ட் 3வது இடத்தில் பேட்டிங் செய்யும் வாய்ப்பை கொடுத்தோம். இன்னும் நாங்கள் எங்களுடைய முழுமையான பேட்டிங் வரிசையை களமிறக்கவில்லை”

இதையும் படிங்க: இந்தியா, பாகிஸ்தான் கொஞ்சம் சந்தேகமே.. ஐசிசி டி20 உ.கோ ஃபைனல் அணிகளை கணித்த மிஸ்பா-உல்-ஹக்

“முடிந்தளவுக்கு இந்த போட்டியில் அனைத்து வீரர்களையும் களமிறக்க முயற்சித்தோம். அர்ஷ்தீப் சிங் ஆரம்பக்கட்ட ஓவர்களிலும் கடைசிக்கட்ட ஓவர்களிலும் தன்னுடைய திறமையை காண்பித்தார். அவரிடம் நல்ல திறன் இருக்கிறது. எங்களிடம் 15 நல்ல வீரர்கள் இருக்கின்றனர். எனவே நாங்கள் வெற்றி பெறுவதற்கு சூழ்நிலைகளை சரியாக உணர்ந்து அதற்குத் தகுந்த சிறந்த வீரர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement