பேசாம எல்லாரும் மதிக்கக் கூடிய தோனியை செலக்ட் பண்ணுங்க.. விராட் கோலியின் கோச் பேட்டி

- Advertisement -

சர்வதேச அரங்கில் முதன்மை அணியாக திகழும் இந்தியா அடுத்ததாக ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இந்த தொடருடன் இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவி காலம் நிறைவு பெறுகிறது. கடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கு பின் பொறுப்பேற்ற அவருடைய தலைமையில் இந்தியா இருதரப்பு தொடர்களில் அபார வெற்றிகளை பெற்றது.

ஆனால் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை போன்ற ஐசிசி தொடர்களில் இந்தியா தோல்வியையே பதிவு செய்தது. அந்த நிலையில் கடந்த 2023 உலகக் கோப்பையுடன் நிறைவு பெற்ற ராகுல் டிராவிட் பதவி காலம் 2வது முறையாக தற்காலிகமாக நீட்டிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புதிய பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை பிசிசிஐ வரவேற்றுள்ளது.

- Advertisement -

இந்தியாவின் கோச்:
சொல்லப்போனால் அந்த பதவிக்கு கொல்கத்தா அணியின் ஆலோசகராக செயல்பட்டு 2024 ஐபிஎல் கோப்பையை வெல்ல உதவிய கௌதம் கம்பீரை பிசிசிஐ அணுகியதாக செய்திகள் வெளியானது. அதே போல 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற அனுபவமிக்க சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கை இந்திய அணிக்கு கொண்டுவர தோனியின் உதவியை பிசிசிஐ நாடியதாகவும் செய்திகள் வந்தன. இந்நிலையில் ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெற்றிருக்கும் பட்சத்தில் தோனியை பயிற்சியாளராக நியமிக்கலாம் என்று விராட் கோலியின் சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார்.

துரோணாச்சாரியார் விருது வென்ற பெருமை கொண்ட அவர் இது பற்றிய சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “முதலில் இந்த பதவிக்கு யார் விண்ணப்பித்துள்ளார்கள் என்பதைப் பார்ப்பது ஆர்வமாக இருக்கும். அது யாராக இருந்தாலும் இந்தியராக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒருவேளை எம்எஸ் தோனி ஓய்வை அறிவித்திருந்தால் அவர் சிறந்த தேர்வாக இருப்பார்”

- Advertisement -

“இந்தியாவுக்காக நிறைய விளையாடிய அவர் பெரிய தொடர்களை வென்றுள்ளார். மேலும் நீண்ட காலம் விளையாடிய தோனி இந்திய அணியில் அதிகமாக மதிக்கக்கூடிய நபர். அணிக்கு திட்டமிடுவதும் அதை சரியாக நிர்வகிப்பதும் மிகவும் அவசியம். ஏனெனில் தோனி கேப்டனாக இருந்த போது சச்சின் டெண்டுல்கர், சேவாக், டிராவிட், ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே கௌதம் கம்பீர் போன்ற பெரிய வீரர்கள் இருந்தனர்”

இதையும் படிங்க: டி20 வேர்ல்டுகப் இந்திய அணியுடன் அமெரிக்கா செல்லாமல் வேறுநாட்டுக்கு பறந்த ஹார்டிக் பாண்டியா – பின்னணி என்ன?

“மேலும் யுவராஜ் சிங் போன்ற நட்சத்திர வீரர்களும் இருந்தனர். அப்படிப்பட்ட அணியை தோனி மிகவும் சிறப்பாக கையாண்டார்” என்று கூறினார். அவர் கூறுவது போல தோனி இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட வேண்டும் என்பது பல ரசிகர்களின் விருப்பமாகவும் இருக்கிறது. இருப்பினும் இன்னும் சிஎஸ்கே அணியில் அதிகாரப்பூர்வமாக ஓய்வை அறிவிக்காத அவர் அந்த பதவியை ஏற்பாரா என்பது சந்தேகமாகும்.

Advertisement