2008லயே எனக்குத் தெரியும்.. அந்த உள்ளுணர்வு சொல்லுச்சு.. ஆர்சிபி அணியை வாழ்த்திய பற்றி விஜய் மல்லையா

Vijay Mallaya.jpeg
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஐபிஎல் 2008இல் துவங்கப்பட்டது முதல் முக்கிய நேரங்களில் சொதப்புவதை வழக்கமாக வைத்துள்ள அந்த அணி இந்த வருடமும் முதல் 7 போட்டிகளில் 6 தோல்வியை பதிவு செய்தது. ஆனால் அதன் பின் தொடர்ச்சியாக கடைசி 6 போட்டிகளில் வென்ற பெங்களூரு 4வது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

குறிப்பாக கடைசி லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னையை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பெங்களூரு அற்புதமான கம்பேக் கொடுத்தது. அதனால் மகளிரணியை போல ஆடவர் அணியும் இந்த வருடம் ஐபிஎல் கோப்பையை வெல்லும் என்ற உறுதியான நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணியை பெங்களூரு எதிர்கொள்கிறது.

- Advertisement -

வாழ்த்திய மல்லையா:
அதில் கடைசி 5 போட்டிகளில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் சுமாரான ஃபார்மில் இருக்கும் ராஜஸ்தானை நல்ல ஃபார்மில் உள்ள பெங்களூரு வீழ்த்தும் என்று ஆர்சிபி ரசிகர்கள் நம்புகின்றனர். இந்நிலையில் எலிமினேட்டரில் விளையாடும் பெங்களூரு அணிக்கு முன்னாள் உரிமையாளர் விஜய் மல்லையா வாழ்த்து தெரிவித்துள்ளார். குறிப்பாக 2008 ஏலத்தில் வாங்கிய போதே விராட் கோலி ஆர்சிபி அணிக்காக அசத்துவார் என்று தம்முடைய உள்ளுணர்வு தெரிவித்ததாக அவர் கூறியுள்ளார்.

அந்த வகையில் இந்த வருடம் ஆர்சிபி கோப்பையை வெல்லும் என்று தம்முடைய உள்ளுணர்வு சொல்வதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “நான் ஆர்சிபி உரிமையையும் விராட் கோலியையும் ஏலத்தில் எடுத்த போது இதை விட சிறந்தவற்றை தேர்வு செய்திருக்க முடியாது என்று என் உணர்வு என்னிடம் கூறியது. தற்போது ஐபிஎல் கோப்பையை வெல்வதற்கு ஆர்சிபி அணிக்கு சிறந்த வாய்ப்புள்ளதாக என்னுடைய உள்ளுணர்வு சொல்கிறது”

- Advertisement -

“அதற்காக முன்னோக்கி மேல்நோக்கி செல்லுங்கள். அதற்கான சிறந்த அதிர்ஷ்டம் கிடைக்கட்டும்” என்று கூறியுள்ளார். முன்னதாக 2008இல் ஆர்சிபி அணியை வாங்கிய பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா ஆரம்பக்கட்ட ஐபிஎல் போட்டிகளில் நேரடியாக மைதானத்திற்கு வந்து ஆதரவு கொடுப்பது வழக்கமாகும். ஆனால் ஒரு கட்டத்தில் அவருடைய தொழில்களில் நஷ்டம் ஏற்பட்டது.

இதையும் படிங்க: கொல்கத்தா அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் இதுதான்.. ஆனாலும் எங்களுக்கு சேன்ஸ் இருக்கு – பேட் கம்மின்ஸ் பேட்டி

அப்போது வங்கிகளில் வாங்கிய சுமார் 9000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாத அவர் 2016ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். அந்த வகையில் கடனை திருப்பி அடைக்காமலேயே இங்கிலாந்துக்கு சென்ற அவர் தற்போது ட்விட்டரில் மட்டும் அவ்வப்போது இப்படி பதிவிடுவது வழக்கமாகும். அப்போதெல்லாம் எப்போது மக்களின் பணத்தை திருப்பிக் கொடுப்பீர்கள் என்று இந்திய ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்புவதும் வழக்கமாகும்.

Advertisement