Virat Kohli : இதனால் தான் நாங்கள் நம்பர் 1 அணியாக இருக்கிறோம் – கோலி பெருமிதம்

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின

Kohli
- Advertisement -

உலக கோப்பை தொடரின் 34ஆவது போட்டி நேற்று நடந்தது. இந்த போட்டியில் விராட்கோலி தலைமையிலான இந்திய அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் மோதின.

ind vs wi

- Advertisement -

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 268 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி 72 ரன்களை குவித்தார். தோனி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 56 ரன்களை குவித்தார்.

பின்னர் 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 34.2 ஓவர்களில் 143 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் மூலம் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஷமி சிறப்பாக பந்து வீசி 16 ரன்களை விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பும்ரா மற்றும் சாஹல் ஆகியோர் 2 விக்கெட் வீழ்த்தினர்.

Rohith

போட்டி முடிந்து பேசிய ஆட்டநாயகன் விராட் கோலி கூறியதாவது : நாங்கள் நம்பர் ஒன் அணியாக இருப்பதற்கு உண்மையான காரணம் நாங்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவது. இந்த பாதையை நாங்கள் தொடர விரும்புகிறோம். கடந்த இரண்டு கட்டங்களாக பந்துவீச்சில் தான் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம். இது முக்கியமான ஒன்றாகும் போட்டியில் எனது பங்களிப்பு திருப்தி அளிக்கிறது.

Kohli

நேற்றைய போட்டியில் 150 ரன்களுக்கு 4 விக்கெட் விழுந்த போது270 ரன்கள் வரை கடைசி நேரத்தில் தோனி மற்றும் பாண்டி ஆகியோர் சிறப்பாக கொண்டுவந்தனர். இதுபோன்ற மைதானங்களில் 270 ரன்கள் குவிப்பது என்பது சாதாரணமான விடயம் கிடையாது. இந்திய அணி விளையாடிய விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. நான் பவுண்டரிகளை அடிப்பதுடன் ஒன்று இரண்டு என்று அடிப்பதே சிறப்பானது என்று நினைக்கிறேன்.

Advertisement