இந்தியாவுக்கு வாய்ப்பில்லை ராசா.. 2024 டி20 உ.கோ செமி ஃபைனல் செல்லும் 4 அணிகளை கணித்த மைக்கேல் வாகன்

Micheal Vaughan
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் கோலாகலமாக துவங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விளையாடுவதற்காக உலகின் பல்வேறு நாடுகள் தங்களுடைய 15 பேர் கொண்ட அணிகளை வெளியிட்டுள்ளன. அந்த வகையில் 17 வருடங்கள் கழித்து இந்த டி20 உலகக் கோப்பையை வெல்வதற்காக ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அணியில் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஜஸ்ப்ரித் பும்ரா, ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன் போன்ற தரமான வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். எனவே 2007க்குப்பின் 17 வருடங்கள் கழித்து இம்முறை எப்படியாவது டி20 உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்று லட்சியத்துடன் இந்தியா விளையாட உள்ளது.

- Advertisement -

மைக்கேல் வாகன் கணிப்பு:
இந்நிலையில் இந்த உலகக் கோப்பையில் செமி ஃபைனலுக்கு தகுதி பெறப்போகும் 4 அணிகளை பற்றி முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் கணித்துள்ளார். அதில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் அணியாக இருக்கும் இந்தியாவை தேர்வு செய்யாத அவர் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தென்னாப்பிரிக்கா மற்றும் தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகளை தேர்வு செய்துள்ளார்.

அதை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “நீங்கள் வெற்றி பெறுவோம் என்று கணித்தால் தான் நாங்கள் தோல்வியை சந்தித்து விடுவோம்” என்பதால் இந்தப் பட்டியலில் எங்களை தேர்வு செய்யாததற்கு நன்றி என்று அவரை கலாய்த்து வருகின்றனர். ஏனெனில் கடந்த காலங்களில் நீங்கள் வெல்வீர்கள் என்று மைக்கேல் வாகன் கணித்த போட்டிகளில் இந்தியா தோல்விகளை சந்தித்தது. குறிப்பாக 36க்கு ஆல் அவுட்டான பின் ஆஸ்திரேலியாவிடம் 4 – 0 என்ற கணக்கில் இந்தியா தோற்கும் என்று அவர் கணித்தார்.

- Advertisement -

ஆனால் கடைசியில் 2 – 1 (4) என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வென்று சாதனை படைத்தது. அது போக 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலகக்கோப்பை ஃபைனல்களில் தோல்வியை சந்தித்த இந்தியா 2013க்குப்பின் ஐசிசி கோப்பையை வெல்லவில்லை என்பது உண்மை தான்.

இதையும் படிங்க: இரண்டாவது முறையாக விதியை மீறிய ஹார்டிக் பாண்டியா.. ஒட்டுமொத்த அணிக்கும் தண்டனை விதிப்பு – விவரம் இதோ

ஆனால் அதே காலகட்டங்களில் 95% ஐசிசி தொடர்களில் உலகின் மற்ற அணிகளை காட்டிலும் இந்தியா மிகவும் எளிதாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றிருக்கிறது. அந்த வரிசையில் 2024 டி20 உலகக் கோப்பையிலும் இந்தியா குறைந்தபட்சம் செமி ஃபைனல் தகுதி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதாக அவருக்கு ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Advertisement