WI vs PAK : டி 20 போட்டியை விட குறைவான நேரத்தில் முடிந்த பாகிஸ்தான் ஒருநாள் போட்டி – விவரம் இதோ

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ்

WI-vsPAK
- Advertisement -

உலககோப்பை தொடரின் இரண்டாவது போட்டியான இன்று சர்பிராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணியும், ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணியும் இன்று ட்ரெண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் மோதின.

pak

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சினை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 21.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 105 ரன்களை மட்டுமே அடித்தது. அதிகபட்சமாக பக்கர் சமான் 22 ரன்களும், பாபர் அசாம் 22 ரன்களையும் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் தாமஸ் சிறப்பாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பிறகு 106 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 13.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 108 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக கெயில் 50 ரன்களை அடித்தார்.

gayle

இந்த போட்டி டி20 போட்டியை விட குறைவான நேரத்தில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. ஏனெனில் இரு அணிகளும் சேர்ந்து மொத்தம் 35.2 ஓவர்களே இந்த போட்டியில் ஆடியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் பலமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் போட்டியிலே பாகிஸ்தான் அணியை ஊதித்தள்ளியது.

Advertisement