கில் வேண்டாம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் ரோஹித்துடன் அவரை ஓப்பனிங் இறக்குங்க.. கிரண் மோர் கருத்து

Kiran More
- Advertisement -

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெற உள்ள இந்த தொடரில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் காயத்தால் விலகியுள்ள நிலையில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடியிருந்த அவர்கள் ஒரு வழியாக தற்போது 14 மாதங்கள் கழித்து இந்த டி20 தொடரில் விளையாட உள்ளனர். இருப்பினும் சமீபத்திய ஆஸ்திரேலிய மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் ரிங்கு சிங் போன்ற நிறைய இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்று சிறப்பாக விளையாடி தங்களுடைய திறமையை நிரூபித்தார்கள்.

- Advertisement -

ஓப்பனிங் ஜோடி:
இருப்பினும் தற்போது சீனியர்கள் திரும்பியுள்ளதால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகமாகவே பார்க்கப்படுகிறது. எனவே 2023 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் இந்த தொடரிலும் துவக்க வீரர்களாக களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.

இந்நிலையில் இந்த தொடரில் சுப்மன் கில்லுக்கு பதிலாக ரோகித் சர்மாவுடன் யசஸ்வி ஜெய்ஸ்வால் துவக்க வீரராக களமிறங்கலாம் என்று முன்னாள் விக்கெட் கீப்பர் கிரண் மோர் தெரிவித்துள்ளார். இது பற்றி ஸ்போர்ட்ஸ் 18 சேனலில் அவர் பேசியது பின்வருமாறு. “என்னை பொறுத்த வரை ஜெயஸ்வால் விளையாட வேண்டும். ஏனெனில் அவர் விளையாடினால் உங்களுக்கு இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் ஓப்பனிங் ஜோடியாக கிடைப்பார்கள்”

- Advertisement -

“சமீபத்திய போட்டிகளில் ஜெய்ஸ்வால் செயல்பாடுகள் அபாரமாக இருந்தது. குறிப்பாக முதல் பந்திலிருந்தே பவுண்டரி மற்றும் சிக்ஸர்களை அடிக்கும் அவரிடம் டி20 கிரிக்கெட்டுக்கு தேவையான ஆக்ரோஷம் இருக்கிறது. மறுபுறம் சுப்மன் கில் நல்ல வீரராக இருக்கிறார். ஆனால் டி20 கிரிக்கெட்டில் நான் எப்போதும் இடது – வலது கை பேட்ஸ்மேன்கள் கலவையாக விளையாடுவதை தேர்வு செய்தேன்”

இதையும் படிங்க: 6 மாசத்துக்கு ஒருமுறை அப்டேட்ல இருக்கும் அவரிடம் இங்கிலாந்து எச்சரிகையா இருக்கனும்.. பனேசர் அறிவுரை

“மிடில் ஆர்டரில் ரிங்கு சிங் மற்றும் திலக் வர்மா ஆகிய இருவருமே விளையாட வேண்டும். ரிங்கு போலவே திலக் வர்மாவும் 360 டிகிரியில் அடிக்கக் கூடியவர். நாம் வருங்காலத்தை கருத்தில் கொண்டு அந்த இருவருக்குமே தொடர்ச்சியான வாய்ப்புகளை கொடுக்க வேண்டும். மேலும் கடந்த தொடரில் அசத்திய அர்ஷிதீப் சிங் இடது கை பவுலராக இருக்கிறார். இப்போதும் முன்னேற்றத்தை சந்தித்து வரும் அவரைப் போன்ற இடது கை பவுலர்கள் போட்டியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று நான் நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement