முதல் டி20ல அந்த தப்பை செய்யலனா ஜெய்ச்சுருப்போம்.. அவரை நாங்க அடக்கனும்.. ஜோஸ் இங்லிஷ் பேட்டி

Josh Inglis 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் வலுவான இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் இறுதி போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. அதை தொடர்ந்து மீண்டும் இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோற்றது.

உலகக் கோப்பையை வென்ற அந்த அணிக்கு இந்த தோல்வி சிறிய தூசியாக கூட இருக்காது என்றே சொல்லலாம். இருப்பினும் 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இத்தொடரில் அடுத்து வரும் போட்டிகளில் வென்று மீண்டும் இந்தியாவை சாய்ப்பதற்கு ஆஸ்திரேலியா போராட உள்ளது. முன்னதாக விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியாவுக்கு ஜோஸ் இங்லீஷ் 110 ரன்கள் விளாசி 208/3 ரன்கள் குவிப்பதற்கு உதவினார்.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் தவறு:
குறிப்பாக 47 பந்துகளில் 100 ரன்கள் தொட்ட அவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக அதிவேகமாக சதமடித்த ஆஸ்திரேலிய வீரராக சாதனை படைத்தார். இருப்பினும் சூரியகுமார் யாதவ் 80, இஷான் கிசான் 58, ரிங்கு சிங் 22* ரன்கள் எடுத்த உதவியுடன் ஆஸ்திரேலிய பவுலர்களை பந்தாடிய இந்தியா கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் முதல் போட்டியில் 12 ஒயிட் பந்துகளை வீசியதே தங்களுடைய தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்ததாக ஜோஸ் இங்லிஷ் தெரிவித்துள்ளார். மேலும் எப்படி போட்டாலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யதாவை அடுத்து வரும் போட்டிகளில் விரைவாக அவுட்டாக்க வேண்டும் என்றும் தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அதிகமாக ஓய்ட் பந்துகளை வீசுவது வெற்றிக்கான அடிப்படை கிடையாது”

- Advertisement -

“ஆனால் சூரியகுமார் பந்து வீசுவதற்கு மிகவும் கடினமானவர் என்று நினைக்கிறேன். வெள்ளைக் கோட்டுக்குள் அதிகமாக நகரும் அவர் எங்கள் பவுலர்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போட்டார். எனவே அடுத்து வரும் போட்டிகளில் நாங்கள் இதை சரி செய்ய வேண்டும். சூரியகுமார் இப்படி தொடர்ந்து சிறப்பான இன்னிங்ஸ் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்”

இதையும் படிங்க: பேசாம குட் பை சொல்லிட்டு கிளம்புங்க.. ரோஹித், விராட் தேர்வில் பாண்டியாவுக்கு சோயப் அக்தர் அட்வைஸ்

“அவருடன் சேர்ந்து இசான் கிசான் அசத்தியதால் எங்களுக்கு வெற்றி எளிதாகவில்லை. ஒருவேளை ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்திருந்தால் போட்டி மாறியிருக்கலாம். இருப்பினும் அது நல்ல போட்டியாக அமைந்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இந்த தொடரின் முக்கியமான 2வது போட்டி நவம்பர் 26ஆம் தேதி கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement