பரபரப்பாக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 12வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இதர போட்டிகளை விட ஆசிய கண்டத்தின் பரம எதிரிகளான இவ்விரு அணிகள் மோதும் போட்டிக்கு அனைவரிடமும் அதிகப்படியான எதிர்பார்ப்பு இருந்தது என்றே சொல்லலாம்.
அதில் உலகக்கோப்பையில் முதல் முறையாக இந்தியாவை தோற்கடித்து காலம் காலமாக சந்தித்து வரும் தொடர் தோல்விகளை நிறுத்தும் முனைத்துடன் பாகிஸ்தான் களமிறங்கியது. மறுபுறம் சமீபத்திய ஆசிய கோப்பையில் அடித்து நொறுக்கியதைப் போல இம்முறை சொந்த மண்ணில் பாகிஸ்தானை 8வது முறையாக உலக கோப்பையில் தோற்கடித்து கௌரவத்தை காப்பாற்றும் லட்சியத்துடன் இந்தியா எதிர்கொண்டது.
அக்தர் விமர்சனம்:
அதனாலேயே மைதானம் நிரம்பி வழியும் அளவுக்கு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்களுக்கு முன்னிலையில் துவங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அத்துடன் இந்திய அணியில் இஷான் கிஷனுக்கு பதிலாக சுப்மன் கில் தேர்வு செய்யப்படுவதாகவும் ரோகித் சர்மா அறிவித்தார்.
இந்நிலையில் இப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை பெற்றும் இந்தியா முதலில் பேட்டிங் செய்யாமல் அதைத் தவற விட்டு விட்டதாக சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். குறிப்பாக அகமதாபாத் மைதானம் பேட்டிங்க்கு சாதகமாக இருப்பதால் அந்த வாய்ப்பை பெற்றும் ஆரம்பத்திலேயே பாகிஸ்தானுக்கு கொடுத்ததாக ரோகித் சர்மாவின் முடிவை விமர்சிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியது பின்வருமாறு.
“ரோஹித் சர்மா டாஸ் வென்றார். மேலும் ஸ்பின்னர் விளையாடவில்லை. ஆனால் பிட்ச் பேட்டிங்க்கு மிகவும் சிறப்பாக இருக்கிறது. அந்த சூழ்நிலையில் டாஸ் வென்று முதலில் ஏன் அவர் பாகிஸ்தானுக்கு பேட்டிங்கவு கொடுத்தார் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இருப்பினும் அந்த வாய்ப்பு பாகிஸ்தானுக்கு கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அதை பயன்படுத்தி பாகிஸ்தானும் தற்போது சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளது”
இதையும் படிங்க: ஜோடியாக திட்டம் போட்ட கோலி – ரோஹித், அசத்திய சிராஜ்.. மந்திரம் போட்டு மேஜிக் செய்த பாண்டியா
“இருப்பினும் இந்தியாவின் இந்த முடிவை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. டாஸ் வென்றும் அவர்கள் பாகிஸ்தானை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது விவேகமான முடிவு என்று எனக்கு தோன்றவில்லை. ஏனெனில் பிட்ச் சிறப்பாக இருக்கிறது. அதனால் அவர்கள் பாகிஸ்தான் பெரிய ரன்கள் எடுக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளார்கள். என்னுடைய பார்வையில் இது தவறான முடிவாகவே பார்க்கிறேன். என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள்” என்று கூறினார்



