KKR vs MI : மீண்டும் ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்த ஹார்டிக் பாண்டியா – வீடியோ

ஐ.பி.எல் தொடரின் 47 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரோஹித் சர்மா தலைமை

Hardik-Pandya
- Advertisement -

நேற்றைய போட்டியில் பிரமாண்ட இலக்கை எதிர்த்து ஆடிய மும்பை அணியின் வீரரான ஹார்டிக் பாண்டியா அதிரடியாக ஆடினார். மொத்தம் 34 பந்துகளை எதிர்கொண்ட பாண்டியா 9 சிக்ஸர்களை விளாசினார். அதில் தோனி கண்டெடுத்த ஷாட்டான ஹெலிகாப்டர் ஷாட்டை பாண்டியா தொடர்ந்து அடித்தவாறே இருந்தார். இதோ அந்த வீடியோ :

- Advertisement -

ஐ.பி.எல் தொடரின் 47 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா மைதானத்தில் இரவு 8 மணிக்கு நடந்தது. இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியும், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணியும் மோதின.

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்துவீச்சினை தேர்வு செய்தது மும்பை அணி. அதன்படி முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்களை குவித்தது. கொல்கத்தா அணி வீரர்கள் அனைவரும் நேற்று மாத்தி மாத்தி அடித்து துவைத்தனர். கில் 45 பந்துகளில் 76 ரன்களையும், லின் 29 பந்துகளில் 54 ரன்களையும், ரசல் 40 பந்துகளில் 80 ரன்களையும் அடித்தனர்.

பின்னர் 233 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி துவக்கத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் வந்த ஹார்டிக் பாண்டியா 34 பந்துகளில் 91 ரன்களை குவித்து மிரட்டினார். இருப்பினும் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களை அடித்தார். அதனால் கொல்கத்தா அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement