ஐபிஎல் 2023 : அடுத்த சீசனில் கோப்பையை வெல்லுமா லக்னோ – தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல் இதோ

- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் 5000+ கோடி செலவில் புதிதாக உருவாக்கப்பட்ட 2 அணிகளில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத ஹர்திக் பாண்டியா தலைமையில் அசத்திய குஜராத் முதல் வருடத்திலேயே கோப்பையை தட்டிச் சென்றது. அதைவிட 7000+ கோடி என்ற பிரம்மாண்ட தொகையில் உருவாக்கப்பட்டு 17 கோடிக்கு கேப்டனாக வாங்கப்பட்டு கேஎல் ராகுல் தலைமையில் களமிறங்கிய லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் இடையிடையே தடுமாறினாலும் புள்ளி பட்டியலில் 3-வது இடத்தைப் பிடித்து ப்ளே ஆப் சுற்றுக்கு தடுமாறாமல் சென்றது. ஆனால் பெங்களூருவுக்கு எதிரான எலிமினேட்டரில் ஒருசில முக்கிய கேட்ச்களை தவற விட்ட அந்த அணி முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்லும் பொன்னான வாய்ப்பை தவற விட்டு நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.

LSG vs GT Preview

- Advertisement -

இருப்பினும் வெற்றிகரமான ஐபிஎல் அணிகளான மும்பை, சென்னையை காட்டிலும் முதல் வருடத்திலேயே பிளே ஆப் சுற்று வரை சென்றது அந்த அணியை பொறுத்தவரை நல்ல சாதனையாகும். இந்த வருடம் கடைசி நேரத்தில் சொதப்பிய பாடங்களை மனதில் வைத்து அடுத்த வருடம் இதைவிட மிகச்சிறப்பாக செயல்பட்டு 2-வது முயற்சியில் கோப்பையை வெல்ல போராட தயாராகியுள்ளது. அதற்காக அந்த அணி நிர்வாகம் தக்கவைக்க வேண்டிய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

1. கேஎல் ராகுல்: ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் அதிக தொகைக்கு விளையாடிய வீரர் என்ற விராட் கோலியின் சாதனையை சமன் செய்து 17 கோடிக்கு கேப்டனாக செயல்பட்ட கேஎல் ராகுல் வழக்கம்போல பேட்டிங்கில் அட்டகாசமாக 15 இன்னிங்சில் 4 அரைசதங்கள் 2 சதங்கள் உட்பட 616 ரன்களை 51.33 என்ற நல்ல சராசரியில் எடுத்து ரன் மழை பொழிந்தார்.

KL Rahul 103

அதேபோல் கேப்டனாகவும் பெரும்பாலான போட்டிகளில் அசத்திய இவரின் ஒரே குறையாக 135.38 என்ற ஸ்ட்ரைக் ரேட் மட்டும் அமைந்தது. இருப்பினும் கூட முடிந்த அளவுக்கு மிகச் சிறப்பாக செயல்பட்ட இவர் நிச்சயம் அடுத்த வருடம் அந்த அணியை வழிநடத்த தகுதியானவராக உள்ளார்.

- Advertisement -

2. குயின்டன் டீ காக்: தவறுதலாக மும்பை கோட்டைவிட்ட இவரை 6.75 கோடிக்கு லக்னோ வாங்கிய நிலையில் 15 போட்டிகளில் 508 ரன்களை 148.97 என்ற சூப்பரான ஸ்டிரைக் ரேட்டில் தெறிக்கவிட்ட இவர் கேஎல் ராகுலுடன் இணைந்து டாப் ஆர்டரை வலுவாக வைத்திருந்தார்.

Quinton De Kock KL Rahul 2

அதிலும் கொல்கத்தாவுக்கு எதிராக 140* ரன்களை குவித்து ராகுலுடன் 210 ரன்கள் வரலாற்று பார்ட்னர்ஷிப் அமைத்த இவரை எந்தவித யோசனையுமின்றி அடுத்த வருடத்திற்கு மீண்டும் லக்னோ தக்க வைக்கலாம்.

- Advertisement -

3. தீபக் ஹூடா: உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி சமீபத்தில் இந்தியாவிற்காக விளையாடும் அளவுக்கு உயர்ந்த இவர் 5.75 கோடிக்கு 15 போட்டிகளில் 4 அரைசதங்கள் உட்பட 451 ரன்களை 32.21 என்ற நல்ல சராசரியில் எடுத்து சிறப்பாக செயல்பட்டார்.

hooda

இளம் வீரராக இருந்தாலும் அந்த அணியின் மிடில் ஆர்டரை பெரும்பாலான போட்டிகளில் தாங்கிப் பிடித்த இவரை அடுத்த வருடம் மட்டுமல்லாது வருங்காலத்தை கருத்தில் கொண்டு தயக்கமின்றி லக்னோ நிர்வாகம் தக்க வைக்கலாம்.

- Advertisement -

4. அவேஷ் கான்: இளம் வீரரான இவர் இந்த வருடம் 10 கோடிக்கு வாங்கப்பட்டது ஆச்சரியமாக அமைந்தாலும் 13 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை 8.73 என்ற எக்கனாமியில் எடுத்து முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டார்.

Avesh Khan LSG vs GT

தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை எடுக்கக்கூடிய பவுலராக இருக்கும் இவரை அந்த அணி நிர்வாகம் மீண்டும் தக்க வைத்து முழு வாய்ப்பையும் தாராளமாக வழங்கலாம்.

5. மோசின் கான்: இந்த வருடம் உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரர்களைப் போல் இவரும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்ட இவர் அறிமுக தொடரிலேயே 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை 5.97 என்ற கைதட்டி பாராட்டு எகனாமியில் எடுத்து அற்புதமாக பந்து வீசினார்.

Andre Russell Mosin Khanjpeg

அதனாலேயே பல முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை அள்ளிய இவரை அடுத்த வருடம் சற்று அதிக தொகை கொடுத்து தக்க வைத்தாலும் அதற்கு அவர் தகுதியானவராக உள்ளார்.

6. க்ருனால் பாண்டியா: கடந்த வருடங்களில் மும்பையில் அசத்திய இவர் இந்த வருடம் 8.25 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட நிலையில் 13 இன்னிங்சில் 183 ரன்களை 20.33 என்ற சராசரியிலும் 12 இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை 6.97 என்ற எக்கனாமியிலும் எடுத்து ஓரளவு சிறப்பாகவே செயல்பட்டார். அந்த அணிக்கு ஒரு சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டராக அசத்திய இவரையும் மீண்டும் தக்க வைப்பது சரியானதாக அமையும்.

Ravi Bisnoi

சந்தேக பட்டியல்:
1. ரவி பிஸ்னோய்: கடந்த வருடங்களில் பஞ்சாப் அணிக்காக அசத்தியதால் 4 கோடிக்கு தக்க வைக்கபட்ட இவர் 14 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை 8.44 என்ற எக்கனாமியில் எடுத்து சுமாராகவே செயல்பட்டார்.

இருப்பினும் இளம் வீரராக இருக்கும் இவர் தைரியமான லெக் ஸ்பின் பவுலராக இருப்பதால் அடுத்த வருடம் சற்று குறைவான தொகைக்கு தக்க வைக்கலாம்.

Virat Kohli Golden Duck

2. துஷ்மந்தா சமீரா: இலங்கையைச் சேர்ந்த இவர் இந்த வருடம் முதல் முறையாக அறிமுகமான ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக 2 கோடிக்கு களமிறங்கி 12 போட்டிகளில் 9 விக்கெட்டுகளை 8.73 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்தார். இவரையும் அடுத்த வருடம் இதுபோன்ற அதிகமில்லாத தொகையில் தக்கவைத்து வாய்ப்பளித்து பார்க்கலாம்.

Advertisement