ஐபிஎல் 2023 சீசனில் சாதிக்குமா டெல்லி – அதற்காக தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியல் – லிஸ்ட் இதோ

DC vs PBKS 2
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் முதல் முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் ப்ளே ஆப் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் மீண்டும் வெளியேறியது. கடந்த 2008 முதல் சேவாக், கம்பீர் ஆகியோர் தலைமையில் ஆகியோர் தலைமையில் நாக் அவுட் சுற்றை தொடுவதற்கே பெரும்பாலும் தடுமாறிய அந்த அணி கடந்த 2019இல் பெயரை மாற்றி ஷ்ரேயஸ் ஐயர் தலைமையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு பிளே ஆஃப் சுற்று வரை சென்று தோற்றாலும் 2020இல் வரலாற்றில் முதல் முறையாக பைனல் வரை சென்று அசத்தியது.

அதன்பின் அவரை கழற்றிவிட்டு ரிஷப் பண்ட் தலைமையில் 2021இல் ப்ளே ஆப் சுற்றுக்கு சென்ற நிலையில் இந்த வருடம் கடைசி போட்டியில் மும்பையிடம் தோல்வியடைந்து அந்த உயரத்தையும் எட்ட முடியாமல் வெளியேறியது. வழக்கம்போல இந்த வருடமும் ஆரம்பம் முதலே சீரான வெற்றிகளை பதிவு செய்யாமல் தடுமாறிய அந்த அணிக்கு பெரும்பாலான வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட தவறினாலும் ஒரு சில வீரர்கள் அபாரமாக செயல்பட்டனர். எனவே அந்த வீரர்களை தக்க வைத்து அடுத்த வருடம் மீண்டும் கோப்பையை வெல்வதற்கு அந்த அணி போராட தயாராகியுள்ள நிலைமையில் அவர்களைப் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. ரிஷப் பண்ட்: 16 கோடிக்கு கேப்டனாக தக்க வைக்கப்பட்ட இவர் 14 போட்டிகளில் 340 ரன்களை 151.79 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தாலும் சுமாராகவே செயல்பட்டார். அதேபோல் கேப்டனாகவும் தடுமாற்றமாக செயல்பட்ட இவர் இளம் வீரராக இருப்பதுடன் சமீப காலங்களில் நிறைய முன்னேற்றங்களை கண்டு வருகிறார்.

அத்துடன் இதர வீரர்கள் சுமாராக செயல்பட்டதே தோல்விக்கு காரணமாக அமைந்ததாக பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் இவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தார். எனவே இவரை நம்பி தக்க வைத்துள்ள டெல்லி நிர்வாகம் அடுத்த வருடமும் சந்தேகமின்றி கேப்டனாக தக்கவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

2. டேவிட் வார்னர்: கடந்த பல வருடங்களாக ஹைதராபாத் அணிக்கு அசத்திய இவர் கடந்த வருடம் தடுமாறியதால் அந்த அணி நிர்வாகம் அவமானப்படுத்தி கழற்றி விட்டது. இருப்பினும் ஆஸ்திரேலியா வென்ற 2021 டி20 உலக கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்று ஃபார்முக்கு திரும்பிய இவர் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் பங்கேற்கவில்லை.

ஆனாலும் 12 இன்னிங்ஸ்சில் 432 ரன்களை 48.00 சிறப்பான சராசரியில் 150.52 என்ற அதிரடியான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்து தன்னை 6.25 கோடிக்கு வாங்கிய டெல்லியின் நம்பிக்கைக்கு பாத்திரமாக சிறப்பாக செயல்பட்டார். ஓப்பனிங்கில் அதிரடியாக ரன்களை குவிக்கக்கூடிய இவரை டெல்லி தயங்காமல் தக்கவைக்க வேண்டும்.

- Advertisement -

3. குல்தீப் யாதவ்: ஒரு கட்டத்தில் கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து இந்தியாவுக்காக 3 வகையான கிரிக்கெட்டிலும் அசத்திய இவர் 2019இல் மோசமான பார்ம் மற்றும் காயத்தால் கழற்றி விடப்பட்டார். இருப்பினும் இம்முறை 2 கோடிக்கு தன்னை வாங்கிய டெல்லிக்கு 14 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை எடுத்து அட்டகாசமாக செயல்பட்ட இவர் 4 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அசத்தினார்.

அத்துடன் தனக்கு கொடுமைகளைச் செய்த கொல்கத்தாவுக்கு எதிராக 2 போட்டிகளிலும் பழிவாங்கி 2 ஆட்ட நாயகன் விருதுகளை வென்று அசத்திய இவர் இந்திய அணியிலும் மீண்டும் வலுவான இடத்தைப் பிடித்துள்ளார். எனவே பழைய ஃபார்முக்கு திரும்பியுள்ள இவரை டெல்லி கண்டிப்பாக தக்க வைக்க வேண்டும்.

- Advertisement -

4. கலீல் அஹமத்: கடந்த வருடங்களில் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய இவர் இந்த வருடம் 5.25 கோடி என்ற பெரிய தொகைக்கு பங்கேற்ற 10 போட்டிகளில் 16 விக்கெட்களை 8.04 என்ற சிறப்பான எக்கனாமிகயில் எடுத்து அசத்தினார்.

இவரின் கேரியரில் இது தான் சிறந்த எக்கனாமியாகும். எனவே அன்றிச் நோர்ட்ஜெ போன்ற வெளிநாட்டு பவுலர் காயத்தால் சொதப்பிய நிலையில் இவரை தக்க வைத்தால் நன்றாக இருக்கும்.

5. பிரிதிவி ஷா: இந்த வருடம் டேவிட் வார்னரின் அதிரடியான ஓபனிங் பார்ட்னராக களமிறங்கி அசத்திய இவர் 10 இன்னிங்சில் 283 ரன்களை 152.87 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் வெளுத்து வாங்கினார். இடையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இவர் டெல்லியின் நல்ல இளம் தொடக்க வீரராக இருப்பதால் தாராளமாக தக்க வைக்கலாம்.

6. ரோவ்மன் போவல்: 2.80 கோடிக்கு வாங்கப்பட்டு முழு வாய்ப்பை பெற்ற இவர் 14 போட்டிகளில் 250 ரன்களை 149.70 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார். ஆரம்பத்தில் தடுமாறிய இவர் பாதிக்கும் மேல் அற்புதமாக பேட்டிங் செய்து டெல்லியின் பினிஷராக உருவெடுத்தார்.

மேலும் இளம் வீரராக இருக்கும் இவருக்கு இது முதல் ஐபிஎல் தொடராகும். எனவே அடுத்த வருடம் மீண்டும் தக்க வைத்து வாய்ப்பளித்தால் இன்னும் சிறப்பாக செயல்படுவார் என்று உறுதியாக நம்பலாம்.

சந்தேக பட்டியல்:
1. அக்சர் படேல்: 9 கோடிக்கு தக்க வைக்கப் பட்ட இவர் பேட்டிங்கில் 10 இன்னிங்ஸ்களில் கடைசி நேரத்தில் களமிறங்கி 182 ரன்களை 45.50 என்ற நல்ல சராசரியில் 151.67 என்ற ஸ்டிரைக் ரேட்டில் குவித்து சிறப்பாக செயல்பட்டார்.

மேலும் 13 போட்டிகளில் 6 விக்கெட்டுகளை 7.47 என்ற எக்கனாமியில் எடுத்து பந்து வீச்சிலும் சிறப்பாக செயல்பட்டார். இருப்பினும் அடுத்த வருடம் சற்று குறைவான தொகைக்கு இவரை தக்கவைத்து அந்தத் தொகையில் மேலும் சில வீரர்களை வாங்கினால் நல்லதாக இருக்கும்.

2. மிட்சேல் மார்ஷ்: 2021 டி20 உலகக் கோப்பை பைனலில் ஆட்டநாயகன் விருதை வென்ற இவர் இந்த வருடம் 6.50 கோடிக்கு வாங்கப்பட்ட நிலையில் ஆரம்பத்திலேயே காயம் இடையில் கரோனா போன்றவற்றால் 8 போட்டிகளில் 251 ரன்களை 132.80 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்தார்.

அதேபோல் பந்து வீச்சில் 4 இன்னிங்சில் 4 விக்கெட்டுகளை 8.50 என்ற ஓரளவு நல்ல எக்கனாமியில் எடுத்த இவரை தக்க வைத்து அடுத்த வருடம் முழு வாய்ப்பை கொடுத்து பார்க்கலாம்.

Advertisement