ஐபிஎல் 2023 : முதல் கோப்பையை வென்று சரித்திரம் படைக்க பெங்களூரு தக்க வைக்க வேண்டிய வீரர்கள்

RCB Faf Du Plessis
Advertisement

ஐபிஎல் 2022 தொடரில் கோப்பையை முதல் முறையாக வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் களமிறங்கி அணிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முக்கியமான அணியாகும். ஏனெனில் 2008இல் ஐபிஎல் தொடங்கப்பட்டது முதல் அனில் கும்ப்ளே, டானியல் வெட்டோரி போன்றவர்களின் தலைமையில் நிறைய நட்சத்திரங்கள் விளையாடிய போதிலும் கோப்பையை வெல்ல முடியாமல் தவித்த அந்த அணி 2013 – 2021 வரை விராட் கோலி தலைமையில் கிறிஸ் கெயில், ஏபி டிவிலியர்ஸ் போன்ற தரமான வீரர்களுடன் களமிறங்கி எவ்வளவோ போராடிய போதிலும் கோப்பையை தொட முடியவில்லை.

RCB Faf Virat

மேற்கூறிய நட்சத்திர வீரர்களின் அதிரடியால் ஒரு கட்டத்தில் பிரம்மாண்ட வெற்றிகளை அசால்டாக பெறும் அந்த அணி நாக்-அவுட் சுற்று போன்ற முக்கிய தருணத்தில் சொதப்பி கோப்பையை எதிரணிக்கு பரிசளிப்பது தொடர் கதையாகி வருகிறது. இருப்பினும் இம்முறை தென்னாபிரிக்காவை வழிநடத்திய அனுபவம் நிறைந்த டுப்லஸ்ஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கிய அந்த அணி லீக் சுற்றில் மும்பையின் உதவியுடன் 4-வது அணியாக பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

மேலும் 2020, 2021 ஆகிய அடுத்தடுத்த சீசன்களில் தோல்வியடைந்த எலிமினேட்டரில் இம்முறை ரஜத் படிடார் அதிரடியால் கண்டத்தில் இருந்து தப்பிய பெங்களூரு பைனலுக்கு முந்தைய குவாலிபயர் 2 போட்டியில் தோல்வியடைந்து 15-வது முறையாக கோப்பையை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது. இதனால் முதல் கோப்பையை வெல்ல வேண்டுமென்ற லட்சிய கனவு அடுத்த வருடத்திற்கு நகர்ந்துள்ள நிலையில் அதற்க்காக தக்க வைக்க வேண்டிய வீரர்களைப் பற்றி பார்ப்போம்.

VIrat Kohli Knock Out

1. விராட் கோலி: கோப்பையை வெல்லாத போதிலும் பெங்களூரு இவ்வளவு புகழ்பெற்ற அணியாக விளங்க இவர்தான் முழு முதற்காரணம். 2008 முதல் இப்போது வரை ஒரே அணிக்காக விளையாடிய வீரர் என்ற சாதனை படைத்துள்ள இவர் ரன் மெஷினாக ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

சமீப காலங்களில் தடுமாறி வரும் இவர் இந்த வருடம் முதல் முறையாக 3 முறை கோல்டன் டக் அவுட்டாகி மொத்தம் 14 போட்டிகளில் 309 ரன்கள் மட்டுமே எடுத்து அவரின் தரத்திற்கு குறைவாகவே செயல்பட்டார். இருப்பினும் வரலாற்றில் அவர் பெற்றுக் கொடுத்த வெற்றிகளையும் அவரை போன்ற உலகத்தரம் வாய்ந்த வீரர்கள் எப்போது வேண்டுமானாலும் புயலாக பார்முக்கு திரும்புவார்கள் என்பதையும் மனதில் வைத்து அடுத்த வருடம் முதல் ஆளாக இவரை தயங்காமல் தக்க வைக்கலாம்.

Faf Du Plessis 96

2. டு பிளேஸிஸ்: கடந்த வருடம் 633 ரன்களை விளாசி சென்னையின் தங்கமாக விளையாடிய இவரை தட்டி தூக்கிய பெங்களூரு கேப்டனாக நியமித்து சிறந்த முடிவை எடுத்தது. ஆனால் நீண்ட நாட்களுக்குப்பின் எதிர்கொண்ட கேப்டன்ஷிப் அழுத்தத்தால் 16 போட்டிகளில் 468 ரன்களை 127.52 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த அவர் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங்கில் செயல்படவில்லை.

- Advertisement -

இருப்பினும் விராட் கோலியைப் போல் ஒருசில போட்டிகளில் சொதப்பும் வீரர்கள் அதிரடியாக நீக்காமல் தொடர்ச்சியான வாய்ப்புகளைக் கொடுத்து ஒரு கேப்டனாக அசத்தினார். மேலும் பெங்களூரு அணியில் கேப்டன்ஷிப் செய்ய வேறு தகுதியானவர் இல்லாத நிலையில் அடுத்த வருடமும் இவர் கேப்டனாக செயல்படுவதற்கு தகுதியானவராக உள்ளதால் தாராளமாக தக்க வைக்கலாம்.

Harshal

3. ஹர்ஷல் படேல்: கடந்த வருடம் 32 விக்கெட்டுகளை எடுத்து ஊதா தொப்பியைப் என்று அசத்திய இவரை தக்கவைக்கவில்லை என்றாலும் 10.75 கோடி என்ற தகுதியான தொகைக்கு மீண்டும் போட்டி போட்டு பெங்களூரு நிர்வாகம் வாங்கியது.

- Advertisement -

இந்த வருடமும் 15 போட்டிகளில் 19 விக்கெட்களை 7.66 என்ற மிகச் சிறப்பான எக்கனாமியில் எடுத்த இவர் அந்த தொகைக்கு தகுதியாக செயல்பட்டார். ஆரம்பம் முதல் கடைசி வரை போட்டியின் எந்த இடத்திலும் துல்லியமாக பந்துவீசும் திறமை பெற்றுள்ள இவரை பெங்களூரு நிர்வாகம் வெளியே விடக்கூடாது.

Dinesh Karthik 3

4. தினேஷ் கார்த்திக்: தமிழகத்தின் தங்கமான தினேஷ் கார்த்திக் இந்த வருடம் 5.50 கோடிக்கு பெங்களூருவுக்காக தனது கேரியரிலேயே உச்சபட்சமாக மிரட்டலாக பேட்டிங் செய்தார் என்றே கூறலாம். டுப்லஸ்ஸிஸ், விராட் கோலி போன்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பிய பெரும்பாலான போட்டிகளில் மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி பட்டையை கிளப்பிய இவர் நிறைய போட்டிகளை வெற்றிகரமாக பினிஷிங் செய்து வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார்.

ஆண்ட்ரே ரசல் போன்ற இதர காட்டடி மன்னர்களைக் காட்டிலும் 183.33 என்ற மிரட்டலான ஸ்டிரைக் ரேட்டில் 16 போட்டிகளில் 330 ரன்களை தெறிக்கவிட்ட இவர் 3 வருடங்கள் கழித்து இந்தியாவிற்கு தேர்வாகும் அளவுக்கு அசத்தியுள்ளார். எனவே நீண்ட நாட்களாக தடுமாறிக் கொண்டிருந்த மிடில் ஆர்டரில் அற்புதமாக செயல்படும் இவரை பெங்களூரு வெளியே விடவே கூடாது.

Rajat Patidar 112 2

5. ரஜத் படிடார்: வெறும் 20 லட்சத்துக்கு வாங்கப்பட்டு லீக் சுற்றில் அம்பியாக செயல்பட்ட இவர் நாக்-அவுட் சுற்றில் 112*, 58 அந்நியனாக மிரட்டிய இவர் ஐபிஎல் வரலாற்றில் எலிமினேட்டர் போட்டியில் சதமடித்த முதல் பேட்ஸ்மேன், பிளே ஆப் சுற்றில் ஒரு சீசனில் அதிக ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன் போன்ற வரலாற்றுச் சாதனைகளைப் படைத்தார்.

இவரை போல் நாக்-அவுட் சுற்று போட்டிகளில் ஏற்படும் அழுத்தத்தை தாங்கி அசத்தலாக பேட்டிங் செய்யும் திறமை ஒரு சில வீரர்களுக்கு மட்டுமே இருக்கும். எனவே இளம் வீரராக இருக்கும் இவரை மிடில் ஆர்டரை வலுப்படுத்துவதற்காக பெங்களூரு நிர்வாகம் கண்டிப்பாக அடுத்த வருடம் தக்க வைக்க வேண்டும்.

Wanindu Hasaranga

6. வணிந்து ஹஸரங்கா: சஹால் இல்லாத குறையை தீர்க்கும் அளவுக்கு சுழலில் மாயாஜாலம் நிகழ்த்தி அசத்தலாக செயல்பட்ட இவர் 26 விக்கெட்டுகள் எடுத்து ஊதா தொப்பியை 1 விக்கெட் வித்தியாசத்தில் விட்டார். இருப்பினும் 10.75 கோடிக்கு தகுதியாக செயல்பட்ட இவரையும் சுழல் பந்துவீச்சை வலுவாக வைத்திருக்க அடுத்த வருடம் பெங்களூர் நிர்வாகம் தக்க வைக்கலாம்.

சந்தேக பட்டியல்:
1. கிளென் மேக்ஸ்வெல்: கடந்த 2021இல் 513 ரன்கள் விளாசி அற்புதமாக செயல்பட்ட இவர் 11 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட நிலையில் 13 போட்டிகளில் 301 ரன்களை 27.36 என்ற சுமாரான சராசரியில் எடுத்தாலும் 169.10 என்ற நல்ல ஸ்டிரைக் ரேட்டில் விளாசினார்.

maxwell 1

மேலும் 2-வது சுழல்பந்து வீச்சாளரை போல் 6 விக்கெட்களை 6.88 என்ற அற்புதமான எக்கனாமியில் எடுத்த இவரையும் அடுத்த வருடம் தக்க வைத்து மீண்டும் வாய்ப்பளிக்கலாம்.

2. ஜோஸ் ஹேசல்வுட்: கடந்த வருடம் சென்னையில் அசத்திய இவர் இம்முறை பெங்களூரு அணியில் 7.75 கோடி என்ற பெரிய தொகைக்கு 12 போட்டிகளில் 20 விக்கெட்களை எடுத்து சிறப்பாகவே செயல்பட்டார். ஒருசில போட்டிகளில் சொதப்பினாலும் ஹர்ஷல் படேல் தவிர வேறு நல்ல வேகப்பந்து வீச்சாளர் இல்லாத நிலையில் இவரை பெங்களூரு நம்பி தக்க வைக்கலாம்.

Advertisement