கொரோனா பரிசோதனையில் சிக்கிய 7 நட்சத்திர வீரர்கள். எல்லாருக்கும் பாசிட்டிவாம் – அதிர்ச்சி தகவல் இதோ

RSA
- Advertisement -

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தற்போது வரை ருத்ர தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. தெற்கு ஆசியாவில் இப்போதுதான் அதன் உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கிறது , இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து என அனைத்து நாட்டிலும் தினமும் ஆயிரக்கணக்கானோர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றனர் .

Corona-1

- Advertisement -

இதில் கிரிக்கெட் வீரர்களும் முன்னாள் இந்நாள் செலிபிரிட்டிகளும் விதிவிலக்கல்ல . அனைவரையும் கொரோனா தாக்கிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டன் சாகித் அஃப்ரிடி பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த நாட்டில் மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து வங்கதேசத்தின் முன்னாள் கேப்டன் மாஷ்ரஃப் மோர்டேசாவிற்கும் மேலும் இரண்டு கிரிக்கெட் வீரர்களுக்கும் கொரானா பாதித்துள்ளது . அவரகள் அனைவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Miller

இந்நிலையில் தற்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தென்னாபிரிக்க கிரிக்கெட் வீரர்கள் ஏழு பேருக்கு வைரஸ் தொற்றியுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதில் தென்ஆப்பிரிக்க வீரர்கள் டேவிட் மில்லர், டேல் ஸ்டைன் ,டுப்லஸ்ஸிஸ் போன்றோர் இருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

ஏழு பேரில் நான்கு பேர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த செய்திகள் எல்லாம் அந்நாட்டு உள்நாட்டு செய்தித்தாள்கள் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. மேலும் இவர்களின் பெயர்களை வெளியிட முடியாது எனவும் அப்படி வெளியிட்டால் அது சட்ட விரோதமான செயல் எனவும் அந்த நாட்டின் கிரிக்கெட் வாரிய தலைவர் தெரிவித்துள்ளார்.

Steyn

நல்லவேளையாக இந்திய வீரர்கள் அனைவரும் சரியான நெறி முறைகளையும், விதிகளையும், கடைபிடித்து வீட்டிற்கு உள்ளேயே இருப்பதால் தற்போது வரை எந்த ஒரு இந்திய வீரரையும் கரோனா பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement