ஐபிஎல் 2023 : கோப்பையை வெல்ல ஹைதெராபாத் கழற்றிவிட வேண்டிய வீரர்களின் பட்டியல்

RCB vs SRH
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ரன் மழை பொழிந்து 2016இல் கோப்பையை வென்று கொடுத்த டேவிட் வார்னரை மொத்தமாக கழற்றி விட்டு புதிய அத்தியாயத்தை துவங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பிளே ஆப் சுற்றுக்கு கூட செல்ல முடியாத பரிதாப தோல்வியே மிஞ்சியது. அதிலும் வார்னரின் இடத்தில் கேப்டனாக விளையாடிய கேன் வில்லியம்சன் டெஸ்ட் இன்னிங்ஸ் போல மெதுவாக பேட்டிங் செய்து 93.32 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் எடுக்க தடுமாறியது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. அதேபோல் பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் ஒருசில வீரர்களைத் தவிர பெரும்பாலான வீரர்கள் சுமாராக செயல்பட்டது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த வருடம் முதல் 2 போட்டிகளில் தோற்றாலும் அடுத்த 5 போட்டிகளில் வென்று டாப் 4 இடத்துக்குள் வந்தாலும் அடுத்த 5 போட்டிகளில் தோல்வியடைந்து அந்த நல்ல வாய்ப்பை கோட்டை விட்டு 8-வது இடத்தை மட்டுமே பிடித்தது. இருப்பினும் அடுத்த வருடம் வில்லியம்சனுக்கு மீண்டும் அந்த அணி நிர்வாகம் ஒரு வாய்ப்பளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த வருடம் அவரை விட மோசமாக செயல்பட்ட வீரர்களை கழற்றி விட்டு அடுத்த வருடம் மீண்டும் அவரது தலைமையில் வார்னர் இல்லாமல் 2-வது கோப்பையை வெல்வதற்கு அந்த அணி முயற்சிக்க உள்ளது. அதற்காக அந்த அணி நிர்வாகம் நீக்க வேண்டிய வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. அப்துல் சமட்: கடந்த வருடம் ஒரு சில போட்டிகளில் அசத்தியதால் 4 கோடி என்ற பெரிய தொகைக்கு தக்க வைத்த இவருக்கு இந்த வருடம் 2 போட்டிகளில் மட்டுமே ஹைதராபாத் வாய்ப்பளித்தது.

அதில் வெறும் 4 ரன்களை மட்டும் எடுத்த இவர் 12 போட்டிகளில் பெஞ்சில் அமர்ந்திருந்தார். எனவே பெஞ்சில் அமர வைக்காமல் இவரை விடுவித்தால் அவருக்கும் நல்லது. அந்த தொகையில் வேறு சில தேவையான வீரர்களையும் ஹைதராபாத் வாங்கலாம்.

- Advertisement -

2. சீன் அபோட்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த இவர் ஒரு போட்டியில் மட்டும் விளையாடி விக்கெட் எடுக்காமல் 37 ரன்களை வாரி வழங்கினார். எனவே பெஞ்சில் அமர வைக்கப் பட்ட இவருக்கு பதில் உம்ரான் மாலிக், நடராஜன் போன்ற பவுலர்கள் இருப்பதால் இவரை தாராளமாக விடுவித்து வேறு வீரர்களை வாங்கலாம்.

3. ரோமரியோ செபார்ட்: 7.75 கோடி என்ற பெரிய தொகைக்கு வாங்கப்பட்ட இவர் 3 போட்டிகளில் 58 ரன்களையும் 3 விக்கெட்டுகளையும் எடுத்து சுமாராகவே செயல்பட்டார்.

- Advertisement -

எனவே அறிமுக ஐபிஎல் தொடரில் சுமாராக செயல்பட்ட இவரை அடுத்த வருடம் விடுவித்து குறைந்த தொகையில் மீண்டும் வாங்கலாம் அல்லது அந்த தொகையில் வேறு 2 – 3 நல்ல வீரர்களை வாங்கலாம்.

4. ஷஷாங்க் சிங்: 10 போட்டிகளில் பினிஷராக செயல்படும் வாய்ப்பு 5 இன்னிங்சில் கிடைத்த நிலையில் 69 ரன்கள் மட்டுமே எடுத்த இவர் 17.25 என்ற சராசரியில் சுமாராகவே பேட்டிங் செய்தார். எனவே இவரை விடுவித்து அடுத்த வருடம் பினிஷிங் செய்யும் வேலைக்கு வேறு வீரர்களை ஹைதராபாத் வாங்கலாம்.

- Advertisement -

5. கிளென் பிலிப்ஸ்: 1.50 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் கரோனா காரணமாக ஆரம்பத்தில் பங்கேற்காத நிலையில் இறுதி வரை வாய்ப்பை பெறவில்லை. இருப்பினும் கடந்த வருடம் 3 போட்டிகளில் வெறும் 26 ரன்களை மட்டுமே எடுத்து இந்திய ஆடுகளங்களில் சுமாராக செயல்பட்டு வரும் நியூசிலாந்தைச் சேர்ந்த இவரை விடுவித்து வேறு வீரர்களை வாங்க முயற்சிக்கலாம்.

சந்தேக பட்டியல்:
1 . மார்கோ யான்சென்: 4.20 கோடிக்கு வாங்கப்பட்ட 21 வயது இளம் வீரரான இவர் ஆரம்பத்தில் ஒரு சில போட்டிகளில் அசத்தினாலும் அதன்பின் நிறையவே ரன்களை வாரி வழங்கினார்.

மொத்தம் 8 போட்டிகளில் 7 விக்கெட்டுகளை 8.56 என்ற எக்கனாமியில் எடுத்த இவருக்கு பதில் புவனேஸ்வர் குமார், நடராஜன், உம்ரான் மாலிக் போன்ற தரமான பவுலர்கள் இருப்பதால் இவரை விடுவிக்கலாம்.

2. நிக்கோலஸ் பூரன்: கடந்த வருடம் பஞ்சாப் அணிக்கு 12 போட்டிகளில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்து திண்டாடிய இவரை 10.75 என்ற பெரிய தொகைக்கு ஹைதராபாத் நம்பி வாங்கியது.

அதில் 14 போட்டிகளில் 306 ரன்கள் 38.25 என்ற சராசரியில் 144.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் எடுத்த இவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு இல்லை என்றாலும் நல்ல பார்முக்கு திரும்பியுள்ளார். எனவே அடுத்த வருடம் இவரை விடுவித்து மீண்டும் இதைவிட குறைந்த விலைக்கு வாங்கினால் நன்றாக இருக்கும்.

Advertisement