IPL போட்டிக்கு பிறகு காணாமல் போன 6 ஹீரோஸ்…இதில் CSK வீரர்கள் யார் தெரியுமா ? – புகைப்படம் உள்ளே

patel
- Advertisement -

ஐபிஎல்-இல் சாதித்தவர்கள் எல்லாம் திடீர் திடீரென்று மாயமாகிவிடுவதை பார்த்திருப்பீர்கள். அப்படி ஒரு காலத்தில் புகழின் உச்சியிலிருந்து அடுத்தடுத்து சோபிக்காமல் மாயமான வீரர்களை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.மற்ற ஐபிஎல் சீசன்களை விட இந்த 11வது ஐபிஎல் சீசன் களைகட்டும். ஏனென்றால் சூதாட்ட புகார் தொடர்பாக இரண்டாண்டு தடைக்கு பின்னர் விளையாடப்போகும் சென்னை சூப்பர்கிங்ஸ் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் ஒருபுறம் களமிறங்க.

மற்றொருபுறமோ ஒவ்வொரு வருடமும் பலமான அணியாக திகழ்ந்தாலும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லாத பெங்களூரு அணி கோலி தலைமையில் முதல்முறையாக கோப்பையை எப்படியாவது வென்றுவிட வேண்டுமென்றும், நடப்பு சாம்பியனான மும்பை இம்முறையும் கோப்பையை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்றும் களத்தில் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

- Advertisement -

இந்த மூன்று அணிகள் மட்டுமில்லாமல் ராஜஸ்தான் ராயல்ஸ் உட்பட மற்ற ஐந்து அணிகளும் கோப்பையை வெல்ல இறுதி நிமிடம் வரை போராடிடும் என்பதால் ரசிகர்களுக்கு மற்ற ஐபிஎல்-களை விடவும் இந்த ஐபிஎல் கொஞ்சம் ஸ்பெஷல் தான்.அப்படியிருக்கையில் ஒவ்வொரு ஐபிஎல்-யிலும் சில வீரர்கள் வருவதும் திடீரென்று காணாமல் போவதுமாக இருப்பார்கள்.

அப்படி ஒரு காலத்தில் கலக்கியவர்கள் திடீரென்று காணாமல் போனதை பற்றியும், அதன் காரணங்களை பற்றியும் காண்போம்.

- Advertisement -

ஜோகிந்தர் ஷர்மா.
sharma

ஒரு காலத்தில் இந்திய அணியின் மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளரான இவர் தற்போது ஹரியானாவில் டி.எஸ்.பி போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வருகின்றார்.2007ம் ஆண்டில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியின் போது மிரடட்டலான கடைசி ஓவரில் மிஸ்பாவை அவுட்செய்து கோப்பையை வெல்ல உதவியவர்.சூப்பர்கிங்ஸ் அணியில் இருந்து அசத்தியவர் டி.எஸ்.பி ஆன பின்னரும் 2016ல் புனே அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். ஆனால் அந்த ஐபிஎல்-இல் பெரிதாக சோபிக்காததால் அப்படியே மீண்டும் தனது போலீஸ் தொழிலையே பார்க்க சென்றுவிட்டார்.

டக் போலிங்கர்.

- Advertisement -

doug

சென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்காக கடந்த 2010ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை பந்துவீச்சில் அசத்தியவர். ஆஸ்திரேலிய அணியின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான இவர் அடுத்த ஐபிஎல்-இல் அவுட் ஆப் பார்மில் இருந்ததால் எந்த அணியும் கண்டுகொள்ளவில்லை.சென்னை அணிக்காக மொத்தம் 27 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இவர் 37 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

வேணுகோபால் ராவ்.

- Advertisement -

Rao

ஐபிஎல்-இல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக 2008 சீசனில் விளையாடி 11போட்டிகளில் 288 ரன்களை குவித்தவர். வளர்ந்து வரும் இளம்வீரர் ஓஹோவென வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் சொதப்பியதால் மொத்தமாக ஐபிஎல்-இல் இருந்து ஒதுக்கிவைக்கப்பட்டார்.

சித்தார்த் திரிவேதி.

sidharth

ஒரு காலத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவியவர். தனது அபாரமான பந்துவீச்சினால் அந்த அணியின் கேப்டன் வார்னேவிடம் பாராட்டுகளை பெற்றார். ஐபிஎல்-இல் மிகச்சிறந்த வீரராக வலம் வந்திருக்க வேண்டிய இவர் சூதாட்ட புகாரில் சிக்கியதால் ஐபிஎல் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

ஆர்பி சிங்.

RP

2009 ஐபிஎல் சீசனில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பையை வெல்ல காரணமாக இருந்த வீரர்களில் ஒருவர் ஆர்.பி.சிங். தனது திறமையான ஆட்டத்தை அடுத்த சீசனிலும் வெளிப்படுத்தினாலும் மற்றொரு சீசனில் பெங்களூரு அணிக்காக விளையாடிய போது பெரிதாக சோபிக்காததால் அப்படியே வெளியேற்றப்பட்டார்.

சவுரவ் திவாரி.

tiwary

2010ம் ஆண்டு ஐபிஎல்-இல் மும்பை அணிக்காக விளையாடி அந்த அணியில் அதிக ரன்களை குவித்தவர். அடுத்த சீசனில் அதிக தொகைக்கு போட்டி போட்டுக் கொண்டு பெங்களூரு அணி இவரை ஏலத்தில் எடுத்தது. பெங்களூரு அணியில் விளையாடிய போது ஒழுங்காக விளையாடாமல் ஏமாற்றினார். பின்னர் டெல்லி அணிக்கு சென்று அங்கும் ஒழுங்காக விளையாடமல் போனதால் ஐபிஎல்-இல் இருந்து ஓரங்கட்டப்பட்டார்.

63 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 945 ரன்களை எடுத்திருந்தும் ஐபிஎல்-இல் அடுத்த சீசன்களில் ஒழுங்காக விளையாடாமல் போனதால் ஒதுக்கப்பட்டார். ஐபிஎல்-ஐ பொறுத்தவரையிலும் அனைத்து வீரர்களுக்கும் இதே கதி தான்.

Advertisement