பார்ம் காரணமாக டி20 அணியிலிருந்து விராட் கோலியை நீக்கக் கோரிய 6 முன்னாள் இந்திய வீரர்களின் பட்டியல்

Ajay-Jadeja-and-Virat-Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பல வீரர்களில் தரத்திலும் தரமான சிலர் மட்டுமே தொடர்ச்சியாக குறிப்பிட்ட சில போட்டிகள் மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக நிறைய வருடங்கள் மிகச்சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக் கொடுத்து நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பார்கள். ஆனால் இரவானால் பகல் வரும், இன்பம் என்றால் துன்பம் வரும் என்ற இயற்கையின் நீதிப்படி மிகச் சிறப்பாக செயல்படும் வீரர்களும் பார்மை இழந்து ஒரு கட்டத்தில் வீழ்ச்சியை சந்தித்து விமர்சனத்துக்குள்ளாவார்கள். சொல்லப்போனால் கிரிக்கெட்டில் விளையாடும் அத்தனை வீரர்களும் அதுபோன்ற தருணத்தை சந்திக்காமல் விளையாடவே முடியாது.

- Advertisement -

ஆனால் உலகத்தரம் வாய்ந்த வீரர்களுக்கு பார்ம் தற்காலிகமானது கிளாஸ் நிரந்தரமானது என்ற வல்லுனர்களின் கூற்றுப்படி கடினமாக உழைத்து அதிலிருந்து மீண்டெழுந்து முன்பைவிட மிகச் சிறப்பாக செயல்பட்ட வீரர்களையும் இந்த வரலாறு பார்த்துள்ளது. அந்த வகையில் ஜாம்பவான் சச்சினுக்கு பின் அவரைப் போலவே அவரது இடத்தில் ரன் மெஷினாக 23000+ ரன்களையும் 70 சதங்களையும் அடித்து இந்திய பேட்டிங்கை தோள் மீது சுமந்து வரும் விராட் கோலி கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக ஏராளமான சரித்திர வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

விமர்சித்த வீரர்கள்:
2008இல் அறிமுகமாகி 10 வருடங்களாக உச்சத்தை நோக்கி மட்டுமே சென்று கொண்டிருந்த அவர் 2019ப்குப்பின் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் 100 போட்டிகளுக்கும் மேலாக சுமார் 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் மெகா வீழ்ச்சியை சந்தித்துள்ளார். அதிலிருந்து மீண்டெழுவதற்காக கேப்டன்ஷிப் பதவிகளை ராஜினாமா செய்து சுதந்திரப் பறவையாக விளையாடும் அவர் ஐபிஎல் 2022 தொடரில் 3 கோல்டன் டக் அவுட்டானது உட்பட முன்பை விட சுமாராக செயல்படுவதால் பொறுமையிழந்த சில முன்னாள் வீரர்கள் எப்போது சதமடிப்பார் என்று பேச்சை விட்டுவிட்டு அணியிலிருந்து நீக்குமாறு கேட்கத் தொடங்கிவிட்டனர்.

Graeme-Swann-and-Virat-Kohli

இத்தனைக்கும் இடையிடையே 40, 50, 70 போன்ற நல்ல ரன்களை அடிக்கும் அவரை அனைவரும் பார்ம் அவுட் என்று கருதுகின்றனர். ஆரம்ப காலங்களில் களமிறங்கினாலே சதமடிப்பார் என்று அனைவரும் எதிர்பார்க்கும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டு தனக்கென்று ஒரு தரத்தை உருவாக்கி வைத்துள்ள அவரின் அருமையை உணர்ந்து ரிக்கி பாண்டிங், பிரைன் லாரா, கெவின் பீட்டர்சன், சோயப் அக்தர், க்ரேம் ஸ்வான், பாபர் அசாம் போன்ற நிறைய முன்னாள் இந்நாள் வெளிநாட்டவர்கள் ஆதரவு கொடுக்கின்றனர். ஆனால் மோசமான காலத்தில் இந்தியனுக்கு இந்தியனாக ஆதரவு கொடுக்காமல் அணியிலிருந்து நீக்குமாறு கேட்ட 6 முன்னாள் வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

6. கர்சன் கர்வி: 70% இந்திய ரசிகர்கள் யாரென்றே தெரியாத இந்த முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் விராட் கோலியை பற்றி பேசியது பின்வருமாறு. “விராட் கோலி நிறைய போட்டிகளில் இந்தியாவை பெருமைப்பட வைத்துள்ளார். ஆனால் ஃபார்மில் இல்லை என்றால் அவரை நீக்கிவிட்டு பார்மில் இருப்பவர்களை மட்டும் தேர்ந்தெடுங்கள். விராட் கோலி பெரிய பெயர் என்றாலும் ரன்கள் அடிக்காமல் எத்தனை நாட்கள் தேர்வு செய்ய முடியும்?”

Karsan

“மேலும் விராட் மற்றும் ரோகித் ஆகியோருக்கு எத்தனை நாட்கள் ஓய்வு தேவைப்படுகிறது. விளம்பரங்களில் நடித்து ஐபிஎல் தொடரில் விளையாட நேரம் பெற்றுள்ள அவர்களுக்கு நாட்டுக்காக விளையாட நேரமில்லையா” என்று விமர்சித்த இவர் வெறும் ஒரு போட்டியில் சதமடித்த தீபக் ஹூடாவை விராட் கோலியுடன் ஒப்பிட்டு பேசியிருந்தார்.

- Advertisement -

5. வெங்கடேஷ் பிரசாத்: முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளரான இவர் விராட் கோலியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சித்தது பின்வருமாறு. “வரலாற்றில் சௌரவ் கங்குலி, வீரேந்திர சேவாக் போன்ற இதைவிட பெரிய பெயருடைய வீரர்கள் பார்மின்றி தவித்த போது நீக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சிறப்பாக விளையாடி அணிக்குத் திரும்பினார்கள்”

venkatesh-prasad

“ஆனால் இப்போது அந்த நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது மட்டுமில்லாமல் பார்மின்றி தவிக்கும் வீரர்களுக்கு கௌரவமாக ஓய்வு கொடுக்கப்படுகிறது” என்று கூறியிருந்தார்.

- Advertisement -

4.அஜய் ஜடேஜா: முன்னாள் இந்திய ஆல்-ரவுண்டரான இவர் பேசியது பின்வருமாறு. “இது நீங்கள் யார் விளையாட விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. அனேகமாக உங்களுக்கு கடினமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக கருதுகிறேன். ஒருவேளை டி20 அணியை நான் தேர்வு செய்வதால் நிச்சயம் அதில் விராட் கோலி இருக்க மாட்டார்” என்று கூறினார்.

Jaffer

3. வாசிம் ஜாபர்: ரஞ்சி கோப்பையில் 10000க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ள இவர் பேசியது பின்வருமாறு.”அவரின் பார்மை கருத்தில் கொள்ள வேண்டும். அவரின் ஐபிஎல் ஸ்ட்ரைக் ரேட் சிறப்பாக இல்லை. பழைய பார்மில் இல்லாத அவருக்கு பதிலாக தீபக் ஹூடாவுக்கு வாய்ப்பளித்தால் பந்துவீச்சு துறைக்கு உதவியாக இருக்கும்”

“எனவே விராட் கோலியை பற்றிய முடிவு தேர்வுக்குழுவினர் கையில் உள்ளது. ஆனால் தற்போதைய இந்திய அணியில் அவர் அவசியம் கிடையாது. ஏனெனில் நிறைய இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர்” என்று கூறினார்.

Zaheer

2. ஜஹீர் கான்: இந்தியா கண்ட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விராட் கோலி அணிக்கு திரும்பிய போது அவரின் பெயரை குறிப்பிடாமல் பேசியது பின்வருமாறு. “சில சமயங்களில் நீங்கள் தேர்வு செய்யும் போது கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும்”

“அந்த வகையில் தற்போதைய இந்திய அணியில் எந்த மாற்றத்தையும் செய்யத் தேவையில்லை என்று நினைக்கிறேன். வேண்டுமானால் அர்ஷிதீப் சிங்க்கு பதில் பும்ராவை சேர்க்கலாம்” எனக்கூறிய அவர் விராட் கோலியை சேர்க்க எதுவும் சொல்லவில்லை.

Kapildev

1. கபில் தேவ்: இந்தியாவின் மகத்தான ஆல்ரவுண்டர் மற்றும் இந்த அளவுக்கு கிரிக்கெட் வளர 1983 உலகக்கோப்பையை கேப்டனாக வென்று முக்கிய காரணமாக திகழும் ஜாம்பவான் கபில் தேவ் பேசியது பின்வருமாறு. “டெஸ்ட் அணியிலிருந்து நம்பர் 2 பவுலரான அஷ்வின் நீக்கப்பட்டால் டி20 அணியி;ல் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் நீக்கப்படுவதால் எந்த தவறுமில்லை”

“விராட் கோலி முன்புபோல் பேட்டிங் செய்வதில்லை. சிறப்பான செயல்பாடுகளால் பெரிய பெயரைப் பெற்ற அவர் சிறப்பாக செயல்படவில்லையெனில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கலாம். விராட் கோலியை அணியிலிருந்து வெளியே எடுக்கும் அளவுக்கு இளம் வீரர்கள் சிறப்பாக செயல்படுவதை நான் பார்க்க விரும்புகிறேன்” என்று கூறினார்.

Advertisement