ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் நம்பர் ஒன் பிடித்த 6 இந்திய பந்து வீச்சாளர்களின் பட்டியல்

SUnil Gavaskar Kapil Dev
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி என மகத்தான பேட்ஸ்மேன்களை உருவாக்கும் நாடாக கருதப்படும் இந்தியாவில் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் தான் அதிக ஆதிக்கம் செலுத்தி சாதனைகளைப் படைப்பார்கள். இருப்பினும் பந்து வீச்சு துறையிலும் ஜஹீர் கான், அனில் கும்ப்ளே போன்ற மகத்தான வீரர்கள் உருவாகி இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து ஜாம்பவான்களாகவும் அடுத்து வரும் தலைமுறைக்கு ரோல் மாடலாகவும் அமைத்தனர். பொதுவாக கிரிக்கெட்டில் விளையாடும் யாராக இருந்தாலும் மிகச்சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தி நாட்டுக்காக உலகக் கோப்பைகளை வென்று உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் வீரராக உருவெடுக்க வேண்டும் என்ற லட்சியத்துடனே இருப்பார்கள்.

worldcup

- Advertisement -

ஆனால் தரமான எதிரணிக்கு எதிராக அதை அனைவராலும் சாதிக்க முடியாது என்றாலும் சில வீரர்கள் கொஞ்சம் அதிர்ஷ்டம் மற்றும் அதிக திறமையை பயன்படுத்தி வெற்றிகரமாக செயல்பட்டு நம்பர் ஒன் இடத்தையும் அடைவார்கள். அந்த வகையில் ரசிகர்களை கவர்வதற்காக 60 ஓவர்களாக துவங்கப்பட்டு பின்னர் 50 ஓவர்களாக மாற்றப்பட்டு இப்போதும் உலக கிரிக்கெட்டின் உண்மையான சாம்பியனை தீர்மானிக்கும் கிரிக்கெட்டாக ஜொலிக்கும் ஒருநாள் கிரிக்கெட்டில் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த 6 இந்திய பந்து வீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

1. மணிந்தர் சிங்: 1980களில் இந்தியாவுக்காக விளையாடிய சுழல் பந்து வீச்சாளரான இவர் 59 ஒருநாள் போட்டிகளில் 66 விக்கெட்களை எடுத்து அசத்தியவர். குறிப்பாக கடந்த 1987ஆம் ஆண்டு நடைபெற்ற 30 ஒருநாள் போட்டிகளில் 28.47 என்ற சிறப்பான சராசரியில் பந்து வீசி உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

Maninder

அதனால் நம்பர் ஒன் பவுலராக முன்னேறிய அவர் ஐசிசி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்த முதல் இந்திய பவுலர் என்ற வரலாற்றையும் அவர் படைத்தார்.

- Advertisement -

2. கபில் தேவ்: சர்வதேச கிரிக்கெட்டில் இன்று வரை அதிக விக்கெட்களை எடுத்த இந்திய வேகப்பந்து வீச்சாளராக 707 விக்கெட்களுடன் சாதனை படைத்துள்ள இவர் உண்மையிலேயே பவுலர் கிடையாது ஆல் ரவுண்டர் என்பதை அனைவரும் அறிவோம். அப்படி பேட்டிங்க்கு நிகராக பந்து வீச்சு துறையிலும் காலம் கடந்து பேசும் அளவுக்கு அசத்திய அவர் 1988ஆம் ஆண்டு இந்தியா விளையாடிய ஒருநாள் போட்டிகளில் 21 விக்கெட்டுகளை 22.14 என்ற சராசரியில் எடுத்து உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்தினார்.

kapildev

அதனால் 1988 மார்ச் மாதம் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த அவர் ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற வரலாற்றை படைத்தார். இந்திய கிரிக்கெட்டில் ஸ்பின்னர்கள் ராஜாங்கம் நடத்திய அந்த காலத்தில் மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இந்த சாதனை படைத்த அவர் கேப்டனாகவும் உலகக்கோப்பை வென்று கொடுத்தவர். மொத்தத்தில் அவர் ஆல் ரவுண்டர் என்பதை தாண்டி ஜாம்பவான் என்று தான் சொல்ல வேண்டும்.

- Advertisement -

3. அனில் கும்ப்ளே: இந்தியாவின் மேட்ச் வின்னர் என்று அழைக்கப்படும் இவர் ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலும் (953) ஒருநாள் கிரிக்கெட்டிலும் அதிக விக்கெட்களை (337) எடுத்த இந்திய பவுலராக சாதனை படைத்துள்ளார்.

anilkumbley

குறிப்பாக 1996ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் 61 விக்கெட்டுகளை 20.24 என்ற சராசரியில் எடுத்த அவர் அந்த வருடத்தின் டிசம்பர் மாதம் உலகின் நம்பர் ஒன் பந்து வீச்சாளராகவும் உருவெடுத்து சாதித்தார்.

- Advertisement -

4. ரவீந்திர ஜடேஜா: தற்சமயத்தில் நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டராக ஜொலிக்கும் இவர் 2013ஆம் ஆண்டு 52 ஒருநாள் போட்டிகளில் 25.40 என்ற சராசரியில் அசத்தலாக பந்து வீசினார்.

jadeja

குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் ட்ராபியை இந்தியா வெல்வதற்கு தங்க பந்து விருது வென்று அசத்திய அவர் அந்த வருடத்தில் நம்பர் ஒன் பவுலராகவும் முன்னேறி சாதனை படைத்தார்.

5. ஜஸ்பிரித் பும்ரா: நவீன கிரிக்கெட்டில் இந்தியாவின் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஜொலிக்கும் இவர் கடந்த 2018ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் பவுலராக முன்னேறி மீண்டும் 2022ஆம் ஆண்டு அந்த இடத்தை பிடித்து அசத்தினார். இருப்பினும் அதன் பின் காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் இதுவரை 72 போட்டிகளில் 121 விக்கெட்களை 4.64 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்துள்ளார்.

Mohammad-Siraj

6. முகமது சிராஜ்: 2019இல் அறிமுகமாகி ரன்களை வாரி வழங்கி கிண்டல்களுக்கு உள்ளான இவர் கடினமாக உழைத்து 2வது போட்டியை கடந்த 2022 பிப்ரவரியில் விளையாடினார். அப்போதிலிருந்து அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்திய அவர் 2022இல் 24 விக்கெட்களை 4.61 என்ற சிறப்பான எக்கனாமியில் எடுத்து ஐசிசி கனவு ஒருநாள் அணியிலும் இடம் பிடித்தார்.

இதையும் படிங்க:வீடியோ : சூப்பர்மேனாக சூப்பர் கேட்ச் பிடித்த வாஷிங்டன் சுந்தர், ட்ரிக்கான பிட்ச்சில் கடின இலக்கை துரத்துமா இந்தியா?

அதே வேகத்தில் சமீபத்திய தொடர்களில் அசத்திய அவர் வெறும் 21 போட்டியிலே நம்பர் ஒன் இடத்தை பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக நம்பர் ஒன் இடத்தைப் பிடித்த இந்திய பவுலர் என்ற சாதனையும் படைத்தார்.

Advertisement