டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கான அணியில் தேர்வாளர்கள் செய்துள்ள 5 சர்ப்ரைசிங் செலக்ஷன் – விவரம் இதோ

IND
- Advertisement -

ஐசிசி டெஸ்ட் போட்டிகளின் மீது உள்ள சுவாரஸ்யத்தை அதிகரிப்பதற்காக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை அறிமுகப்படுத்தியது. அதிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை கணக்கில் கொண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நடைபெறும் என அறிவித்திருந்தது. அதன்படி இந்த இரண்டு ஆண்டு காலத்தில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை கணக்கில் வைத்து தற்போது இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு விளையாட தகுதி ஆகியுள்ளன.

INDvsNZ

- Advertisement -

இந்த போட்டி இங்கிலாந்து நாட்டின் சவுதாம்ப்டன் நகரில் ஜூன் 18-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான நியூசிலாந்து மற்றும் இந்தியா ஆகிய அணிகள் தயாராகி வரும் நிலையில் தற்போது இந்த இறுதிப் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த அணியே இங்கிலாந்து அணிக்கெதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் என்று பிசிசிஐ என்று அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த டெஸ்ட் இறுதிப் போட்டிக்கான இந்திய அணியை அறிவித்துள்ள பிசிசிஐ கேப்டனாக விராட் கோலியையும், துணை கேப்டனாக ரஹானே நியமித்துள்ளது.

Nagwaswalla

இந்த இறுதி போட்டிக்கான அணியில் தேர்வாளர்கள் செய்த 5 சர்ப்ரைஸ் தேர்வுகள் ரசிகர்களை கவர்ந்தன. இருப்பினும் அவர்கள் முடிவு சரியானது என்பதே அனைவரது கருத்தும் உள்ளது. அதன்படி அந்த 5 சர்ப்ரைஸ் தேர்வுகள் யாதெனில் : இளம் வீரரான பிரசித் கிருஷ்ணாவை ஸ்டாண்ட் பை வீரராக தேர்வு செய்தது சரியான முடிவாகும். அதனைத் தொடர்ந்து அர்சான் நக்வஸ்வாலா அணிக்குள் தேர்வானது அனைவருக்கும் சர்ப்ரைஸாக அமைந்தது. மேலும் பாண்டியா, ப்ரித்விஷா, புவனேஷ்வர் குமார் ஆகியோரை நீக்கியதும் தேர்வாளர்கள் செய்த சர்ப்ரைஸ் முடிவுகளாக அமைந்துள்ளன. சில வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டு சில வீரர்கள் அணியில் இருந்து நீக்கப்பட்டாலும் இவை அனைத்தும் தற்போதைய இந்திய பலத்தை அடிப்படையில் கொண்டே செய்யப்பட்டுள்ளன என்பதால் நிச்சயம் இந்திய அணி இந்த தேர்வில் திருப்தியடைந்த ஒரு அணியாகவே பார்க்கப்படுகிறது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணி இறுதி இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் ஐசிசி நடத்தும் முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து டெஸ்ட் போட்டியில் தாங்கள் பெற்றிருக்கும் முதலிடத்தை தக்க வைக்கவும் இந்திய அணிக்கு ஒரு வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement