சென்ற ஆண்டு சிறப்பாக விளையாடி இந்தாண்டு பார்ம் அவுட்டில் இருக்கும் 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Chahal

இந்த வருடம் ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வருகிறது. இப்படியிருக்கையில் சிறப்பாக விளையாடி வந்து தற்போது பார்ம் அவுட் ஆன வீரர்களை பற்றி பார்ப்போம்.

Chahal

யுஸ்வேந்திர சாஹல் :

இவர் கடந்த பல ஆண்டுகளாக ராயல் சாலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர். கடந்த வருடம் 2019ஆம் ஆண்டு மட்டும் 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ஆனால், கடைசி ஓவர்களில் தான் இவரது விக்கெட்டுகள் எல்லாம் வந்திருக்கிறது. மிடில் ஓவர்களில் இவரால் சரியாக பந்து வீச முடியவில்லை இது ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு இந்த வருடம் பெரிய பாதிப்பாக இருக்கும்.

Pant

ரிஷப் பண்ட் :

- Advertisement -

தோனிக்கு மாற்று வீரராக களம் இறக்கப்பட்டவர். தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். தொடர்ந்து நன்றாக ஆட வேண்டும் அப்போதுதான் ஒரு வீரரால் நிலைத்து நிற்கமுடியும். இவர் ஐந்து போட்டிகளுக்கு ஒருமுறை அதிரடியாக ஆடுகிறார்.இது அந்த அணிக்கு தற்போது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வருடமும் இவர் நன்றாக விளையாட விட்டால் இவரது இடம் கேள்விக்குறிதான்

Gayle

கிறிஸ் கெயில் :

கடந்த 5 வருடத்திற்கு முன்னால் ஆடிய ஆட்டம் இவரிடம் தற்போது இல்லை. இந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட போகிறார். தற்போது இவர் எந்த ஒரு போட்டியிலும் விளையாடவில்லை. இது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு சற்று பாதகமாக தான் இருக்கும்.

rabada2

காகிசோ ரபாடா :

இவர் டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர். கடந்த ஒரு வருடமாக எந்த வகையான கிரிக்கெட் விளையாட வில்லை. தற்போது வரை 12 போட்டிகளில் விளையாடி 25 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தாலும் அவரால் சரியாக போட்டியை வெல்லும் அளவிற்கு ஒரு செயல்பாட்டை கொடுக்க முடியவில்லை

Khaleel

கலீல் அஹமது :

இந்தியாவின் இடது கை வேகப்பந்து வீச்சாளர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இவர் இடதுகை உமேஷ் யாதவ் என்றுதான் கூறவேண்டும். அவ்வப்போது விக்கெட்டுகள் எடுப்பார், ஆக்ரோஷம் காட்டுவார். ஆனால் பெரிதாக வெற்றி பெறும் அளவிற்கு அவரிடம் ஆட்டம் இருக்காது.