விராத் கோலி RCB கேப்டன் பதவி விலக வேண்டும் என்று 5 காரணங்கள்..!

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மிஷன் என்று அழைக்கப்படும் கோலி, சச்சின் சாதனைகளை முறியடிக்க கூடிய ஒரே நபர் என்று கூறும் அளவிற்கு பெருமையை பெற்றுள்ளார். தற்போது இந்திய கேப்டனாக இருக்கும் கோலி தற்போது நடந்து வரும் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூரு அணியின் கேப்டனாகவும் இருந்துவருகிறார். ஆனால் கோலி பெங்களூரு அணியின் கேப்டன் பதவியிலிருந்து எதற்காக விலகவேண்டும் என்று ஒரு 5 காரணங்களை காணலாம்.

- Advertisement -

1.சிறப்பான ஆட்டக்காரர்களை தவறவிட்டது:- பெங்களூரு அணி இந்த ஆண்டு சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களை ஏலம் எடுக்கும் நிலையில் இருந்தது. ஆனால் ஏற்கனவேய அணியில் இருந்த அதிரடி ஆட்டக்காரர்களான கே எல் ராகுல் , கிரிஸ் கெய்லை கண்டுகொள்ளாமல் விட்டது. மேலும் அந்த அணியில் கோலி, டி வில்லியர்ஸ்க்கு பிறகு நம்பப்பட்ட சர்ஃபரஸ் கானும் சிறப்பாக ஜொலிக்கவில்லை.

2.அடிக்கடி அணியில் செய்த மாற்றங்கள்:- ஒரு சிறப்பான அணியை எடுத்துக் கொண்டால் அதில் அதிகப்படியான மாற்றங்களை செய்யக் கூடாது. அணியிலிருக்கும் ஆட்டக்காரர்களிடேயே இருக்கும் ஒற்றுமை என்பது மிக முக்கியம். மேலும் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டக்காரர்களான டிம் சௌதி, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை அடிக்கடி மாத்தினர் கோலி.

rcb

3. முன்னின்று அணியை வழிநடத்த தவறியது:- ஒரு கேப்டன் என்றால் அந்த அணியை முன்னின்று வழி நடத்த வேண்டும். ஆனால் இந்த ஐ.பி.எல் தொடரில் கோலி 14 போட்டிகளில் 530 ரன்களை எடுத்து சிறப்பாக விளையாடினாலும். அணியின் முக்கியமான கட்டத்தில் அவரது ஆட்டம் கைகொடுக்கவில்லை.

- Advertisement -

4. புதிய கேப்டன் , புதிய யுத்திகள்:- கோலி கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளாக பெங்களூரு அணியின் கேப்டனாக உள்ளார். ஆனால் 1 முறை கூட ஐ,பி.எல் கோப்பையை வென்றதில்லை. டெல்லி அணியில் கவுதம் காம்பிற்கு பதிலாக ஷ்ரேயஸ் ஐயர் தலைமை ஏற்றதும் அந்த அணி, நடப்பு சாம்பியனான மும்பையையே போட்டியில் இருந்து வெளியேற்றியது. இதனால் புதிய கேப்டன் அமைந்தால் அணியில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும்.

5.கேப்டன்களுக்கு பஞ்சமில்லை இந்த அணியில் திறமைவாய்ந்த வீரர்களானான பிரெண்டன் மெக்குள்ளம், டிவில்லியர்ஸ் போன்றவர்கள் அவரவர் அணியில் சிறப்பான கேப்டன்களாக இருந்துள்ளனர். அப்படி இருக்க ஏன் அவர்களை கேப்டன்களாக ஒரு மாற்றம் செய்ய்யக்கூடாது.

Advertisement