11 வது ஐ.பி.எல் தொடரின் இறுதி போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இன்று(மே27) நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கேன் வில்லியம்சனின் ஹைதராபாத் அணியும் பல பரிட்சை செய்யபோகும் இந்த போட்டியில் வெற்றிபெற போவது யார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தொடரில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த ஹைதராபாத் அணி, முதல் அணியாக பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெற்றது. இருப்பினும் இந்த தொடரில் ஒரு முறை கூட சென்னை அணியை வீழ்த்தாமல் உள்ளது. இன்று நடக்கவிருக்கும் இந்த போட்டியில் ஹைதராபாத் அணி சென்னை அணியை வெல்லக்கூடிய 5 காரணங்களை கொஞ்சம் ஆராய்ந்து பார்க்கலாம்.
முதல் காரணம்:-
ஹைதராபாத் அணியின் பந்து வீச்சு மிக சிறப்பாக இருந்து வருகிறது.அதிலும் குறிப்பாக அந்த அணியின் ஆப்கானிஸ்த்தான் சூழல் பந்து வீச்சாளர் ரஷீத் கான் அந்த அணியில் உள்ள ஒரு மிக பெரிய பலம் என்றே கூறலாம். மேலும் அந்த அணியில் உள்ள புவனேஸ்வர் குமார் டெத் ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி வருகிறார்.
இரண்டாவது காரணம்:-
கேட்சஸ் வின் தி மேட்சஸ் என்று கூறுவார்கள். அந்த வகையில் இந்த அணியின் பீல்டிங் மிக அற்புதமாக இருக்கின்றது.இந்த அணியில் உள்ள ஷிகர் தவான் 12 கேட்ச்களை பிடித்து முதல் இடத்தில் இருக்கிறார். அதே போன்று இந்த அணியின் விக்கெட் கீப்பரான ஷாஹாவும் பந்தை தன்னிடமிருந்து தவறவிடாமல் இருக்கிறார்.
மூன்றாவது காரணம்:-
பந்து வீச்சை போன்றே இந்த அணியின் பேட்டிங் வரிசையும் சீராக உள்ளது. இந்த அணியில் உள்ள கேன் வில்லலையம்சன், விருதிமன் சஹா, சாகிப் உல் ஹசன், யூசப் பதான் போன்ற பேட்ஸ்மேன்கள் என்று பலரும் இருக்கின்றனர். தற்போது இந்த வரிசையில் ரஷீத் காணும் சேர்ந்து அசதி வருகிறார்.
நான்காவது காரணம்:-
இந்த அணியின் மற்றொரு சிறப்பம்சமாக இருப்பது இந்த அணியின் கேப்டன் தான். நியூலாந்து கேப்டன் கென் வில்லியம்சன் ஹைதராபாத் அணியை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். ஆரம்பம் முதலே புள்ளி பட்டியலில் தனது அணியை முதல் இடத்தில் வைத்துவருவதோடு, 16 போட்டிகளில் 688 ரன்களை குவித்து அதிக ரன்கள் குவித்த பட்டியலில் முதல் இடத்திலும் இருக்கிறார்.
ஐந்தாவது காரணம்:-
ரஷீத் கான், இந்த அணியின் துடுப்பு சீட்டாக இருந்து வரும் ஒரு இளம் ஆள் ரௌண்டர். இவரது ஆட்டத்தை பற்றி கடந்த வெள்ளிக்கிழமை(மே 25)நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் கண்டு மிரண்டனர்.