தோனியின் தலைமையில் விளையாடி அப்பறம் வீணா போன 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Dhoni
- Advertisement -

எந்த ஒரு வீரராக இருந்தாலும் தன்னுடைய அணியின் கேப்டன் ஆதரவு தேவை. ஒரு சில வீரர்கள் அணியின் கேப்டன் ஆதரவு இருந்தால் மிகவும் நன்றாக விளையாடுவார்கள். அப்படி தோனியின் தலைமையில் தோனியின் ஆதரவுடன் நன்றாக விளையாடி அதன் பின்னர் சரியாக விளையாட முடியாமல் அணியை விட்டு வெளியேறிய வீரர்களை பார்ப்போம்.

Ishwar

- Advertisement -

ஈஸ்வர் பாண்டே :

உள்ளூர் போட்டிகளில் இவரது பெயர் மிகவும் பிரபலம். வேகப்பந்து வீச்சாளர் 2012ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் நன்றாக விளையாடி அதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எடுக்கப்பட்டார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனியின் தலைமையில் 23 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஆனால் அதன் பின்னர் இவரால் பெரிதாக விளையாட முடியவில்லை.

jagati 1

சதாப் ஜகாடி :

- Advertisement -

இவர் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2009 ஆம் ஆண்டு விளையாடினார். தோனியின் தலைமையில் மட்டும் விளையாடி 13 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

பவன் நெகி :

- Advertisement -

இவரும் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஆவார் தோனியின் தலைமையில் 2017 ஆம் ஆண்டு களமிறக்கப்பட்டார். 12 போட்டிகளில் பந்து வீசி 16 விக்கெட்டுகள் வீழ்த்தினார் .அதன் பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு சென்று இவரால் விராட் கோலியின் தலைமையில் சரியாக ஆட முடியவில்லை.

Joginder 1

ஜோகிந்தர் சர்மா :

- Advertisement -

2007ம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரின் இறுதி போட்டியில் வென்று கொடுத்த காரணத்திற்காக 2008ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவர் எடுக்கப்பட்டார். 2011ஆம் ஆண்டு வரை விளையாடினால் இவர் 16 ஆம் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Mohith 1

மோகித் சர்மா :

2013-ம் ஆண்டு ரஞ்சி கோப்பை தொடரில் 37 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2014 ஆம் ஆண்டு மட்டும் மொத்தம் 23 விக்கெட்டுகள் தோனியின் தலைமையில் வீழ்த்தியிருந்தார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடருக்கு இவர் தேர்வு செய்யப்பட்டார் அதன் பின்னர் இவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

Advertisement