இந்த ஐ.பி.எல் தொடரோடு மூட்டையை கட்டும் 5 சர்வதேச வீரர்கள் – லிஸ்ட் இதோ

Tahir
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நூற்றுக்கணக்கான வீரர்கள் வருடாவருடம் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதே போல் ஒவ்வொரு வருடமும் ஒரு சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து விடைபெற்று சென்று கொண்டிருக்கிறார்கள். அப்படி இந்த வருடம் ஐபிஎல் தொடரில் ஆடி விட்டு விடைபெற கூடிய 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்

Gayle

- Advertisement -

கிறிஸ் கெய்ல் :

இவர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய மூன்று அணிக்காக ஐபிஎல் தொடரில் ஆடியிருக்கிறார். தற்போது இவருக்கு 41 வயதாகிறது. ஐபிஎல் தொடரில் பல சாதனைகள் படைத்து விட்டார். இந்த வருடம் வயது மூப்பின் காரணமாக இவர் ஓய்வு பெற வாய்ப்பிருக்கிறது.

Tahir

இம்ரான் தாஹிர் :

- Advertisement -

இவர் ஐபிஎல் தொடரில் புனே மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருக்கிறார். மொத்தம் 6 தொடர்களில் விளையாடி 79 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இவருக்கு 41 வயதாகிறது. இவருக்கும் வயதாகி விட்டதன் காரணமாக இந்த வருடம் ஓய்வு பெறுவார் என்று தெரிகிறது.

Steyn-1

டேல் ஸ்டெயின் :

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பல்வேறு அணிகளாக ஆடியிருக்கும் வேகப்பந்து வீச்சாளர் இவர் 92 ஐபிஎல் போட்டிகளில் ஆடி 96 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். இவருக்கு தற்போது 37 வயதாகி விட்டது இந்த முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆட இருக்கிறார். இதுதான் அவரது இறுதி ஐபிஎல் தொடராக இருக்கும்.

Mishra

அமித் மிஸ்ரா :

- Advertisement -

இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர்களில் இவரும் ஒருவர் பல்வேறு அணிகளுக்காக ஆடியிருக்கும் இவர் ஐபிஎல் தொடரில் 157 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். தற்போது இவருக்கு 38 வயதாகிறது. இந்த வருடம் டெல்லி கேப்பிடல் அணிக்காக கடைசியாக ஆடப் போகிறார் என்று பலரும் பேசி வருகிறார்கள்.

Harbhajan

ஹர்பஜன் சிங் :

சென்னை அணியில் இருக்கும் மற்றொரு மூத்த வீரர் இவர் சுழற்பந்து வீச்சாளர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி கொண்டிருக்கிறார். அவருக்கு 39 வயதாகிவிட்டது. தோனி இந்த வருடம் கடைசி ஐபிஎல் தொடரில் ஆடாவிட்டாலும் இவருக்கு இந்த வருடம்தான் கடைசியில் தொடராக இருக்கும் என்று தெரிகிறது.

Advertisement