- Advertisement -
இந்திய கிரிக்கெட்

IND vs ENG : தோல்விக்கு நீங்களே பொறுப்பு, இந்தியாவின் வெற்றியை தாரை வார்த்த 5 முக்கிய வீரர்கள் – நடவடிக்கை எடுக்கப்படுமா?

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்ற 5-வது போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா பரிதாபமாக தோல்வியடைந்தது. 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த அந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. அதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா போராடி 416 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 146 ரன்களும் ரவீந்திர ஜடேஜா 104 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் 284 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக சதமடித்த ஜானி பேர்ஸ்டோ 106 ரன்கள் குவித்தார். அதனால் 132 ரன்களை முன்னிலையாக பெற்ற இந்தியா 400க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-வது இன்னிங்ஸ்சில் அஜாக்கிரதையாக பேட்டிங் செய்து வெறும் 245 ரன்களுக்கு சுருண்டது.

- Advertisement -

பறிபோன வாய்ப்பு:
அதிகபட்சமாக புஜாரா 66 ரன்களும் பண்ட் 50 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 378 என்ற கடினமான இலக்கை துரத்திய இங்கிலாந்து தொடக்க வீரர்களின் அதிரடியால் 107/0 என்ற வலுவான தொடக்கத்தை பெற்றது. அப்போது அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து இந்தியா போராடியது. ஆனால் அதன்பின் சுமாராக பந்து வீசியதை பயன்படுத்திய ஜோ ரூட் சதமடித்து 142* ரன்களும் ஜானி பேர்ஸ்டோ 114 ரன்களும் குவித்து தோல்வியை பரிசளித்தனர். இதனால் 2 – 2 என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இங்கிலாந்து சொந்த மண்ணில் கில்லி என நிரூபித்தது.

மறுபுறம் முதல் 3 நாட்களில் அபாரமாக செயல்பட்டு கடைசி 2 நாட்களில் சொதப்பிய இந்தியா 2007க்கு பின் இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் அருமையான வாய்ப்பை கோட்டை விட்டது. கடைசி போட்டியை ட்ரா செய்திருந்தாலே 2 – 1 என்ற கணக்கில் வென்றிருக்கலாமே என்பதுதான் இந்திய ரசிகர்களின் நெஞ்சை உடைக்கிறது. அப்படி டிரா செய்ய முடியாத அளவுக்கு இந்தியாவின் வெற்றியை தாரை வார்க்க முக்கிய காரணமாக இருந்த வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. விராட் கோலி: முதல் 4 போட்டிகளில் அற்புதமாக வழிநடத்தி முன்னிலை பெற்று கொடுத்த விராட் கோலிக்கு இம்முறை கேப்டனாக இல்லாமல் விட்டாலும் கேப்டனாக பெற்றுக் கொடுத்த வெற்றியை பேட்ஸ்மேனாக பினிஷிங் வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு ஏற்பட்டது. மேலும் ஏற்கனவே 3 வருடங்களாக சதமடிக்க முடியாமல் திணறும் அவர் இப்போட்டியில் கேப்டன்ஷிப் அழுத்தமில்லாமல் சுதந்திர பறவையாக விளையாடி சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

அத்துடன் ரோகித் சர்மா, கேஎல் ராகுல் என்ற 2 முக்கிய வீரர்கள் இல்லாத பொறுப்பை தனது தோள் மீது சுமக்க வேண்டிய நிர்பந்தமும் அவருக்கு ஏற்பட்டது. ஆனால் எந்த பொறுப்பையும் உணராத அவர் முதல் இன்னிங்சில் வழக்கம்போல அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் பந்தை அடிக்க முயன்று போல்டாகி சென்றார்.

- Advertisement -

சரி சதமடிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு அடிப்பாரா என்று எதிர்பார்க்கப்பட்ட 2-வது இன்னிங்சிலும் 20 ரன்களில் அவுட்டாகி தாம் கேப்டனாக உருவாக்கிய வெற்றியை தாமே வீணாக முக்கிய பங்காற்றினார். அதைவிட புஜாரா போல் முதல் இன்னிங்சில் மெதுவாக பேட்டிங் செய்து கொண்டிருந்த பேர்ஸ்டோவை தேவையின்றி ஸ்லெட்ஜிங் செய்து 106 ரன்கள் அடிக்க வைத்த பெருமையும் இவரையே சேரும்.

2. ஹனுமா விஹாரி: ரகானே இருந்ததால் இத்தனை நாட்களாக தொடர்ச்சியாக வாய்ப்பு கிடைக்காத இவர் தற்போது கிடைத்த பொன்னான வாய்ப்பை அதுவும் முக்கியமான 3-வது இடத்தில் களமிறங்கி 20, 11 என 50 ரன்களை கூட தாண்டாமல் வீணடித்தார்.

- Advertisement -

அதுவும் 2-வது இன்னிங்சில் வெறும் 18 ரன்கள் எடுத்திருந்த ஜானி பேர்ஸ்டோ கொடுத்த அழகான கேட்சை கோட்டை விட்டதால் பின்னர் 114* ரன்கள் குவிக்க காரணகர்த்தாவாக இருந்த இவர் எதற்காக இப்போட்டியில் விளையாடினோம் என்று அவரின் மனதை அவரே கேட்டுக்கொள்ளட்டும்.

3. சுப்மன் கில்: கேஎல் ராகுல் இடத்தில் விளையாடுகிறோம் என்ற பொறுப்பில்லாமல் 17, 4 என 2 இன்னிங்சிலும் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் சிக்கிய இளம் வீரரான இவர் குறைந்தது ஒரு இன்னிங்சில் அரைசதம் அடித்திருந்தால் கூட இந்தியா வெற்றிக்காக மேலும் போராடியிருக்கும்.

4. ஷ்ரேயஸ் ஐயர்: சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அசத்தியதால் முதல்முறையாக வெளிநாட்டு மண்ணில் களமிறங்கும் வாய்ப்பைப் பெற்ற இவர் 15, 19 என 2 இன்னிங்சிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படவில்லை.

அதுவும் தனது முன்னாள் ஐபிஎல் பயிற்சியாளர் பிரென்டன் மெக்கலம் வைத்த ஷார்ட் பிட்ச் பொறியில் எலியை போல இவர் சிக்கியது இந்திய ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

5. ஷார்துல் தாகூர்: இங்கிலாந்து மண்ணில் வேகப்பந்து வீச்சு ஏற்படும் என்ற காரணத்தாலும் கடந்த வருடம் கொடுக்கப்பட்ட வாய்ப்பில் அசத்தினார் என்பதால் அஷ்வின் என்ற நம்பர் ஒன் சுழல் பந்து வீச்சாளரை உட்கார வைத்துவிட்டு மீண்டும் இவருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது.

ஆனால் 1, 4 என 2 இன்னிங்சிலும் சேர்த்து மொத்தமாக 5 ரன்கள் எடுத்த இவர் பந்துவீச்சில் 6.86, 5.91 என 2 இன்னிங்சிலும் 5க்கும் மேற்பட்ட எக்கனாமியில் வள்ளல் பரம்பரையாக ரன்களை வாரி வாரி வழங்கினார். இவரின் பேட்டிங்கை விட மோசமான பந்து வீச்சே இந்தியாவின் தோல்விக்கு முக்கிய பங்காற்றியது.

இந்தியாவின் தோல்விக்கு இந்த 5 வீரர்கள் தான் முழுமுதற்பொறுப்பாகும். இதில் விராட் கோலி போன்றவர்கள் கேள்வி கேட்கப்படுவார்களா அல்லது ராகுல் டிராவிட் நடவடிக்கை எடுப்பாரா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

பாதி சொதப்பல்:
1. புஜாரா: 3 வருடங்களாக சதம் அடிக்கவில்லை என்பதால் கடுப்பாகி கழற்றிவிடப்பட்ட இவர் கவுண்டி தொடரில் அசத்தி கம்பேக் கொடுத்த நிலையில் 13, 66 என 2 இன்னிங்சிலும் சுமாராக விளையாடி தனது இடத்தை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு மட்டுமே செயல்பட்டாரே தவிர இந்தியா வெற்றி பெறும் அளவுக்கு செயல்படவில்லை.

இதையும் படிங்க : IND vs ENG : நாளைய முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதுதான் – லிஸ்ட் இதோ

2. ரவீந்திர ஜடேஜா: முதல் இன்னிங்ஸ்சில் 98/5 என சரிந்த இந்தியாவை ரிஷப் பண்ட் உடன் இணைந்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து செங்குத்தாக தூக்கி நிறுத்தி பேட்டிங்கில் 104 ரன்கள் குவித்த இவருக்கு பாராட்டுக்கள். ஆனால் உலகின் நம்பர் ஒன் ஆல்-ரவுண்டராக இருக்கும் இவர் இப்போட்டியில் பவுலராக ஒரு விக்கெட் கூட எடுக்காதது இந்தியாவுக்கு தோல்வியை கொடுத்தது.

- Advertisement -
Published by