கடைசி ஐபிஎல் விளையாடும் 5 வெளிநாட்டு வீரர்கள்..! – சென்னை வீரர் யார் தெரியுமா?

- Advertisement -

ஐ.பி.எல் போட்டிகள் 10 சீசன்களை தாண்டி 11 வது நடந்து கொண்டிருக்கிறது. இதன் முக்கிய நோக்கம் கிரிக்கெட்டில் திறமையான இளைஞசர்களை இனம் கண்டு அவர்களை இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடுவதற்கு பக்குவப்படுத்துவது தான் என்றாலும். இந்த ஐ. பி. எல் போட்டிகளில் பல்வேறு நாட்டில் இருக்கும் கிரிக்கெட் அணி வீர்க்ர்களும் கலந்து கொள்கின்றனர். அதில் ஒரு சில கிரிகேட்டருக்கு தற்போது நடந்து வரும் ஐபி.எல் தொடர் இறுதியாகவும் இருக்கலாம். அந்த வருசையில் டாப் 5 இடத்தில் இருக்கும் நபர்களை பின்வரும் பட்டியலில் காணலாம்.

danial

- Advertisement -

டேனியல் கிறிஸ்டைன்:-
ஆஸ்திரேலியா ஆல் ரௌண்டரான இவர் அந்த அணியின் அவ்வளவாக ஜொலிக்கவில்லை. ஆனால் இந்த ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணியில் ஆடிவரும் இவர், இந்த ஐ.பி.எல் தொடரிலும் தனது திறமையை நிரூபிக்கவில்லை. இதுவரை 4 போட்டிகளில் 4 விக்கெட்டை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மேலும் பேட்டிங்கில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ரன்களை குவிக்கவில்லை.

பேன் பென் லாகஹ்லின்:-
36 வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் இந்த ஆஸ்திரேலிய வீரர் தற்போது ராஜஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். பிக் பேஷ் தொடரில் சிறப்பாக விளையாடிய இந்த சூழல் பந்து வீரர் இந்த ஐ.பி.எல் தொடரில் 5 போட்டிகளில் விளையாடி 5 விக்கட்டுகளை எடுத்துள்ளார். ஆனால் ரன்களை கொடுப்பதில் வள்ளலாக இருந்ததால் இவர் அணியில் இருந்து எடுக்கப்பட்டுள்ளார்.

tahir

இமரான் தாஹிர்:-
இவர் பந்து வீசும் போது ஓடும் தூரத்தை விட விக்கெட் எடுத்தால் மகிழ்ச்சியில் ஓட்டும் தூரமே அதிகம். தென் ஆப்பிரிக்கா அணியின் சிறந்த சூழல் பந்து வீச்சாளர், தற்போது சென்னை அணியில் விளையாடிவருகிறார். தான் எதிர்க்காக வந்தோம் என்று மறந்துவிட்டு தமிழ் புலவராக மாற முயற்சி செய்கிறாரோ எண்னவோ. இந்த தொடரில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட இம்ரான் தாஹிர் 6 போட்டிகளில் 6 விக்கட்டுகளை மட்டுமே விழ்த்தியுள்ளார்.

- Advertisement -

மிச்சேல் ஜான்சன்:-
கடந்த ஐ.பி.எல் போட்டிகளில் மும்பை,கொல்கத்தா போன்ற அணிகளில் விளையாடிய இவர் இந்த ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணியால் 2 கோடி ரூபாய் என்ற நிர்ணய தொகைக்கே ஏலம் எடுக்கப்பட்டார். 37 வயதாகவும் இவர் இந்த ஐ.பி.எல் தொடரில் 6 போட்டிகளில் விளையாடி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். மேலும் ரன் விகிதத்தை எடுத்துக் கொண்டால் அதுவும் 10.28 என்று தான் இருக்கிறது.

mithel

பிரண்டன் மெக்கல்லம்:-

ஐ.பி.எல் வரலாற்றில் முதல் சத்தத்தை அடித்த வீரர், தனது முதல் போட்டியிலே 73 பந்துகளில் 158 ரன்களை குவித்தார். தற்போது நடந்து வரும் ஐ.பி.எல் தொடரில் 6 போட்டிகளில் 127 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். வரும் 2018 செப்டம்பருடன் தனது 37 வயதை பூர்த்தி செய்யும் இவர், அடுத்த ஐ.பி.எல் தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான்.

Advertisement