தொடர்ந்து சொதப்பும் பண்டிற்கு பதிலாக தயாராகவுள்ள அடுத்த 5 விக்கெட் கீப்பர்கள் – லிஸ்ட் இதோ

Pant

ரிஷப் பண்ட்க்கு மாற்றாக பல விக்கெட் கீப்பர்கள் இருக்கிறார்கள். தோனிக்கு மாற்றாக இவர் வந்தாலும் அவருக்கு மாற்றாக இன்னும் சில விக்கெட் கீப்பர்கள் அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அப்படி பண்டிற்கு பதிலாக இந்திய அணியில் சேர்க்கப்பட வாய்புள்ள வீரர்களை தற்போது பார்ப்போம்.

saha

விருத்திமான் சஹா :

இவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் நிரந்தர கீப்பராக இருக்கிறார். தோனிக்கு பின்னர் இவர் தான் அவரது இடத்தை நிரப்பி இருக்கிறார். ரிஷப் பந்த் சொதப்பினால் இவரை ஒரு நாள் போட்டியிலும் ஆட வைக்கலாம்.

samson

சஞ்சு சாம்சன் :

- Advertisement -

இவர் ரிஷப் பண்டிற்கு முன்னரே இந்திய அணிக்காக அறிமுகம் ஆசிவிட்டார். ஐபிஎல் தொடரில் பட்டையை கிளப்பியுள்ளார் .இந்த வருடம் ரிஷப் பண்ட் ஒழுங்காக ஆகவில்லை என்றால் இவர்தான் அடுத்த விக்கெட் கீப்பராக வருவார்.

இஷான் கிஷான் :

இவருக்கு இந்திய அணியில் இன்னும் இடம் கிடைக்கவில்லை. ஆனால் மும்பை அணிக்காக சிறப்பாக ஆடிவரும் இவருக்கு எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்திய அணிக்காக ஆடும் திறமை பெற்றிருக்கிறார். மற்றவர்கள் எல்லாம் சொதப்பி விட்டால் இவருக்கு தான் அந்த இடம்.

Karthik

தினேஷ் கார்த்திக் :

தற்போது இவருக்கு 33 வயதாகிறது இருந்தாலும் தொடர்ந்து போராடி வருகிறார் உள்ளூர் போட்டிகளில் நன்றாக ஆடும் பட்சத்தில் இந்திய அணியில் இடம் பெறலாம். அனுபவ விக்கெட் கீப்பரான இவருக்கு இன்னும் சில ஆண்டுகள் வாய்ப்பு கொடுக்கலாம் என்று பலரும் கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகர் பாரத் :

இந்திய ஏ அணிக்காக தொடர்ந்து நன்றாக விளையாடி வருபவர். இவர் உள்ளூர் போட்டிகளில் தற்போது உள்ள மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் இவர்தான். இவர்கள் அனைவரும் சொதப்பினால் இந்திய விக்கெட் கீப்பர் அடுத்ததாக இவர்தான் இடம் பிடிப்பார்.