சுரேஷ் ரெய்னாவிற்கு பதிலாக சி.எஸ்.கே அணியில் இடம்பிடிக்க வாய்ப்புள்ள 5 இந்திய வீரர்கள் – லிஸ்ட் இதோ

Tiwary

ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா விலகியுள்ளார். அவர் இத்தொடரில் இருந்து விலகியது சி.எஸ்.கே அணிக்கு ஏற்பட்ட பலத்த அடியாக பார்க்கப்படுகிறது. இது குறித்து பல செய்திகள் வந்து கொண்டு இருக்கிறது. எப்படி இருந்தாலும் அவருக்கு மாற்றாக ஒரு வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தேடியாக வேண்டும் தற்போது அப்படிப்பட்ட 5 வீரர்களை பார்ப்போம்.

vihari

ஹனுமா விஹாரி :

இவர் 2013ம் ஆண்டு ஹைதராபாத் அணிக்காக 24 போட்டிகளில் விளையாடி 274 ரன்கள் குவித்திருக்கிறார். தற்போது இதற்கு 26 வயதாகிறது. 2019ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல் அணிக்காக விளையாடினார். தற்போது ஐபிஎல் தொடரில் எடுக்கப்படவில்லை. இவர் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அதனால் இவருக்கு வாய்ப்பு இருக்கிறது.

Yusuf 1

யூசப் பதான் :

- Advertisement -

2008ஆம் ஆண்டிலிருந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, அதன்பின்னர் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய அதிரடி வீரர். தற்போதுவரை 174 போட்டிகளில் விளையாடி 3204 ரன்கள் குவித்திருக்கிறார். 42 விக்கெட்டுகளை எடுத்து இருக்கிறார்.

Kadam

ரோகன் கடம்

இவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த உள்ளூர் வீரராவார். 26 வயதாகிறது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளூர் சையது முஷ்டாக் அலி கோப்பை தொடரில் 794 ரன்கள் அடித்திருந்தார். இந்த வருட ஐபிஎல் தொடரில் இவர் எடுக்கப்படவில்லை. இவர் ரெய்னாவுக்கு மாற்றாக வர வாய்ப்பு இருக்கிறது.

மனோஜ் திவாரி

சரியான வாய்ப்பில்லாமல் இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்றவர். இவர் டோனி தலைமையில் ஏற்கனவே அணிக்காக விளையாடி இருக்கிறார். தற்போது ஓய்வு பெற்றுவிட்டாலும் நல்ல பார்மில் தான் இருக்கிறார் இவருக்கும் வாய்ப்பு இருக்கிறது.

Akshdeep

அக்ஸ் தீப் நாத் :

இவர் உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் ஆவார். 2016 ஆம் ஆண்டு சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் அணிக்காக விளையாடினார். அதுமட்டுமின்றி கோலி தலைமையிலான பெங்களூரு அணியிலும் விளையாடி இருக்கிறார். இவரும் ஒரு மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் இவருக்கும் அந்த வாய்ப்பு இருக்கிறது.