இவங்க கூட இந்திய டி20 அணியில் விளையாடி இருக்காங்களா ? பலரும் அறியாத 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Agarkar-2
- Advertisement -

சர்வதேச அணியான இந்திய அணி டி20 கிரிக்கெட் தொடர் அறிவித்ததற்கு பின்னர் மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. 2007 ஆம் ஆண்டு இந்திய அணி முதல் டி20 உலகக் கோப்பையை வென்றுள்ளது. ஐபிஎல் போன்ற உள்ளூர் போட்டிகளில் தனது திறமையை வெளிப்படுத்தி டி20 சர்வதேச இந்திய அணியில் இடம் பெற்று, அதை தக்க வைத்துக் கொள்ள தெரியாமல் பல கிரிக்கெட் வீரர்கள் அணியில் இருந்து வெளியேறி உள்ளனர். தற்போது சர்வதேச டி20 தொடரில் ஒருமுறை மட்டும் விளையாடிய 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்.

agarkar 3

- Advertisement -

அஜித் அகர்கர் :

அஜித் அகர்கர், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணனையாளர் ஆவார். 1998ல் டெஸ்ட் தொடர் மூலம் இந்திய அணிக்காக அறிமுகமாகிய ஆல்ரவுண்டர் அஜித் அகர்கர் தற்போது சோனியின் கிரிக்கெட் நிபுணராக பணியாற்றி வருகிறார். 2006ல் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தனது முதல் டி20 தொடரில் விளையாடி உள்ளார். இவர் இந்திய அணிக்காக 4 டி 20 போட்டிகளை விளையாடி உள்ளார். அந்த நான்கு போட்டிகளிலும், அகர்கர் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார், மேலும் ஒரு மெய்டன் ஓவரை வீசி உள்ளார். அவர் தனது கடைசி டி20 தொடரை நியூசிலாந்திற்கு எதிராக விளையாடியுள்ளார்.

Mongia

தினேஷ் மோங்கியா :

- Advertisement -

தினேஷ் மோங்கியா, இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் 57 ஒருநாள் மற்றும் 1 டி20 போட்டியில் மட்டுமே விளையாடியுள்ளார். 43 வயதான இவர் 2006 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தனது முதல் மற்றும் கடைசி டி 20 போட்டியில் விளையாடியுள்ளார். இந்த தொடரில் அவர் 38 ரன்களை குவித்துள்ளார். இவர் 84.4 சராசரியை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

murali 1

முரளி கார்த்திக் :

- Advertisement -

முரளி கார்த்திக், இந்திய அணியின் இடது கை சுழல் பந்து வீச்சாளர். 2000ல் இந்திய அணிக்காக அறிமுகமாகி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என மூன்று வடிவத்திலும் விளையாடியுள்ளார். 2007ம் ஆம் ஆண்டு இந்திய சர்வதேச டி20 தொடரில் இடம்பெற்றார். அவர் 4 ஓவர்களை வீசி 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து இருந்தார். அந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியையும் பெற்றிருந்தது. அந்த போட்டிக்கு பிறகு வேறு எந்த சர்வதேச டி20 தொடரிலும் இவர் விளையாடவில்லை.

naman ojha 3

நமன் ஓஜா :

- Advertisement -

நமன் ஓஜா, இந்திய அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஆவார். இவர் 2010 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் தொடரின் மூலம் இந்தியில் அறிமுகமாகினார். இதைத்தொடர்ந்து அந்த ஆண்டே டி20 தொடரிலும் ஜிம்பாவே அணிக்கு எதிராக அறிமுகமாகினார். இதில் தனது திறமையை வெளிப்படுத்தவில்லை. தனது முதல் டி20 தொடரில் வெறும் 10 ரன்கள் மட்டுமே எடுத்து 44.44 சராசரியை பெற்றிருந்தார். இதனால் இவர் மீண்டும் இந்திய அணி டி20 தொடரில் விளையாட முடியவில்லை.

Arvind

ஸ்ரீநாத் அரவிந்த் :

ஸ்ரீநாத் அரவிந்த், ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 2015ம் ஆண்டு தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இந்திய டி20 அணியில் இடம் பெற்றார். இவர் இடது கை நடுத்தர வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இவர் தனது அறிமுக ஆட்டத்தில் 3.4 ஓவர்கள் வீசி 44 ரன்களை விட்டுகொடுத்து 1 விக்கெட் எடுத்துள்ளார். இவரது மோசமான பந்து வீச்சால் தென்ஆப்பிரிக்கா அணி சுலபமாக தனது வெற்றியை நிலைநாட்டியது. இதன் பிறகு இவர் மீண்டும் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

Advertisement