இந்தியாவில் வாய்ப்பு கிடைக்காமல் வெளிநாட்டு அணியில் விளையாடும் 5 இந்தியர்கள் – லிஸ்ட் இதோ

Ansari
- Advertisement -

இந்தியாவில் ஏகப்பட்ட திறமையான கிரிக்கெட் வீரர்கள் இருந்தாலும் கடும் போட்டிக்கு இடையே சிலருக்கு தான் தேசிய அணியில் இடம் கிடைக்கிறது. இதனால் பல இந்திய வீரர்கள் தங்களது சொந்த மாநிலத்தில் உள்ளூர் போட்டிகளில் ஆடிவிட்டு இந்திய சீனியர் அணியில் இடம் கிடைக்காமல் வெளிநாடுகளுக்குச் சென்று அந்த நாட்டின் அணிகளுக்காக சர்வதேச போட்டிகளில் ஆடி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட 5 வீரர்களை தற்போது பார்ப்போம்.

Chandran

- Advertisement -

கிருஷ்ணா சந்திரன் :

இவர் கேரளாவை சேர்ந்தவர். கேரளாவில் உள்ளூர் போட்டிகளில் விளையாடினார். அதன் பின்னர் இந்திய அணியில் இதற்கு இடம் கிடைக்கவில்லை. ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அந்த நாட்டிற்காக தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறார். அந்த நாட்டிற்காக தற்போது வரை 12 ஒருநாள் போட்டிகளில் ஆடி 134 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளும் எடுத்து இருக்கிறார்.

Patil

சுவப்னில் பாட்டில் :

- Advertisement -

இவர் மும்பை அணிக்காக 19 வயதுக்குட்பட்டோருக்கான அணியில் ஒரு பேட்ஸ்மேனாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு இந்தியாவில் இடம் கிடைக்கவில்லை. 2014ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று அந்த நாட்டிற்காக தற்போது வரை ஆடி வருகிறார் தற்போது வரை 13 ஒருநாள் போட்டிகளிலும் 18 டி20 போட்டிகளிலும் அந்த அணிக்காக ஆடி இருக்கிறார்.

jeet

ஜீத் ரவல் :

- Advertisement -

இவர் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவர். தனது 19 வயது வரை குஜராத் அணிக்காக விளையாடினார். பியூஸ் சாவ்லா, இஷாந்த் ஷர்மா, ரவிந்திர ஜடேஜா ஆகியோர் உடன் விளையாடி இருக்கிறார். அதன் பின்னர் நியூசிலாந்து நாட்டிற்கு சென்று அந்த நாட்டிற்காக தற்போது வரை விளையாடி வருகிறார். 24 டெஸ்ட் போட்டிகளில் தற்போது வரை அவர் நியூசிலாந்து அணிக்கு ஆடியிருக்கிறார்.

munis

முனீஸ் அன்சாரி :

- Advertisement -

மலிங்காவை போல பந்து வீசக்கூடியவர். இந்திய அணியில் இடம் கிடைக்காததால் ஓமன் நாட்டிற்கு சென்று தற்போது அந்த நாட்டுக்காக விளையாடி வருகிறார். தற்போது வரை அந்த நாட்டிற்காக 11 டி20 போட்டிகளில் அடி 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

sakthi

சக்தி கவுச்சன் :

இவர் மும்பை அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடியவர் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டர். இவர் உண்மையில் நேபாளத்தைச் சேர்ந்தவர் மும்பையில் கிரிக்கெட்டை கற்றுக்கொண்டு அதன்பின்னர் தாய் நாட்டிற்குச் சென்று அங்கு ஆடி வருகிறார்.

Advertisement