வெளிநாட்டு வீரர்களுடன் நெருக்கமான நட்பு வைத்திருக்கும் 5 இந்திய வீரர்கள் – இதில் உங்க பேவரைட் ஜோடி யாரு ?

ABD

கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் விளையாட்டு என்று பலரும் கூறுவது உண்டு அந்த வகையில் தற்போது உலகெங்கும் உள்ள வீரர்கள் ஐபிஎல் தொடரில் ஒன்றிணைந்து விளையாடுவதன் மூலம் நல்ல நட்பினை வளர்த்து வருகின்றனர். மேலும் இந்த நட்பானது தேசிய அணிக்காக எதிர்த்து விளையாடும் போதும் வெளிப்படுகிறது. தங்களது நட்பை நாடுகள் கடந்து மைதானங்களில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஐபிஎல் தொடரில் விளையாடி தேசங்களை கடந்து தங்களுக்குள் நெருங்கிய நட்பு வைத்திருக்கும் 5 இந்திய வீரர்கள் குறித்து இந்த பதிவில் காணலாம் வாருங்கள்.

nattu 1

வார்னர் – நடராஜன் :

- Advertisement -

இந்திய அணியின் வளர்ந்துவரும் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக பந்துவீசி ரசிகர்களை மட்டுமின்றி சன் ரைசர்ஸ் அணியின் கேப்டனான டேவிட் வாரனரின் மனதையும் மிகவும் கவர்ந்தார். 13வது ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய இவர் வார்னருடன் நல்ல நட்பில் இருந்தார். அதனை தொடர்ந்து அவர் ஆஸ்திரேலியா செல்லும் போதும் நடராஜன் மற்றும் வார்னர் ஆகியோர் களத்தில் தங்களது நட்பினை வெளிப்படுத்தியது நன்றாக தெரிந்தது.

abd 1

ஏபி டிவில்லியர்ஸ் – விராட் கோலி :

- Advertisement -

இவர்கள் இருவரும் இணைந்து பல ஆட்டங்களில் பெங்களூரு அணியை வெற்றி பெறச் செய்துள்ளனர். இவர்களது பார்ட்னர்ஷிப் அனைத்து கிரிக்கெட் வீரர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் கிரிக்கெட்டில் மட்டுமில்லாமல் வாழ்க்கையிலும் இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் அவர்கள்

தங்களின் நட்பு குறித்து டிவில்லியர்ஸ் சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். அதில் அவர் நான் ஒருமுறை உனது ஷூமிகவும் அழகாக உள்ளது என்றேன். உடனே அடுத்த நிமிடத்தில் அவர் எனக்கு அதை பரிசளித்தார். அதுபோல ஒருமுறை எனக்கு காபி பிடிக்கும் என்றேன் காபி இயந்திரத்தை பரிசாக அளித்தார் என்று குறிப்பிட்டிருந்தார். இவர்களது நட்பு பல கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து இளைஞர்களுக்கும் மிகவும் பிடித்த நட்பு உறவாகும்.

Bumrah

ஜஸ்பிரித் பும்ரா – லசித் மலிங்கா :

மும்பை இந்தியன் அணியால்2013ம் ஆண்டு ஜஸ்பிரித் பும்ரா வாங்க பட்டார். தொடக்க காலங்களில் கஷ்டப்பட்ட பும்ராவுக்கு ஆறுதலாக லசித் மலிங்கா இருந்தார். பந்துகளை எப்படி வீச வேண்டும் என்று பும்ராவுக்கு மலிங்கா கற்றுக் கொடுத்தார். அது தொடங்கி இன்றுவரை பும்ராவுக்கு மலிங்கா ஒரு நல்ல குருவாக இருந்து வருகிறார்.

சென்ற ஆண்டு தன் ரிட்டயர்மென்ட்டை மலிங்கா அறிவித்த பொழுது பும்ரா தனது
ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டார்.அதில் எப்போதும் நீங்கள் எனக்கு ஒரு நல்ல குருவாக இருந்து வந்தீர்கள்.நீங்கள் இல்லாத ஐபிஎல் எனக்கு மிக வித்தியாசமாக இருக்கும் என்று ஆனந்தக் கண்ணீருடன் தனது வார்த்தைகளை உள்ளடக்கி பதிவு இட்டிருந்தார்.

kohli

விராட் கோலி – கிறிஸ் கெய்ல் :

2008ஆம் ஆண்டில் இருந்து பெங்களூர் அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார். 2011ம் ஆண்டு கிறிஸ் கெய்ல் பெங்களூர் அணியால் வாங்க பட்டார். அப்போதிலிருந்து இருவரும் நண்பர்கள் ஆனார்கள். போட்டியில் எப்போதும் நகைச்சுவையுடன் ஆடி வருவார்கள். மைதானத்தில் மட்டுமின்றி வெளியே நன்றாக நெருங்கி பழகினார்கள்.

2019ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி விளையாடியபோது கோலி மற்றும் கெய்ல் ஒரு நடனம் போட்டார்கள். அந்த நடன வீடியோவலைதளங்களில் பெரிதாக பரவ பட்டு பல லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் பெற்றது.

pandya

ஹர்டிக் பாண்டியா – கீரன் பொல்லார்டு :

இவர்கள் இருவரும் இணைந்து ஆடினாலே பந்துவீச்சாளர்களுக்கு அல்லு விடும். மும்பை இந்தியன்ஸ் அணியில் தற்போதைய சிறந்த மேட்ச் ஃபினிஷிங் வீரர்கள் இவர்கள் இருவரே ஆவர். இவர்கள் இருவரும் இணைந்து வெளியே பார்ட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளுக்கு போய் வருவார்கள். இவர்களுக்குள் அந்த அளவுக்கு நட்பு உள்ளது.தற்போது குடும்ப ரீதியாகவும் இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கி விட்டார்கள்.

ஒரு பேட்டியில் பாண்டியா பற்றி கேட்டபொழுது பொல்லார்ட் கூறுகையில் : பாண்டியா மிகவும் தைரியசாலி அவரை எல்லோருக்கும் மிக எளிதில் பிடித்து விடும். அவர் நன்றாக எல்லோரிடமும் பழகுவார் அவர் ஒன்று நினைத்தால் அதை எந்த பயமுமின்றி செய்து முடிப்பார் என்று பாண்டியா பற்றி பெருமை பொங்க பேசியுள்ளார்.

Advertisement