இப்படி ஒரு மோசமான ஆட்டத்தையா ஆடுவீங்க? டெஸ்ட் வரலாற்றில் மோசமான சாதனையை நிகழ்த்திய – இந்திய அணி

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது நேற்று அக்டோபர் 16-ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக ஒருபந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று இன்றைய இரண்டாம் நாள் ஆட்டம் தொடர்ந்து நடைபெற்றது.

இந்திய அணியின் வீரர்கள் நிகழ்த்திய மோசமான சாதனை :

அப்படி நடைபெற்ற இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது துவக்கத்திலிருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெறும் 31.2 ஓவர்களில் 46 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மோசமான நிலையை சந்தித்துள்ளது.

- Advertisement -

அதனை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் குவித்து இந்திய அணியை விட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியின் போது விளையாடிய இந்திய அணியின் வீரர்கள் ஒன்றிணைந்து ஒரு மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

அந்த சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக இந்த போட்டியில் விளையாடிய டாப் 8 வீரர்களின் ஐந்து வீரர்கள் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கின்றனர். ஏற்கனவே கடந்த 2020-ஆம் ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான போது கூட மூன்று வீரர்கள் தான் டக் அவுட்டாகி இருந்தனர்.

- Advertisement -

ஆனால் இன்றைய போட்டியில் இந்திய அணி 46 ரன்கள் குவித்து இருந்தாலும் அதில் ஐந்து வீரர்கள் டக் அவுட்டாகி இருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ரிஷப் பண்ட் 20 ரன்களையும், யாஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களையும் அடிக்க மூன்றாவது அதிகபட்ச ஸ்கோரே முகமது சிராஜ் அடித்த 4 ரன்கள் தான்.

இதையும் படிங்க : நியூஸிலாந்து 180/3.. பேட்டிங்கை விட இந்தியா ஃபீல்டிங் மோசம்.. ராகுல், சர்பராஸை கெட்ட வார்த்தையில் திட்டிய ரோஹித்

இந்திய அணி சார்பாக விராட் கோலி, சர்பராஸ் கான், கே.எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் ஆகிய ஐந்து பேரும் டக் அவுட்டாகியுள்ளனர். இதன் மூலம் டெஸ்ட் வரலாற்றில் இந்திய அணி இப்படி டாப் 8 வீரர்களில் ஐந்து வீரர்கள் டக் அவுட்டாவது இதுவே முதல் முறை என்கிற மோசமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அதோடு இந்திய மண்ணில் இந்திய அணி அடித்த குறைந்தபட்ச டெஸ்ட் ரன்களாகவும் இந்த ரன் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement