ஒரே போட்டியில் மட்டும் விளையாடி ஐ.பி.எல் தொடரில் காணாமல் போன 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Salam-1

ஐபிஎல் தொடர்களில் விளையாடுவது அவ்வளவு எளிதான காரியமல்ல. அந்த தொடரில் ஒரு போட்டியில் நன்றாக விளையாட விட்டால் கூட அடுத்த போட்டியில் ஆட முடியாது. அப்படி ஒரே ஒரு போட்டியில் மட்டும் இடம் பெற்று விட்டு அதன் பின்னர் அணியில் இடம் பிடிக்காமல் போன வீரர்களின் பட்டியலை பார்ப்போம்

Salam

ராசிக் சலாம் :

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர். 2019 ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். முதல் போட்டியில் டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக விளையாடி 42 ரன்கள் விட்டுக் கொடுத்தார் . அதன் பின்னர் இவர் காயம் ஆகிவிட்டது. பின்னர் ஒரு வருடம் கழித்து இவர் தனது பிறப்பு சான்றிதழை தவறாக கொடுத்துதான் ஐபிஎல் தொடரில் விளையாடி இருக்கிறார் என்ற தகவல் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு தெரிந்த பின்னர் இரண்டு வருடம் இவரை பிசிசிஐ தடை செய்தது.

Akila

அகிலா தனஞ்ஜெயா :

- Advertisement -

இலங்கை அணியின் இளம் சுழல்பந்து வீச்சாளராக இருந்தவர். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி 50 லட்சம் கொடுத்து 2018 ஆம் ஆண்டு எடுத்தது. இவரும் டெல்லி கேப்பிடல் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் ஆடி 47 ரன்கள் விட்டுக் கொடுத்தார். அதன் பின்னர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

Mortaza 2

மஷ்ரபே மோர்டசா :

இவர் வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஆவார். 2009 ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வாகி இருந்தார். டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் விளையாடி 4 ஓவர் வீசி 58 ரன்கள் விட்டுக் கொடுத்தார் .அதன்பின்னர் இவர் எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் இடம் கூட பிடிக்கவில்லை.

Darren

டேரன் பிராவோ :

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி வீரரான 2017ஆம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடி 5 ரன்கள் மட்டுமே எடுத்தார் அதன்பின்னர் இவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை.

Price

ரே பிரைஸ் :

இவர் ஜிம்பாப்வே அணியின் சுழற்பந்துவீச்சாளர் ஆவார். 2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி இவரை தனது அணியில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டியில் ஆட வைத்தது. இவர் 3 ஓவர் வீசி 33 ரன்கள் விட்டுக் கொடுத்தார் அதன் பின்னர் இவருக்கு ஐபிஎல் தொடரில் வாய்ப்புகள் இல்லை.