சர்ச்சைக்குரிய கிரிக்கெட் பேட் .! இதை பயன்படுத்தினால் வெற்றி நிச்சயமாம்..!

- Advertisement -

1624 ஆண்டுகளில் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக பேட் பயன்படுத்தப்பட்டது. 18 ஆம் நூற்றாண்டு வரை கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பேட்கள், ஹாக்கி பேட் போன்று சற்று வளைந்த வடிவத்தில் தான் இருந்து வந்தது. நாகரீகம் வளர கிரிக்கெட் போட்டிகளில் பயன்படுத்தப்பட்ட பேட்டின் பரிணாமும் வளர்ந்து வந்தது. இன்று வரை கிரிக்கெட் போட்டிகளில் சில வீரர்கள் பயன்படுத்தப்பட்ட சர்ச்சைக்குரிய பேட் பற்றியதே இந்த தொகுப்பு.

goldenbat

- Advertisement -

1. கிரிஸ் கெயில்(கோல்டன் பேட் ) :- மேற்கிந்திய வீரரான இந்த அதிரடி பேட்ஸ்மேன், 2015 இல் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பேஷ் தொடரில் ஸ்பார்டன் என்னும் தங்க நிற பேட் ஒன்றை பயன்படுத்தினார். நவீன கிரிக்கெட் காலத்தில் கெயில் இதுபோன்ற பேட்டை பயன்படுத்தியது கிரிக்கெட் உலகில் பல விமர்சங்களை உண்டாக்கியது.

2. மேத்திவ் ஹெய்டன் (மங்கூஸ் பேட்) :- ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான மேத்திவ் ஹெய்டன் மங்கூஸ் எனப்படும் வித்யாசமான பேட்டை கிரிக்கெட் உலகில் முதன் முறையாக பயன்படுத்தினார். 2010 ஆம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடிய போது இந்த பேட்டை அவர் பயன்படுத்தினார்.

bats

3. ரிக்கி பாண்டிங் :- ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான ஆட்டக்காரர். அந்த அணிக்காக உலக கோப்பைகளை பெற்றுத்தந்தவர். ரிக்கி பாண்டிங் மீது மெல்பேர்ண் கிரிக்கெட் சங்கம், அவர் பயன்படுத்தும் பேட்டில் ஒரு மெல்லிய கார்போன் கிராஃபைட் பட்டை ஒன்றை பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டை வைத்துள்ளதது. இருப்பினும் அந்த குற்றசாட்டில் இருந்து பாண்டிங் எப்படியோ மீண்டு விட்டார்.

- Advertisement -

4. தாமஸ் வைட்(மான்ஸ்டர் பேட்):- 1771 ஆம் ஆண்டு, தாமஸ் வைட் என்பவர் மான்ஸ்டர் பேட் எனப்படும் அசுர பேட் ஒன்றை பயன்படுத்தினார். அந்த பேட் 3 ஸ்டம்புகளை மறைக்கும் அளவிற்கு மிக அகலமாக இருந்தது. ஹெம்லிட்டன் மற்றும் ஷேர்ஸ்டி அணிகள் விளையாடிய போட்டியில் இந்த பேட் பயன்படுத்தபட்டுள்ளது.

monster bat

5. டெனிஸ் லில்லி(அலுமினிய பேட் ):- 1979 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணி மோதிய ஆஷஸ் தொடரில், ஆஸ்திரேலிய அணியின் டெனிஸ் லில்லி என்பவர் அலுமினிய பேட்டை பயன்படுத்தியுள்ளார். அந்த போட்டிக்கு பின்னரும் மேற்கிந்தியா அணிகளுக்கு எதிராக விளையாடிய போட்டி ஒன்றில் மீண்டும் இந்த பேட் பயன்படுத்த தடை விதிக்கபட்டது.

Advertisement