காயம் காரணமாக இளம் வயதிலேயே ரிட்டயர்டு ஆன 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

ஒருசில வீரர்கள் 40 வயதானாலும் ஓய்வு பெறாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் முப்பது வயதிற்குள்ளாகவே ஓய்வை அறிவித்து விட்டு சென்றிருக்கிறார்கள். அப்படி இளமையிலேயே ஓய்வை அறிவித்த ஐந்து வீரர்கள் பற்றி பார்ப்போம்.

Kies

கிரேக் கீஸ்வெட்டர் (இங்கிலாந்து) :

இவர் இங்கிலாந்து அணியின் அதிரடி துவக்க வீரர் ஆவார். 2014 ஆம் ஆண்டு இவருக்கு கண்ணில் மிகப் பெரிய காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வேறு வழியில்லாமல் 28 வயதிலேயே தனது ஓய்வை அறிவித்தார். இங்கிலாந்து அணிக்காக இவர் 46 ஒருநாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

James

ஜேம்ஸ் டெய்லர் (இங்கிலாந்து) :

- Advertisement -

இங்கிலாந்து ஒருநாள் அணியில் மற்றும் டெஸ்ட் அணியில் மூன்றாம் இடத்தை பிடித்து கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் ஆடிக்கொண்டிருந்தார். இவருக்கு இதயத்தில் மிகப்பெரிய பிரச்சனை இருந்திருக்கிறது. இதன் காரணமாக திடீரென அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து 26 வயதிலேயே ஓய்வை அறிவித்து விட்டு சென்றார். இங்கிலாந்து அணிக்காக இவர் 7 டெஸ்ட் மற்றும் 27 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ansari

ஜாபர் அன்சாரி (இங்கிலாந்து) :

இவர் இங்கிலாந்து நாட்டின் துவக்க வீரர் ஆவார். இங்கிலாந்து அணிக்காக மூன்று டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கிறார் .தனது படிப்பைத் தொடர்வதற்காக 25 வயதிலேயே கடந்த 2011 ஆம் ஆண்டு ஓய்வை அறிவித்தார்.

Taibu

டடெண்டா தைபு (ஜிம்பாப்வே) :

ஜிம்பாப்வே அணியின் மிகச்சிறந்த வீரராக பார்க்கப்பட்டவர் இவர். இவர் ஆன்மீக வழியில் செல்வதற்காக தனது 29 வயதிலேயே ஓய்வு அறிவித்து விட்டு சென்றார். இவர் அந்நாட்டு அணிக்காக 150 ஒருநாள் போட்டிகள், 28 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Casson

பியூ காசன் (ஆஸ்திரேலியா) :

இவர் ஆஸ்திரேலிய அணிக்காக ஒரு டெஸ்ட் போட்டியில் ஆடியிருக்கிறார். இதயத்தில் இவருக்கு பிரச்சனை இருந்தது இதன் காரணமாக 28 வயதிலேயே ஓய்வை அறிவித்து விட்டு சென்றார்.