குடும்பத்தில் பிறப்பு, இறப்பு ஏற்பட்ட போதிலும் நாட்டுக்காக உண்மையாக விளையாடிய 5 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Shami

குடும்பம் இருந்தாலும் இக்கட்டான சூழ்நிலைகளில் குடும்பத்தையும் விட்டு விட்டு தனது நாட்டு அணிக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்களின் பட்டியலை இப்பதிவில் காண்போம். இதில் சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

Rashid

ரஷித் கான் :

இவர் 2019ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பேஷ் லீக் தொடரில் அடிலைட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணிக்காக விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவரது தந்தை இயற்கை எய்திவிட்டார். இந்த செய்தியை அறிந்த ரஷித் கான். அவரது தந்தை இழப்பையும் தனது மனதில் போட்டுக் கொண்டு தனது அணிக்காக ஆடி வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளார். அடுத்த நாள்தான் அவரது தந்தை இழப்பில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Lee

பிரட்லி :

- Advertisement -

இவர் ஆஸ்திரேலியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆவார். 2011ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் விளையாடி கொண்டிருந்த போது இவரது மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இருந்தாலும் அந்த நேரத்தில் தனது அணிக்காக ஆடி 2 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைத்தார். அதன் பின்னர் அந்த டெஸ்ட் போட்டி முடிந்த பின்னரே தனது மனைவியை பார்க்க சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Shami

முகமது சமி :

இந்திய அணி 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் கொல்கத்தாவில் விளையாடிக்கொண்டு இருந்தது. அப்போது அவரது மகள் மூச்சுத்திணறல் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இருந்தாலும் உடனடியாக அவரால் சென்று பார்க்க முடியவில்லை. அந்த போட்டியை முடித்துவிட்டு 3 விக்கெட் எடுத்து இந்திய அணியை வெற்றி பெற வைத்து விட்டுத்தான் தனது மகளை பார்க்க சென்றார் முகமது சமி.

Ashwin

ரவிசந்திரன் அஸ்வின் :

2015 ஆம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அவரது குடும்பம் சென்னை மழை வெள்ளத்தில் தத்தளித்துக்கொண்டிருந்தது. அதனையும் பொருட்படுத்தாமல் இந்திய அணிக்காக விளையாடி 7 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றி பெற்றுக் கொடுத்தார் அஸ்வின்.

Ziva

மகேந்திர சிங் தோனி :

2015ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை தொடரில் ஆஸ்திரேலியாவில் விளையாடிக்கொண்டிருந்தது. அப்போது அவரது மகளான ஸிவா பிறந்தார் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் உலக கோப்பை தொடர் முடிந்த பின்னர் தான் இந்தியாவிற்கு வந்து அவரது மகளை பார்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது.