பவுலராக அறிமுகமாகி பின்னர் பக்கா பேட்ஸ்மேனாக மாறிய 5 அட்டகாசமான வீரர்கள் – லிஸ்ட் இதோ

Smith-1
- Advertisement -

கிரிக்கெட்டில் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங், கேப்டன்ஷிப் என பல தனித்துவமான திறமைகள் இருக்கிறது. ஒரு சில வீரர்கள் பேட்ஸ்மேனாக வந்து, பந்து வீச்சாளராக மாறி அசத்தி இருப்பார்கள். ஆனால் ஒரு சில வீரர்கள் பந்துவீச்சாளர்கள் எதிர்காலத்தில் நல்ல பேட்ஸ்மேன் ஆக மாறி அசத்தி இருப்பார்கள் தற்போது அப்படிப்பட்ட வீரர்களை பார்ப்போம்.

Smith

- Advertisement -

ஸ்டீவன் ஸ்மித்(ஆஸ்திரேலியா) :

இவர் ஆஸ்திரேலிய அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் ஆவார். இவர் முதன்முதலில் 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக லெக் ஸ்பின்னராக அறிமுகமானவர் அதன் பின்னர் பேட்டிங்கில் ஈடுபாடு கொண்டு தற்போது உலகின் மிகச்சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆக இருக்கிறார். தற்போது சர்வதேச போட்டிகளில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான ரன்களை குவித்தது 62 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.

White

கேமரூன் ஒயிட்(ஆஸ்திரேலியா) :

- Advertisement -

இவரும் ஆஸ்திரேலிய அணியின் வீரர் வலதுகை ஆப் ஸ்பின்னராக அறிமுகமாகியவர். 2005 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்காக சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமாகி அதன் பின்னர் ஆஸ்திரேலிய அணியில் ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக மாறியவர்

Ravi

ரவி சாஸ்திரி(இந்தியா) :

- Advertisement -

தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும் இவர் ஆரம்ப காலத்தில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமாகி அதன் பின்னர் நன்றாக பேட்டிங் பிடித்து சர்வதேச அளவில் கிட்டத்தட்ட 7000 ரன்கள் குவித்திருக்கிறார். இவர்தான் முதன்முதலில் உள்ளூர் போட்டிகளில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசினார்.

malik

ஷோயப் மாலிக்(பாகிஸ்தான்) :

- Advertisement -

இவர் பாகிஸ்தான் அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆவார். கடந்த 1999ம் ஆண்டு அந்த அணிக்காக ஒரு சுழற்பந்து வீச்சாளராக அறிமுகமானார். அதன் பின்னர் நன்றாக பேட்டிங் செய்ததன் காரணமாக ஆல்-ரவுண்டராக மாறினார். சர்வதேச அளவில் இவர் தற்போது வரை 12 ஆயிரம் ரன்கள் குவித்திருக்கிறார்.

Jayasuriya

சனத் ஜெயசூரியா(இலங்கை) :

இவர் இலங்கை அணியின் முன்னாள் அதிரடி வீரர் ஆவார் 1989ம் ஆண்டு அறிமுகமானவர். முதலில் இடது கை சுழற்பந்து வீச்சாளராக தான் அறிமுகமானார். அதன் பின்னர் அதிரடியாக ஆட துவங்கி கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மிகச்சிறந்த துவக்க வீரராக மாறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement