உலகிலேயே சிறப்பாக ஸ்வீப் ஷாட் விளையாடும் 5 வீரர்கள் – பட்டியல் இதோ

Lara
- Advertisement -

கிரிக்கெட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி காரணமாக நூறு ஆண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட நேர்த்தியான கிரிக்கெட் ஆட்டம் தற்போது இல்லை. டெஸ்ட் கிரிக்கெட் கூட மாறிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாக வீரர்கள் வித்தியாசமான ஷாட்களை ஆடி வருகின்றனர். சச்சின் டெண்டுல்கர் ஸ்ட்ரெட் டிரைவ் மிக அற்புதமாக ஆடுவார். அதேபோல் விராட் கோலி கவர் டிரைவ் அம்சமாக விளையாடுவார்,

ரிக்கி பாண்டிங் மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் புல் ஷார்ட் ஆடி பட்டையை கிளப்புவார்கள். இப்படியிருக்க ஸ்வீப் ஷாட் மிக எளிதாக ஆடும் 5 தற்போதைய பேட்ஸ்மேன்கள் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

Rahim

முஷ்பிகுர் ரஹிம் :

இவர் 2005ஆம் ஆண்டில் இருந்து விளையாடி வருகிறார். அந்த அணி தற்போது உலகின் மிகச்சிறந்த அணிகளில் ஒன்றாக இருக்கிறது. அனைத்து விதமான போட்டிகளிலும் ஸ்வீப் ஷாட் ஆடுவதில் வல்லவர். இவர் 218 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 6174 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 7 சதங்களும் 38 அரை சதங்களும் அடங்கும். அதேபோல் 7வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 21 அரை சதங்களும் 7 சதங்களும் அடித்துள்ளார். வங்கதேச வீரர்களிடையே ஸ்வீப் ஷாட் ஆடுவதில் வல்லவர் என்று பல முன்னாள் பேட்ஸ்மேன்கள் இவரைப் பற்றி புகழ்ந்து.

- Advertisement -

Pooran

நிக்கோலஸ் பூரன் :

இவருக்கு தற்போது 24 வயது தான் ஆகிறது. இடதுகை ஆட்டக்காரர் ஆனால் கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் 127 டி20 போட்டிகளில் விளையாடி விட்டார். மொத்தம் 2389 ரன்களும் 12 சதங்கள் விளாசியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணி 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 932 ரன்களும் அடித்துவிட்டார். இடதுகை ஆட்டக்காரர் இருந்தாலும் அற்புதமாக ஸ்வீப் ஷாட் ஆடுவதில் தெளிவாக இருக்கிறார் இவர்.

- Advertisement -

Latham

டாம் லேதம் :

தற்போதைய வீரர்களில் இவரும் மிகவும் அண்டர் ரேட்டட் வீரர் ஆவார். நியூசிலாந்து அணிக்கு 99 ஒருநாள் போட்டியில் விளையாடி 2696 ரன்கள் குவித்துள்ளார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய போது குல்தீப் யாதவ் மற்றும் யுஜவேந்திர சாஹல் ஆகியோருக்கு எதிராக வெரும் ஸ்வீப் ஷாட் ஆடியே அவர்களை தவற விட்டவர் இவர். இவருக்கும் அந்த ஸ்வீப் சாட் கைவந்த கலையாகும்.

- Advertisement -

Taylor-3

ராஸ் டைலர் :

நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர் இவர் அந்த அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் ராஜஸ்தான் ராயல்ஸ், புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷாட் ஆடுவதில் வல்லவர். 36 வயதான இவர் 232 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 8474 ரன்களும், டெஸ்ட் போட்டிகளில் 7230 ரன்களும் 19 சதங்களும், 33 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

Stokes

பென் ஸ்டோக்ஸ் :

சமகாலத்தில் மிகச்சிறந்த ஆல்-ரவுண்டராக பார்க்கப்படும் ஒரு வீரர். இங்கிலாந்து அணிக்கு பல நேரங்களில் ஒற்றை ஆளாக நின்று வெற்றி பெற்று கொடுத்துள்ளார். 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியையும் தனி ஆளாக நின்று இவர்தான் வெற்றி பெற்றார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இவரால் இடதுகை பேட்ஸ்மேன் ஆக இருந்து கொண்டு மிக அழகாக ஸ்வீப் ஷாட் ஆட முடியும் .28 வயதான இவர் தற்போது ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

Advertisement