தடுமாறும் ராகுலுக்கு மாற்றாக விளையாடும் திறமை பெற்றுள்ள 4 இளம் ஓப்பனிங் வீரர்களின் பட்டியல்

KL Rahul
- Advertisement -

2022 ஐசிசி டி20 உலகக் கோப்பையில் தரவரிசையில் நம்பர் ஒன் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா லீக் சுற்றில் அசத்தினாலும் வழக்கம் போல நாக் அவுட் சுற்றில் சொதப்பி பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியது. அதனால் 2007க்குப்பின் 15 வருடங்கள் கழித்து 2வது கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த தொடரில் இந்தியாவின் தோல்விக்கு கேப்டனாக முன்னின்று அதிரடியான தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோரது சொதப்பலான ஆட்டம் முக்கிய காரணமாக அமைந்தது.

KL Rahul Lungi Nigidi

- Advertisement -

அதில் ஐபிஎல் தொடரில் 17 கோடி என்ற உச்ச கட்டத்தை தொட்ட தன்னுடைய மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே சமீப காலங்களில் திறமை இருந்தும் அவுட்டாகி விடுவோமோ என்ற பயத்தில் தடவலான பேட்டிங்கை வெளிப்படுத்தும் கேஎல் ராகுல் ஒன்று அதிக பந்துகளை எதிர்கொண்டு சொற்ப ரன்களில் அவுட்டாகி அடுத்த வரும் வீரர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்துவது இல்லையேல் பெரிய ரன்களை குவித்தாலும் குறைவான ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடி தோல்விக்கு காரணமாக அமைவது என்ற அணுகு முறையில் விளையாடி வருகிறார்.

வருங்கால நாயகன்கள்:

அதிலும் காயத்திலிருந்து திரும்பிய பின் ரொம்பவே தடுமாறும் அவர் அழுத்தமான பெரிய போட்டிகளில் சொதப்புவதையும் கத்துக் குட்டிகளை அடித்து காலத்தை தள்ளுவதையும் ரசிகர்கள் ஆதாரத்துடன் நிரூபித்து வருகிறார்கள். எனவே டி20 அணியில் யாரை நீக்குகிறீர்களோ இல்லையோ அவரை நீக்குமாறு கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்கள். எனவே அவருக்கு மாற்றாக செயல்படும் திறமை பெற்றுள்ள 4 வீரர்களை பற்றி பார்ப்போம்:

ruturaj

4. ருதுராஜ் கைக்வாட்: 2020இல் வரலாற்றில் முதல் முறையாக ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் வெளியேறிய சென்னை 2021 ஐபிஎல் சீசனில் கோப்பை வெல்வதற்கு ஸ்பார்க் போல் அதிரடியாக செயல்பட்ட இவரது ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது. அந்த சீசனில் தொடக்க வீரராக களமிறங்கி 635 ரன்களை குவித்த காரணத்தாலேயே இந்தியாவுக்காக டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் இதுவரை 8 இன்னிங்ஸில் 135 ரன்களை மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டுள்ளார்.

- Advertisement -

ஆரம்பத்தில் யாருமே தடுமாறுவார்கள் என்ற நிலைமையில் தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே உள்ளூர் தொடரில் சதமடித்து நல்ல ஃபார்மில் விளையாடி வரும் இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்பளித்தால் அதிரடியாக பெரிய அளவில் விளையாட வாய்ப்புள்ளது.

ishan kishan 2

3. இஷான் கிஷன்: தோனி பிறந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவரும் 2020, 2021 ஐபிஎல் தொடரில் அதிரடியாக செயல்பட்டதால் இந்தியாவுக்காக அறிமுகமாகி முதல் போட்டியிலேயே அரை சதமடித்தார். ஆனால் 2022இல் அதிகப்படியான தொகைக்கு வாங்கப்பட்டதால் பார்மை இழந்த இவர் கடந்த ஜூலையில் நடைபெற்ற தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் சமீபத்தில் நடைபெற்ற ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

இதுவரை 19 போட்டிகளில் 543 ரன்களை 131.16 என்ற நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்து வரும் இவர் இடது கை பேட்ஸ்மேனாகவும் இருப்பதால் ஓப்பனிங்கில் எதிரணிகளுக்கு சவாலை கொடுக்கும் ஜோடியில் ஒருவராக அசத்துவார் என்று நம்பலாம்.

Sanju Samson

2. சஞ்சு சாம்சன்: இந்தியாவுக்காக விளையாட தவமாய் தவமிருந்து போராடி வரும் இவர் ஒருவழியாக இந்த வருடம் கிடைத்த வாய்ப்புகளில் சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்திய போதிலும் டி20 உலக கோப்பையில் கழற்றி விடப்பட்டது ரசிகர்களை கொந்தளிக்க வைத்தது. அப்படி ரசிகர்களின் ஆதரவை பெறுமளவுக்கு நல்ல திறமை பெற்றுள்ள இவர் 3வது இடத்தில் பொதுவாக விளையாடினாலும் ஓப்பனிங்கிலும் அசத்தும் திறமை பெற்றுள்ளார்.

- Advertisement -

மேலும் ஐபிஎல் 2022 தொடரில் சிறப்பாக செயல்பட்டு சமீபத்திய நியூசிலாந்து ஏ அணிக்கெதிரான ஒருநாள் தொடரிலும் அசத்தி  நல்ல பார்மில் இருக்கும் இவரும் ராகுலுக்கு பதிலாக விளையாட தகுதியானவர் என்பதில் சந்தேகமில்லை.

shaw

1. பிரிதிவி ஷா: 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக வென்று சீனியர் கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் லாரா, சச்சின், சேவாக் ஆகியோர் கலந்த கலவை என்று அப்போதைய பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டும் அளவுக்கு சிறப்பான செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். இருப்பினும் தொடர்ச்சியாக அசத்த தவறியதால் வாய்ப்பை இழந்த இவர் தற்போது சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் சதமடித்து நல்ல பார்முக்கு திரும்பியுள்ளார்.

இருப்பினும் அடுத்ததாக நடைபெறும் நியூசிலாந்து தொடரில் தேர்வு செய்யப்படாத இவர் ஓப்பனிங்கில் முன்னாள் வீரர் சேவாக் போல 140 – 150 என்ற அதிரடியான ஸ்ட்ரைக் ரேட்டில் பவர்பிளே ஓவர்களில் எதிரணி பவுலர்களை தெறிக்க விடும் திறமை பெற்றுள்ளார் என்பதால் விரைவிலேயே மீண்டும் இந்திய அணியில் விளையாடுவதை பார்க்கலாம்.

Advertisement