துவங்கிய துலீப் கோப்பை 2024 : இஷானுக்கு பதில் கழற்றி விடப்பட்ட சஞ்சு சாம்சன்.. 4 தமிழக வீரர்களுக்கு இடம்

- Advertisement -

துலீப் கோப்பை 2024 டெஸ்ட் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 5ஆம் தேதி பெங்களூரு மற்றும் அனந்தபூர் நகரங்களில் தொடங்கியது. அத்தொடரில் கேப்டன் ரோஹித், சர்மா, விராட் கோலி, ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோருக்கு மட்டும் ஓய்வு கொடுக்கப்பட்டது. இருப்பினும் ரவீந்திர ஜடேஜா மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் காயம் போன்ற காரணங்களால் ஏற்கனவே விலகுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்த நிலையில் இன்று துவங்கிய முதல் ரவுண்டு ஆட்டத்திலிருந்து சூரியகுமார் யாதவ், இசான் கிசான், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் காயத்தால் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. அதில் இந்தியா டி அணியில் தேர்வாகியிருந்த இஷான் கிசானுக்கு பதிலாக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரைத் தேர்வு செய்யாத கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் விக்கெட் கீப்பராக கே.எஸ். பரத்தை தேர்ந்தெடுத்துள்ளார்.

- Advertisement -

துலீப் கோப்பை:

கடந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சுமாராக விளையாடிய கேஎஸ் பரத் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார். அதனால் இப்போட்டியில் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சன் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அந்த வாய்ப்பை பெறாத சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இந்தியா ஏ மற்றும் பி அணிகள் பெங்களூருவிலும் இந்தியா சி மற்றும் டி அணிகள் மோதிய போட்டி அனந்தபூரிலும் காலை 9.30 மணிக்கு துவங்கின. அதில் இந்தியா பி அணியில் தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் சாய் கிஷோர் ஆகியோருக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் சாய் கிசோர் சமீபத்திய புஜ்ஜி பாபு உள்ளூர் தொடரில் டிஎன்சிஏ அணியின் கேப்டனாக அபாரமாக விளையாடியதால் இந்த வாய்ப்பை பெற்றுள்ளார்.

- Advertisement -

4 தமிழக வீரர்கள்:

அதே போல வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்காக சமீபத்திய ஜிம்பாப்வே மற்றும் இலங்கை தொடர்களில் அசத்தினர். அதனால் அவருக்கும் துலீப் கோப்பையில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மறுபுறம் ருதுராஜ் கெய்க்வாட் தலையிலனா இந்தியா சி அணியில் சாய் கிசோர், பாபா இந்திரஜித் ஆகிய 2 தமிழக வீரர்களுக்கு பிளேயிங் லெவனில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதையும் படிங்க: யூபிடி20 : ஒரே ஓவரில் 3 விக்கெட்.. ரிங்கு சிங் பந்து வீச்சில் மேஜிக்.. கைமீறிய வெற்றியை பறித்து அபாரம்

இந்த வாய்ப்புகளில் அசத்தும் வீரர்களுக்கு அடுத்து நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கலாம். எனவே துலீப் கோப்பையில் அனைத்து இந்திய வீரர்களும் தங்களுடைய திறமையை காட்டி தேர்வாளர்களை கவர முயற்சித்து வருகின்றனர். தற்போதைய நிலைமையில் ருதுராஜ் தலைமையிலான இந்தியா சி அணி இந்தியா டி அணியை 48-6 என்ற ஸ்கோருடன் திணறடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement