ஐபிஎல் 2023 : கோடிகள் வேண்டாம், தங்கள் நாட்டுக்காக ஏலத்தையும் தொடரையும் புறக்கணித்த 4 நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள்

Cummins
- Advertisement -

உலகப் புகழ் பெற்ற ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் 2023ஆம் ஆண்டு கோடை காலத்தில் இந்தியாவிலேயே நடைபெறுகிறது. அதற்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ஆம் தேதியன்று கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் நிலையில் அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைத்த மற்றும் விடுவித்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. பொதுவாக ஐபிஎல் மற்றும் அதன் ஏலம் என்றாலே அதில் வெளிநாட்டு வீரர்களுக்கு தனி மவுசு உள்ளது. மேலும் தங்களது நாட்டுக்காக விளையாடுவதற்கு கொடுக்கும் சம்பளத்தை விட ஐபிஎல் தொடரில் வெறும் 2 மாதத்திற்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது.

அதனால் சமீப காலங்களில் நிறைய வெளிநாட்டு வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டை புறக்கணித்து விட்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவதை பார்க்க முடிகிறது. ஆனாலும் சில வீரர்கள் தாய் நாட்டுக்காக சர்வதேச அரங்கில் விளையாட வேண்டும் என்பதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த வரலாறுகளும் உள்ளது. அந்த வரிசையில் 2023 சீசனில் தாய் நாட்டுக்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்த 4 வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களை பற்றி பார்ப்போம்:

- Advertisement -

4. அலெக்ஸ் ஹேல்ஸ்: இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி தொடக்க வீரரான இவர் 2022 சீசனில் கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்டிருந்தாலும் கடைசி நேரத்தில் கட்டுப்பாட்டுக்கு வளையத்திற்குள் இருக்க விரும்பவில்லை என்று அறிவித்து வெளியேறினார். அதற்கு பரிசாக 3 வருடங்களாக வாய்ப்பு பெறாமல் இருந்து வந்த இங்கிலாந்து அணியில் மீண்டும் தேர்வான அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு 2வது கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

அப்படி நீண்ட காலம் கழித்து தாய் நாட்டுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்று அசத்தியுள்ளதால் புத்துணர்ச்சியடைந்துள்ள அவர் 374 டி20 போட்டிகளில் 10534 ரன்களை எடுத்து தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருந்தும் பணிச் சுமையை நிர்வகிக்கும் வகையில் 2023 ஐபிஎல் தொடருக்கான ஏலத்திலிருந்து விலகியுள்ளார். ஒருவேளை அதில் பங்கேற்றால் பல கோடிகள் கிடைக்கும் என்பதையும் தாண்டி அவர் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.

- Advertisement -

3. சாம் பில்லிங்ஸ்: மற்றொரு இங்கிலாந்து வீரரான இவர் சமீப காலங்களில் சென்னை மற்றும் கொல்கத்தா அணியில் விளையாடி ரசிகர்களின் அபிமானத்தை பெற்றார். அந்த நிலையில் கொல்கத்தா அணிக்காக இந்த வருடம் 2 கோடிக்கு விளையாடிய அவர் விரைவில் இங்கிலாந்துக்காகவும் கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரிலும் பணிச்சுமையை நிர்வாகித்து புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்காக 2023 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.

242 டி20 போட்டிகளில் 4654 ரன்களை எடுத்த அனுபவம் கொண்ட விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கும் இவரும் கோடிகளை பார்க்காமல் நாட்டுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளார்.

- Advertisement -

2. மிட்சேல் ஸ்டார்க்: இவரைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. உலகத்தரம் வாய்ந்த இடதுகை வேகப்பந்து வீச்சாளரான இவருக்கு கோடிகளை கொடுக்க ஐபிஎல் அணிகள் தயாராக இருக்கிறது. ஆனாலும் கடந்த சில வருடங்களாகவே நாட்டுக்காக புத்துணர்ச்சியுடன் விளையாடுவதற்காக ஐபிஎல் தொடரை புறக்கணித்து வரும் இவர் அடுத்த வருடமும் வெளியேறியுள்ளார்.

கடைசியாக கடந்த 2015இல் பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர் 2018 சீசனில் 9.4 கோடிக்கு கொல்கத்தா அணிக்காக வாங்கப்பட்ட போதிலும் கடைசி நேரத்தில் காயத்தால் வெளியேறினார்.

1. பட் கமின்ஸ்: ஆஸ்திரேலியாவை சேர்ந்த நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இவர் 2020 சீசனில் அதிக தொகைக்கு ஏலம் போன வெளிநாட்டு வீரராக சாதனை படைத்து இந்த வருடம் 7.25 கோடிக்கு கொல்கத்தா அணியில் விளையாடினார். அதில் பந்து வீச்சில் சுமாராக செயல்பட்டாலும் பேட்டிங்கில் 15 பந்துகளில் 56 ரன்கள் குவித்து சாதனை படைத்த அவருடைய மவுசு குறைவில்லை.

இருப்பினும் ஏற்கனவே டெஸ்ட் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள அவர் தற்போது ஆஸ்திரேலிய அணியின் புதிய ஒருநாள் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். அதன் காரணமாக பணிச்சுமையை நிர்வகித்து கேப்டனாக ஆஸ்திரேலியா அணியை புத்துணர்ச்சியுடன் வழி நடத்த விரும்பும் அவர் 2023 ஐபிஎல் தொடரிலிருந்து விலகுவதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார். கோடிகளை விட நாட்டுக்காக கேப்டனாக செயல்படுவது கௌரவமாக அவர் கருதுவது இதிலிருந்து தெரிகிறது.

Advertisement