கிரிக்கெட்டில் லெஜென்டாக இருந்தும் ஒருமுறை கூட கேப்டனாக இருக்க வாய்ப்பில்லாமல் போன 4 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Bowler

கிரிக்கெட்டை வெறும் ஒரு விளையாட்டாக மட்டுமே கருதி ஒதுக்கி வைக்க முடியாத அளவிற்க்கு இந்த விளையாட்டானது உலகில் உள்ள ரசிகர்களின் மனதில் வேரூன்றியிருக்கிறது. ஒவ்வொரு நாட்டு கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடிய, விளையாடிக் கொண்டிருக்கும் பல வீரர்களின் மிகச் சிறந்த திறமையால் தான் கிரிக்கெட் விளையாட்டு இந்த அளவிற்கு உயர்ந்திருக்கிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. அப்படி தங்களது தேச அணிக்காக பல ஆண்டுகளாக திறமையாக விளையாடி பல வெற்றிகளை குவித்து தந்திருந்தாலும், அதில் சில வீரர்களுக்கு தங்கள் கிரிக்கெட் வாழ்க்கை முழுவதிலும், ஒரு முறைகூட தங்களது தேசிய அணிக்கு கேப்டனாகும் வாய்ப்பு கிடைத்திருக்காது. இந்த பதிவில் தங்களது தேச அணிக்காக பல ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டும், அந்த அணியை வழிநடத்தும் கேப்டன் பொறுப்பு கிடைக்காத நான்கு வீரர்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

Glenn-McGrath

க்ளென் மெக்ராத்:

- Advertisement -

கிரிக்கெட் உலகில் 1990களில் இருந்து கோலாச்சி வந்த ஆஸ்திரேலிய அணி 2007 ஆம் ஆண்டுக்குப் பிறகு சறுக்கலை சந்திக்க ஆரம்பித்தது. அப்படிபட்ட ஆஸ்திரேலிய அணியில் மிக முக்கிய பந்து வீச்சாளராக திகழ்ந்தவர்தான் கிளன் மெக்ராத். 1993ஆம் ஆண்டு அந்த அணிக்காக அறிமுகமாகிய அவர் 2007ஆம் ஆண்டுவரை அந்த அணிக்காக தனது சிறப்பான பங்களிப்பை அளித்து வந்தார். ஆனால் ஸ்டீவ் வாக்கிற்கு பிறகு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பொறுப்பு மற்றொரு மிக முக்கியமான ஜாம்பவான் வீரரான ரிக்கி பாண்டிங்கிடம் சென்றது. அவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலிய அணி பல வெற்றிகளை குவத்து வந்ததால், மற்றொரு மிக முக்கிய வீரரான க்ளென் மெக்ராத்திற்கு அந்த அணியின் கேப்டன் பொறுப்பு கிடைக்காமல் போனது. 2013ஆம் ஆண்டு ஐசிசி இவரை ஹால் ஆஃப் ஃபேமில் தேர்ந்தெடுத்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியின் ஆல் டைம் ஒரு நாள் அணியில் க்ளென் மெக்ராத்தின் பெயரை சேர்த்து அவரது திறமைக்கு பெருமை சேர்த்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் நிர்வாகம்.

Muralitharan

முத்தையா முரளிதரன்:

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள், ஒரு நாள் கிரிக்கெட்டில் 534 விக்கெட்டுகள் என மிகப் பெரிய சாதனைகளை தன் வசம் வைத்திருக்கும் இலங்கையைச் சேர்ந்த இவர், இவருக்குபின் அணியில் இடம்பிடித்த வீரர்களான, குமார் சங்ககரா மற்றும் மஹேலா ஜெயவர்தனே ஆகியோரின் கேப்டன்சியின் கீழும் விளையாடி இருக்கிறார். அந்த அணியின் மிகப் பெரிய ஸ்பின் பௌலராகவும், மேட்ச் வின்னராகவும் திகழ்ந்த அவர் ஒரு முறைகூட அந்த அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்ததில்லை. 1992ஆம் ஆண்டு அந்த அணியில் அறிமுகமான அவர் 2011ஆம் ஆண்டு வரை அந்த அணிக்காக விளையாடியுள்ளார்.

YuvrajSingh

யுவராஜ் சிங்:

இந்த பட்டியலில் யுவாரஜ் சிங்கின் பெயர் இடம்பிடித்தது மிகவும் வருத்ததற்குரிய ஒரு விஷயம்தான். யுவராஜ் சிங்கின் கிரிக்கெட்டை வாழ்க்கையை புரட்டிப் பார்த்தால், அதில் அவருடைய தனிப்பட்ட சாதனைகளுக்காக அவர் விளையாடியதைவிட, இந்திய அணியின் வெற்றிக்காக மட்டுமே அவர் அனைத்து போட்டிகளிலும் விளையாடினார் என்பது தெரியவரும். 2011ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலக கோப்பை தொடரின் பாதியில் அவருக்கு கேன்சர் இருப்பது தெரிய வந்தும், அதற்கு சிகிச்சை மேற்கொள்ளாமல் அந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்ற மிக முக்கிய காரணமாகத் திகழ்ந்தார். 2000ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமான இவர் 2017ஆம் ஆண்டுவரை இந்திய அணிக்காக விளையாடினார். இத்தனை வருடங்கள் இந்திய அணிக்காக விளையாடி இருந்தாலும், ஒரே ஒரு போட்டியல்கூட இவர் இந்திய அணியை ஒரு கேப்டனாக இருந்து வழிநடத்தியதில்லை.

டேல் ஸ்டெயின்:

2004ஆம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணிக்காக அறிமுக மான இவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வு முடிவு குறித்து இன்னும் அவர் எந்தவித அறிப்பையும் வெளியிடவல்லை. அவர் கடைசியாக தென் ஆப்ரிக்க டி20 அணிக்காக 2020ஆம் ஆண்டு விளையாடி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தென் ஆப்ரிக்க அணிக்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டேல் ஸ்டெயின் ஒரு நாள் போட்டிகளிலும் அந்த அணிக்காக மிகச் சிறப்பான பந்து வீச்சையே வழங்கி இருக்கிறார். ஆனாலும் இவரும் அந்த அணிக்காக கேப்டன் பொறுப்பில் இருந்து அந்த அணியை வழிநடத்தியதில்லை.

Advertisement