ஐ.பி.எல் வரலாற்றில் முடியடிக்க முடியாத 4 சாதனைகள். இனிமேலும் கஷ்டம் தான் – லிஸ்ட் இதோ

ஐபிஎல் தொடரில் வருடாவருடம் பல சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் படைக்கப்பட்டுள்ள சாதனைகளில் முறியடிக்கவே முடியாத சாதனைகளின் பட்டியலைப் பார்ப்போம்.

அதிக ரன் வித்தியாசத்தில் வெற்றி :

ஐபிஎல் கிரிக்கெட்டில் முதல் போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக நடைபெற்றது. ஐபிஎல் வரலாற்றில் முதல் போட்டியான இந்த போட்டியில் பிரண்டன் மெக்கல்லம் 73 பந்துகளில் 158 ரன்கள் விளாச, கொல்கத்தா அணி 222 ரன்கள் அடித்தது. இதன் பின்னர் ஆடிய பெங்களூரு அணி 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் காரணமாக தற்போது வரை முறியடிக்க முடியாத 140 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது கொல்கத்தா அணி.

ChrisGayle

ஒரே ஓவரில் அதிக ரன்கள் :

- Advertisement -

2011 ஆம் ஆண்டு பெங்களூரு அணியின் வீரர் கிறிஸ் கெயில் கொச்சி அணிக்கு எதிராக ஒரே ஓவரில்(ஒரு நோபால் உட்பட) 37 ரன்கள் விளாசினார். 4 சிக்சர்கள் 3 பவுண்டரிகள் என 7 பந்துகளில் அடித்தார். இந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புகளே இல்லை.

ABD

அதிகபட்ச அணியின் ரன் :

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அணிக்கு எதிராக ருத்ர தாண்டவம் ஆடி 263 ரன்கள் குவித்தது. இதில் கிறிஸ் கெயில் 175 ரன்கள் அடித்திருந்தார். இந்த அதிகபட்ச அணியின் ரன்கள் என்ற சாதனையை தற்போது வரை முறியடிக்கப்படவில்லை.

gayle

அதிகபட்ச தனிப்பட்ட ரன் :

மீண்டும் கிறிஸ் கெயில் புனே வாரியர்ஸ் அணிக்கு எதிராக அந்த போட்டியில் 175 ரன்கள் அடித்து 17 சிக்சர்கள் விளாசி இருந்தார். இந்த சாதனையையும் தற்போது வரை முறியடிக்கப்படவில்லை.