ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி ஜொலிக்க தவறிய 4 இந்திய நட்சத்திரங்கள் – லிஸ்ட் இதோ

price
- Advertisement -

ஐபிஎல் 2022 சீசனுக்கான மெகா ஏலம் வரும் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்த வருடம் லக்னோ மற்றும் அகமதாபாத் ஆகிய புதிய 2 அணிகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளதால் அதற்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வண்ணம் அனைத்து அணிகளும் கலைக்கப்பட்டு இம்முறை மெகா அளவில் 2 நாட்களுக்கு ஏலம் நடைபெறவுள்ளது.

Ipl cup

- Advertisement -

பெங்களூருவில் நடைபெறவுள்ள இந்த மெகா ஏலத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 590 வீரர்கள் பங்கேற்க உள்ளார்கள். இதில் தரமான வீரர்களை வாங்க அனைத்து அணிகளும் போட்டி போட உள்ளதால் இந்த மெகா ஏலத்துக்காக ஐபிஎல் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

அதிகதொகை குறைந்த பெர்பார்மென்ஸ்:
பொதுவாகவே ஐபிஎல் ஏலத்தில் ஏதேனும் ஒரு சில வீரர்களை வாங்க அனைத்து அணிகளிடமும் கடும் போட்டி நிலவும். குறிப்பாக ஒரு வீரருக்கு 2 அணிகள் போட்டி போடும் போது அவர்களின் ஏலத்தொகை படிப்படியாக இமயத்தை தொட்டு இறுதியில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு பெரிய தொகைக்கு ஏதேனும் ஒரு அணிக்கு அவர் ஒப்பந்தமாகி விடுவார்.

IPL-bcci

மிக பெரிய தொகைக்கு ஒப்பந்தமாகும் அந்த வீரர் மிகச் சிறப்பாக செயல்பட்டு ஐபிஎல் கோப்பையை அவரின் அணிக்கு வாங்கிக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும் அதிகமாகி இறுதியில் அதுவே அவருக்கு ஒரு அழுத்தத்தை கொடுப்பதை பலமுறை பார்த்துள்ளோம். அதன் காரணமாக அதிக விலைக்கு வாங்கப்பட்டு சுமாராக செயல்படும் அந்த வீரரை அடுத்த சீனிலேயே பல அணிகள் கழற்றி விட்டுள்ளதையும் பார்த்துள்ளோம். அந்தவகையில் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஒப்பந்தமாகி சுமாராக செயல்பட்ட 4 இந்திய வீரர்கள் பற்றி பார்ப்போம்.

- Advertisement -

1. யுவ்ராஜ் சிங் (2014 & 2015): இந்தியாவிற்கு உலக கோப்பையை வென்று கொடுத்த நட்சத்திர ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கை வாங்க கடந்த 2014 ஐபிஎல் ஏலத்தில் பஞ்சாப், கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் கடும் போட்டியிட்டன. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 14 கோடிகளுக்கு அவரை வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்தது.

yuvi rcb

இதனால் பெங்களூருவுக்கு முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று கொடுப்பாரா யுவராஜ் சிங் என்ற எதிர்பார்ப்பு தொடர்ந்து இருந்து வந்தது. அந்த வேளையில் அவர் விளையாடிய 14 போட்டிகளில் 376 ரன்களையும் 5 விக்கெட்டுகளையும் எடுத்து சுமாராக மட்டுமே செயல்பட்டதால் பெங்களூரு அணி கோப்பையை வெல்ல முடியவில்லை. அதன் காரணமாக அந்த வருடத்துடன் அவரை பெங்களூர் அணி நிர்வாகம் விடுவித்தது.

- Advertisement -

அதை தொடர்ந்து 2015 ஐபிஎல் தொடரில் மீண்டும் அவரை வாங்க அனைத்து அணிகளும் கடும் போட்டி போட்டன. குறிப்பாக டெல்லி மற்றும் பெங்களூரு அணிகளுக்கிடையே அவரை வாங்க கடுமையான போட்டி நிலவியது. இறுதியில் டெல்லி அணிக்காக 16 கோடிகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட யுவராஜ்சிங் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற அப்போது அசத்தல் சாதனை படைத்தார்.

Yuvraj

ஆனால் அவ்வளவு கோடிகளுக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் அந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டாரா என பார்த்தால் நிச்சயமாக இல்லை. ஏனெனில் 2015 ஐபிஎல் சீசனில் 13 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்த அவர் வெறும் 248 ரன்கள் மட்டுமே எடுத்தார். அதேபோல் 9 இன்னிங்சில் பந்து வீசிய அவர் 1 விக்கெட் மட்டுமே எடுத்தார். அவரின் இந்த செயல்பாடுகள் டெல்லி அணியின் வெற்றிக்காக உதவவில்லை என்பதால் அந்த சீசனுடன் டெல்லி அணியும் அவரை கழட்டி விட்டது.

- Advertisement -

2. தினேஷ் கார்த்திக் (2014) : ஐபிஎல் தொடர் துவங்கிய முதல் 3 சீசன்களில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக தமிழகத்தின் நட்சத்திர வீரர் தினேஷ் கார்த்திக் விளையாடினார். அதன்பின் கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 12.50 கோடிகள் என்ற மிகப்பெரிய தொகைக்கு டெல்லி அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஏனென்றால் அதற்கு முந்தைய வருடம் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தினேஷ் கார்த்திக் அபாரமாக செயல்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதை தொடர்ந்து நடந்த ஐபிஎல் 2014 தொடரில் 14 இனிங்க்ஸ்களில் விளையாடிய தினேஷ் கார்த்திக் 325 ரன்களை 23.21 என்ற சுமாரான சராசரியில் மட்டுமே எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

dinesh-karthik-bcci

3. ஜெயதேவ் உனட்கட் (2018) : கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் புனே அணிக்காக விளையாடிய இளம் வீரர் ஜெயதேவ் உனட்கட் அந்த சீசனில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்ததுடன் மிகச் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதன் காரணமாக 2018 ஆம் ஆண்டு தடையில் இருந்து மீட்டு வந்த சென்னை அணி அவரை வாங்க விரும்பியது. அதற்கு போட்டியாக பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் மோதியதால் அவரின் விலை 11 கோடி வரை எகிறியது. அப்போது திடீரென உள்ளே புகுந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை 11.50 கோடிகளுக்கு வெற்றிகரமாக ஒப்பந்தம் செய்தது.

unadkat

இறுதியில் ஐபிஎல் 2018 சீசனில் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்ட வீரராக அவர் சாதனை படைத்தார். ஆனால் அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் பந்துவீசிய அவர் வெறும் 11 விக்கெட்டுகளை 9.65 என்ற எக்கனாமியில் எடுத்து சுமாராக விளையாடினார்.

4. கெளதம் கம்பிர் (2011): இந்தியாவிற்காக உலக கோப்பை பைனலில் அபாரமாக செயல்பட்ட நட்சத்திர வீரர் கௌதம் கம்பீர் கடந்த 2011ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் ஏலத்தில் 11.04 கோடிகளுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த சமயத்தில் இந்த 11 கோடிகளால் ஐபிஎல் ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு ஒப்பந்தமான வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

gautam

அதன்பின் நடந்த ஐபிஎல் தொடரில் 15 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய கம்பீர் அதில் 378 ரன்களை 34.36 என்ற சராசரியில் எடுத்து மிகவும் மோசமாக செயல்படாமல் சுமாராக மட்டுமே செயல்பட்டார். இருப்பினும் அதற்கு அடுத்த வருடம் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்ற அவர் 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் அந்த அணிக்காக கோப்பையை பெற்றுக் கொடுத்து அசத்தினார்.

Advertisement