- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் இந்த 4 வீரர்களுக்கு இனி வாய்ப்பில்லையா..?

இந்தியாவில் பல இளம்வீரர்கள் ஐபிஎல் போட்டிகள் மற்றும் ரஞ்சி ட்ரோபி போன்ற போட்டிகள் மூலம் தங்களது திறமையை வெளிக்கொணர்வதால் சர்வதேச ஒருநாள் போட்டியில் இனிமேல் களம்காண வாய்ப்பில்லாமல் போகும் நான்கு இந்தியா வீரர்களை பற்றி காண்போம் .

இளம் வீரர்களின் ஆட்டத்திறனால் வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலை இப்போதுள்ள அணி வீரர்களுக்கு கூட ஏற்படலாம்

- Advertisement -

1)முரளிவிஜய்: சமீபகாலமாக முரளி விஜயின் ஆட்டத்திறன் மங்கிவருவதால் அவரை இந்தியஅணி புறக்கணித்து வருகிறது . மேலும் அவரை ஒரு டெஸ்ட் பேட்ஸ்மனாகவே இந்தியஅணி தக்கவைத்துள்ளது எனவே இனி அவர் இந்தியா ஒரு நாள் அணியில் இடம்பிடிப்பது கடினமே.

2)இஷாந்த் சர்மா: இவரது இளம் வயதில் அயல்நாட்டு மண்ணில் சிறப்பாக பந்து வீசி அன்னவரது கவனத்தயும் இவர் ஈர்த்தார் .ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற அயல்நாட்டு மண்ணில் சிறப்பாக செயல்பட்டவர் இவரும் புதிய வேகப்பந்து வீச்சாளர்களின் வருகையாலும் பிட்னெஸ் பிரச்சனைகளில் அடிக்கடி சிரமப்படுவதாலும் மீண்டும் ஒருநாள் போட்டிக்கு திரும்புவது இயலாததே.

- Advertisement -

3)அஸ்வின்: தனது சிறப்பான சுழற்பந்து வீசினால் குறுகிய காலத்திலே பல சாதனைகளை தன்வசப்படுத்தியவர் அஸ்வின் .அனால் தற்போது உள்ள சாஹல் மற்றும் குலதீப் யாதவ் ஆகியோர் இவரை விட இளம்வயதினர் என்பதால் இவருக்கு குறைந்த அளவிலான வாய்ப்புகளே கிடைப்பதால் அடுத்தஉலககோப்பை என்பது வெறும் கனவே.

4)பார்திவ் பட்டேல்: மிக இளம் வயதில் இந்தியா அணிக்கு தேர்வானாலும் இப்போதுவரை நிரந்தர இடத்திற்கு போராடி வருகிறார் .

கிட்டத்தட்ட 20ஆண்டுகலாக விளையாடி வரும் இவரும் சீனியர் ஆகி விட்டதால் ஓய்வினை எதிர்நோக்கி உள்ளார் . ராகுல் , ரிஷப் பாண்ட் போன்ற விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேன்கள் தற்போதைய அணியில் உள்ளதால் அவர்களுக்கே அதிக வாய்ப்பு கிடைக்கும்.

- Advertisement -