வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் என மூன்று வகையான கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கான டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகள் ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பயிற்சி போட்டியில் விளையாடி வருகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு தொடர்களுக்கு அடுத்து நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை நேற்று இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன்படி ஹார்டிக் பாண்டியா தலைமையிலான பதினைந்து பேர் கொண்ட இந்த அணியில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு முற்றிலும் இளம் வீரர்களைக் கொண்டே இந்த அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்காக புதிய அணியை தயார் செய்ய வேண்டும் என்கிற நோக்கில் இந்த அணி அறிவிக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் நான்கு முன்னணி வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இடம் பிடித்துள்ள அந்த நான்கு சீனியர் வீரர்கள் டி20 போட்டிகளில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் முறையாக ஓய்வு வழங்கப்பட்ட நான்கு வீரர்களை இந்த பதிவில் காணலாம்.
1) ரோஹித் சர்மா : இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா தற்போது டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியை வழிநடத்தினாலும் அவரது பணிச்சுமை காரணமாக இந்த டி20 தொடரில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
2) விராட் கோலி : அண்மையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் ஓரளவு சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் தொடரின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள அவருக்கும் டி20 போட்டிகளின் போது ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : காயமடைஞ்சது குத்தமா? இந்தியாவுக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது ரொம்ப கஷ்டம்னு தெரியும் – நட்சதிதிர வீரர் சோகமான பேட்டி
3) ரவீந்திர ஜடேஜா : இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணியில் இடம் பிடித்திருந்த ஜடேஜா கடைசி போட்டியில் குஜராத் அணியை வீழ்த்துவதற்கு முக்கிய பங்காற்றியிருந்தார். அதோடு அவர் தொடர்ச்சியாக தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மட்டும் டெஸ்ட் என தொடர்ச்சியாக பங்கேற்று விளையாடுவதால் அவருக்கும் இந்த டி20 தொடரில் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
4) ஷர்துல் தாகூர் : இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக தற்போது முன்னேறி வரும் ஷர்துல் தாகூருக்கும் இந்த வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.