ரிட்டயர்டு ஆன பிறகு திரைப்படத்தில் நடித்துள்ள 4 இந்திய கிரிக்கெட் வீரர்கள் – லிஸ்ட் இதோ

- Advertisement -

இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களது ஓய்வு காலம் வரைதான் கிரிக்கெட் விளையாடி உள்ளனர். அதன் பின்னர் வேறு வேலை செய்ய பல நூற்றுக்கணக்கான வீரர்கள் சென்றுள்ளனர். அப்படி வேறு வேலையாகச் சென்று திரைப்படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள் பற்றி தற்போது பார்ப்போம்.

ajay jdeja
அஜய் ஜடேஜா :

- Advertisement -

90களில் இந்தியாவின் மிக முக்கிய வீரராக இருந்தார் ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார் 2003 ஆம் ஆண்டு ‘Khel – No Ordinary Game’ என்ற படத்தில் சன்னி தியோல் மற்றும் சுனில் ஷெட்டி ஆகியோர் நடித்து இருக்கிறார் அந்த படம் மெகா ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

சந்தீப் பாட்டீல் :

இவர் முன்னாள் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் ஆவார். 1985 ஆம் ஆண்டு இவர் ‘Kabhi Ajnabi The’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் இவருடைய சக வீரரான சயது கிர்மானியுடன் நடித்திருக்கிறார். 1893 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பையை வென்ற இரண்டு வருடத்தில் இந்த படம் வெளியானதால் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

kambli

வினோத் காம்ப்ளி :

சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பரான இவர் 90களில் பெரிய வீரராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி இவரது கிரிக்கெட் வாழ்க்கை பாழாய்ப் போனது. அதன் பின்னர் ‘Annarth’ என்ற ப்டத்தில் சுனில் ஷெட்டி மற்றும் சஞ்சய் தத் ஆகியோருடன் நடித்திருந்தார்

sadgopan-ramesh

சடகோபன் ரமேஷ் :

இந்திய அணிக்காக 19 டெஸ்ட் போட்டிகளிலும் 24 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். இரண்டு விதமான போட்டிகளிலும் சேர்த்து கிட்டத்தட்ட 2000 ரன்களும் 2 சதங்களும் 14 அரை சதங்களும் அடித்திருக்கிறார் .கடைசியாக 2001-ம் ஆண்டு இந்திய அணிக்காக ஆடினார். அதன்பின்னர் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார் 2008 ஆம் ஆண்டு வெளியான சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் ஜெயம் ரவிக்கு அண்ணனாக நடித்திருப்பார். மேலும் ‘போட்டா போட்டி’ என்ற படத்தில் ஒரு முழுநேர கதாநாயகனாகவே நடித்திருப்பார் சடகோபன் ரமேஷ்.

Advertisement