சன் ரைசர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தாலும் பெஞ்சிலேயே அமரபோகும் 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

srh
- Advertisement -

நாளை ஏப்ரல் 9ஆம் தேதி 14வது ஐபிஎல் லீக் தொடர் தொடங்குகிறது. முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோத இருக்கின்றன. நாளை தொடங்கி மே 30ம் தேதி வரை ஐபிஎல் லீக் தொடர் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிகளும் தங்களை சிறந்த வகையில் தயார்படுத்திக் கொண்டு இருக்கும் வேளையில், இப்பொழுதே ஒவ்வொரு அணிகளும் எந்த வீரர்களை தொடர் முழுவதும் விளையாட வைப்பது என்கிற தேர்வை செய்து செய்துகொண்டு வருகின்றனர்.

Shreevats-Goswami

அந்தவகையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் தொடரை நல்ல வகையில் மேற்கொள்ள தீவிர பயிற்சியையும், வியூகங்களை வகுத்து வருகின்றது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் ஆட வாய்ப்பு கிடைக்காமல் இந்த தொடர் முழுவதும் பெஞ்சில் உட்கார போகும் 3 வீரர்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

ஸ்ரிவட்ஸ் கோஸ்வாமி :

அண்டர் 19 உலக கோப்பையில் இந்திய அணிக்காக விளையாடியவர் கோஸ்வாமி ஆவார். விராட் கோலி தலைமையில் இந்திய அணிக்காக விளையாடிய கோஸ்வாமி மிக நல்ல முறையில் விளையாடி ஐபிஎல் அணிகளின் கவனத்தைப் பெற்றார். பின்னர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக மீண்டும் விராட் கோலி தலைமையில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார்.

- Advertisement -

அதன் பின்னர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய கோஸ்வாமி, இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தாத கோஸ்வமி இதுவரை தனது கேரியரில் மொத்தமாக 293 ரன்கள் தான் அடித்துள்ளார். ஆனால் கோஸ்வாமிக்கும் அடுத்தடுத்து சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை அதன் காரணமாகவே அவரால் அதிக ரன்கள் குவிக்க முடியவில்லை என்பது என்பது கவலைக்குரிய விஷயமாகும். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கோஸ்வாமி, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் விளையாட வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்சில் உட்கார போகிறார். ஏனெனில் ஏற்கனவே பேர்ஸ்டோ மற்றும் சாஹா இருக்கையில் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது மிக மிக குறைவு.

basil

பேசில் தம்பி :

- Advertisement -

சையது முஷ்டாக் அலி தொடரில் ஒவ்வொரு பந்தையும் 140 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய தம்பிக்கு குஜராத்தி லயன்ஸ் அணியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு எமர்ஜிங் பிளேயருக்கான விருதைப் பெற்ற தம்பி அதன் பின்னர் 2018 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாட ஆரம்பித்தார். ஹைதராபாத் அணிக்காக விளையாடிய முதல் தொடரிலேயே ஒரு போட்டியில் 70 ரன்கள் கொடுத்து, அனைவரையும் ஏமாற்றினார். இந்திய பந்துவீச்சாளர்கள் மத்தியில் நாலு ஓவருக்கு 70 ரன்கள் கொடுத்த ஒரே வீரர் தம்பிதான்.

அதன்பின்னர் 2019-ம் ஆண்டு ம் அதிக ரன்களைக் கொடுத்து வந்த தம்பி சென்ற வருடமும் வாய்ப்பு கிடைத்த ஒரு போட்டியில் 4 ஒவருக்கு 46 ரன்கள் கொடுத்து மறுபடியும் ஏமாற்றினார் அதன் காரணமாக சென்ற வருடம் அடுத்தடுத்த போட்டிகளில் அவர் ஐதராபாத் அணி விளையாட வைக்க வில்லை. இந்த ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்காக ஏற்கனவே புவனேஸ்வர் குமார், நடராஜன், இருக்கையில் இந்த வருடமும் அவருக்கு ஹைதராபாத் அணி நிர்வாகம் எந்தவித வாய்ப்பும் வழங்காது என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

kaul

சித்தார்த் கவுல் :

2018 ஆம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாட ஆரம்பித்த சித்தார்த் அந்த தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 21 விக்கெட்டுகளை எடுத்தார். வில்லியம்சன் தலைமையில் இறுதிவரை ஹைதராபாத் அணி செல்ல இவரும் ஒரு வகையில் சிறப்பாக பங்களித்தார். ஆனால் அதற்கு அடுத்த வருடம் சித்தார்த் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. 7 போட்டிகளில் விளையாடிய சித்தார்த் வெறும் 6 விக்கெட்டுகளை மட்டுமே கைப்பற்றினார். அதன் பின்னர் சென்ற வருடம் ஒரே ஒரு போட்டியில் மட்டும் விளையாடிய சித்தார் வேறு எந்த வாய்ப்பும் இன்றி தொடர் முழுவதும் பெஞ்சில் உட்கார்ந்து இருந்தார்.

எனவே இந்த வருடமும் அவர் எந்த ஒரு வாய்ப்பும் இன்றி தொடர் முழுவதும் பெஞ்சில் உட்கார வைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

Advertisement