சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓராண்டிற்கு தடை விதிக்கப்பட்ட 3 இலங்கை வீரர்கள் – எதற்கு தெரியுமா ?

sl
- Advertisement -

இந்தியாவின் இரண்டாவது சர்வதேச கிரிக்கெட் அணியானது அடுத்த மாதம் இலங்கை சென்று, அங்கு மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவிற்கு எதிரான இந்த தொடர்களில் இருந்து இலங்கை அணியின் முக்கியமான மூன்று வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்திற்கு சென்றுள்ள இலங்கை அணியானது அந்த அணிக்கு எதிராக முதலில் நடைபெற்ற டி20 தொடரில் தோல்வியைத் தழுவியது.

engvssl

- Advertisement -

அதற்கடுத்து நடைபெற இருந்த ஒரு நாள் தொடருக்கு முன்பாக இலங்கை அணியின் துணைக் கேப்டனான குசால் மெண்டிஸ், ஓப்பனாரான தனுஸ்கா குணதிலகா மற்றும் விக்கெட் கீப்பரான நிரோஷன் டிக்வெல்லா ஆகியோர் கடுமையான பயோ பபுள் விதிமுறையில் இருந்து வெளியே வந்து, சுற்றித் திரிந்தது சிசிடிவி கேமராவில் பதிவாகியது. இணையத்தில் வைராலான அந்த வீடியோவில் அவர்கள் புகைப்பிடித்ததும் அம்பலமானதால், அவர்களின் மேல் நடவடிக்கை எடுத்த இலங்கை கிரிக்கெட் நிர்வாகம் அவர்களை உடனடியாக நாடு திரும்பும்படி உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து நேற்று அந்த மூவரும் தங்களது சொந்த நாட்டிற்கு திரும்பியுள்ளனர். பயோ பபுள் விதிமுறையில் இருந்து வெளியே வந்தது எப்படி என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் இந்தியாவிற்கு எதிரான தொடரில் இருந்தும் அந்த மூவரும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.

gu

அந்த மூவரின் செயல்பாடுகளும் இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கும் இலங்கை அணியை இதுபோன்ற வீரர்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என அந்நாட்டு முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் ரசீகர்களும் கோரிக்கை வைத்துவரும் நிலையில், அந்த மூவருக்கும் ஓராண்டு காலம் சர்வதேச போட்டிகளில் விளையாட தடைவிதிக்கப்படும் என்று அந்நாட்டு கிரக்கெட் நிர்வாகத்தின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

banned

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி அடுத்த மாதம் 13ஆம் தேதி கொழும்பு மைதானத்தில் நடைபெற இருக்கின்றது.

Advertisement